ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?
ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?
ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை.
ஜஃபர் (ரலி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு சமைத்து கொடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பபவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல் : திர்மிதீ (919)
ஒரு வீட்டில் யாரேனும் இறந்து விட்டால் அவ்வீட்டிலுள்ளவர்கள் சோகத்தில் இருப்பார்கள். இந்நிலையில் அவர்களுