01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்
பொருளியல்

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் இது வியாபாரிகளுக்குரியது, வணிகர்களுக்குரியது, பணக்காரர்களுக்குரியது என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. இது ஏழைகள், கூலித் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளக்குவது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

உலகத்தில் பொருளாதாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சிலர் செல்வங்களைத் திரட்டுவதால், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதால் ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையை அடைய முடியாதென்று நினைக்கின்றார்கள். இறைவனுடைய திருப்தியையும் அன்பையும் பெற வேண்டுமென்றால் மறுமையில் மோட்சம் அடைய வேண்டுமென்றால் உலகத்திலுள்ள வசதி வாய்ப்புக்களை விட்டுவிட்டு காடே! செடியே! என்று செல்ல வேண்டும். அங்கு சென்று இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டு இறைவனுக்காக வாழ வேணடும் அதுதான் உயர்ந்த நிலையென்று நினைக்கக் கூடியவர்களும் பல்வேறு மதங்களில் காணப்படுகின்றார்கள்.

காசு, பணங்களை வைத்திருக்கக் கூடியவர்களும் கூட இந்தத் துறவிகளைப் பற்றி “நாம் இவர்களுக்கு அடுத்துத் தான்; அவர்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள், மகான்கள், தியாகிகள்’ என்று நினைக்கின்றார்கள்.

எல்லா மதங்களிலும் காசு, பணம், சொத்து சுகங்களை விட்டு விலகினால் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் மார்க்கத்தை அறியாத சூஃபியாக்களும் காட்டுக்குச் சென்று தவம் இருப்பது நல்லது; ஊர் உலகத்தை விட்டு ஒதுங்கியிருப்பது தான் சிறந்ததென்று நினைக்கின்றனர்

இரண்டாவது பிரிவினர், முழுக்க முழுக்க வாழ்வு என்பது பொருளாதாரத்துக்காகத் தான் என நினைக்கின்றனர். மறுமை என்பது கிடையாது; நாம் இந்த உலகத்தில் எவ்வளவு வாழ முடியுமோ அவ்வளவு வாழ வேண்டும்; எவ்வளவு சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும் என்று அதற்கு ஒரு நெறிமுறை வைக்காமல் பொருள் முதல் வாதம் என்ற அடிப்படையில் வாழ்கின்றனர். உலகமென்றால் பொருளாதாரம் தான். காசு தான் எல்லாம். காசு தான் கடவுள். காசு இருந்தால் கடவுள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடிய சிலரும் இருக்கின்றார்கள்.

காசு தான் எல்லாம் என்று ஒரு கருத்தும், காசே கூடாதென்று மற்றுமொரு கருத்தும் மக்களுக்கு மத்தியிலும், மதங்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது.

இஸ்லாம், காசு பணம் அறவே கூடாது என்று சொல்கிறதா? அல்லது அதற்கு வரம்புகளை வைத்திருக்கின்றதா? அல்லது அனைத்தையும் தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறதா? அல்லது பிச்சைக்காரனைப் போன்று இருக்கச் சொல்கிறதா? இறைவனுக்காகக் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறதா? என்று இஸ்லாத்தின் பொருளாதார நிலையைப் பார்ப்போம்.

இஸ்லாம் எந்தக் கொள்கையைச் சொன்னாலும் அதில் நடுநிலையைப் பேணுகின்றது. தவ்ஹீதை எடுத்துக் கொண்டால் அதுவும் நடுநிலை தான். கடவுள் இல்லை என்று சொல்லாமலும், காண்பவை எல்லாம் கடவுள் என்று சொல்லாமலும் இரண்டிற்கும் மத்தியில் கடவுள் ஒன்றே ஒன்று தான் என்று இஸ்லாம் கூறுகிறது. எந்த சட்டத்தைச் எடுத்துக் கெண்டாலும் அதில் இஸ்லாம் நடுநிலை பேணுவதைக் காண்கிறோம்.

குர்ஆன், ஹதீஸில் பொருளாதாரம்

இஸ்லாமிய மார்க்கத்தில் பொருளாதாரம் இல்லையென்றால் ஒருவன் முஸ்லிமாக வாழ முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் எல்லாம் வணக்கங்களும் பொருளாதாரத்தைத் தொடர்பு படுத்தியே அமைந்துள்ளன.

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று ஜகாத். இது கடமையாக இருப்பதால் பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். அப்படியானால் பொருளாதாரம் கூடாதென்றால் இந்தக் கடமையைச் செய்ய முடியாது. ஆகவே பொருளாதாரத்தை வைத்திருப்பது தவறு கிடையாது. காசு பணத்தைச் சம்பாதித்து அதில் கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவருக்குக் கொடு என்று கூறுவதால் பொருளாதாரம் என்பது இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது.
இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையை மக்கா மதீனாவிலுள்ளவர்கள் செய்வதாக இருந்தால் காசு பணம் தேவையில்லை. ஆனால் வெகு தொலைவில் வசிக்கக் கூடிய நாம் அங்கு செல்வதற்கு வசதி வாய்ப்புக்கள் தேவை.
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

(அல்குர்ஆன்: 3:97)

இந்த வசனத்தில் நம்முடைய செலவுகள் போக, அதாவது உணவு, உடை, குடும்பச் செலவு, குழந்தைகளுக்கான செலவு போக மீதமிருந்தால் ஹஜ் செய்வது கடமையென்று அல்லாஹ் குறிப்பிடுவதிலிருந்து பொருளாதாரம் தேவையென்று விளங்குகின்றது.

தான தர்மம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்றது. இதைச் செய்வதால் பல சிறப்புக்களை அடைய முடியும். மறுமை வெற்றியைக் கூட அடைய முடியுமென்று குர்ஆன், ஹதீஸில் அதிகமான இடங்களில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக,(அல்குர்ஆன்: 2:261)வசனத்தில், ஒன்றை தர்மம் செய்தால் அதற்குப் பதிலாக 700 மடங்கு நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:261)

ஒன்றுக்கு 700 நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நினைத்தால் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும். எனவே பொருளாதாரத்தைத் தேடுவது வெறுக்கத்தக்கது கிடையாது என்பது விளங்குகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 2:265)

ஒன்றுக்கு 700 மடங்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த விதையைக் கடலிலோ, உப்பு மண்ணிலோ, வறண்டு போன நிலத்திலோ போட்டால் அது முளைக்காது. அப்படியானால் விதைக்கின்ற நிலமும் நன்றாக இருக்க வேண்டும். நல்ல காரியத்திற்குச் செலவு செய்தால், அது மேட்டுப்பாங்கான இடங்களில் விதைக்கப்பட்ட பயிர் முளைப்பதைப் போன்று இருக்கும். அதாவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் எப்பொழுதும் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருப்பதால் அங்கு மழை பெய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அங்கு மழை பெய்தால் இரட்டிப்பாக விளையும். மற்ற இடங்களில் பயிர் முளைப்பதாக இருந்தால் மழை பெய்வது அவசியம். அதனால் தான் அல்லாஹ் நல்ல விஷயத்திற்குச் செலவிடும் பொருளாதாரத்தை, மேட்டுப்பாங்கான இடத்தில் பயிரிடுவதற்கு உதாரணம் காட்டுகிறான்

நரகத்திலிருந்து தப்பிக்க தர்மம் செய்ய வேண்டும்

கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன். துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள். அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன். இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

(அல்குர்ஆன்: 92:14),15,16,17,18)

தவறு செய்தவன் நரகப் படுகுழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்கு ஒரு கேடயமாக தர்மம் அமைகின்றது என்பதை அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான். இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்கா வரை காவலரின்றிச் செல்லும் போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்க மாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவர் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்க மாட்டான். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்க அவர் “ஆம்‘ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்டதும் அவர் “ஆம்‘ என்று கூறி விட்டுத் தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம்பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.

(புகாரி: 1413, 6563)

ஒரு சிறு பொருளையாவது தர்மம் செய்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதிலிருந்து, பொருளாதாரத்தைத் தேடுவது அவசியம் என்றும், அதை திரட்டுவது வெறுக்கத்தக்கதல்ல என்றும் விளங்குகின்றது.

தர்மத்தின் சிறப்பு

தர்மம் செய்வதால் அல்லாஹ்விடம் மிகப் பெரும் நன்மையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஓர் ஒட்டகத்தைக் கொண்டு வந்து, “இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 3845)

தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து அற்பமான ஒரு பொருளை தர்மம் செய்தால் அல்லாஹ் அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டு பன்மடங்காகப் பெருக்கி நன்மையை வழங்குகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 1410)

அற்பமான மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் அதை அல்லாஹ் தனது வலது கையால் எடுத்து வளர்க்கின்றான் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நாம் செய்யும் தர்மத்தை இறைவன் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறான்.

அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான்

ஓர் அடியான் வேணடுமானால் இன்னொரு அடியானை சிரிக்க வைக்கலாம். ஆனால் அகிலத்தைப் படைத்த ரப்புல் ஆலமீனை சிரிக்க வைக்க முடியுமா? அடியான் செய்யும் தர்மத்தைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் (விருந்தாüயாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவüப்பதற்காகத்) தம் மனைவிமார்கüடம் சொல்-யனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்கüடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலüத்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?” … அல்லது “இவருக்கு விருந்தüப்பவர் யார்?’ ‘… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், “நான் (விருந்தüக்கிறேன்)” என்று சொல்- அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாüயைக் கண்ணியப்படுத்து” என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகüன் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கை சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாüயான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் … அல்லது வியப்படைந்தான்” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், “தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்” என்னும் (59:9) வசனத்தை அருüனான்.

(புகாரி: 3798)

அர்ஷுடைய நிழல் கிடைக்கும்

நாம் அனைவரும் இறந்ததற்குப் பின்னால் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவோம். அன்றைய தினம் மறுமையில் விசாரணைக்காகக் காத்திருப்போம். அந்த ஒரு நாளின் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். (பார்க்க:(அல்குர்ஆன்: 70:4)

நம்முடைய தலைக்கு அருகாமையில் சூரியன் கொணடு வரப்படும். அன்றைய தினம் சூரியனுடைய உஷ்ணத்தை நம்மால் தாங்க முடியாது. அப்போது அல்லாஹ் அவனுடைய அர்ஷ் என்ற சிம்மாசனத்திற்குக் கீழ் ஏழு கூட்டத்தினருக்கு நிழலைத் தருவான், அவனுடைய சிம்மாசனம் வானம் பூமியை உள்ளடக்கியிருக்கும் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறியிருக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாüல் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

நீதி மிக்க ஆட்சியாளர்.
இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர்.
அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 660)

மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷைத் தவிர வேறு எந்த நிழலும் மனிதன் பெற்றுக் கொள்ள மாட்டான். வலது கையால் செய்த தர்மம் இடது கைக்குத் தெரியாமல், அதாவது மக்களுக்காக இல்லாமலும் பெருமைக்காக இல்லாமலும் அல்லாஹ்வுக்காக ரகசியமாகக் கொடுத்தவனுக்கு மாபெரும் நிழல் கிடைக்கும் என்று கூறுவதிலிருந்து தர்மம் செய்வது எவ்வளவு முக்கியமென்று விளங்குகின்றது.

நன்மைகளை அதிகமாகப் பெற முடியும்

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்கüடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்கüடையே வாழ்கிறீர்களோ அவர்கüல் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர! (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்து-ல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்கüல் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து-ல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூற வேண்டும்” என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்” என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 843)

காசு வைத்திருப்பவர்கள் தர்மம் செய்வதன் மூலம் ஏழைகளை விட அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஏழைகள் புரிந்து வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிட்டனர் என்பதை நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.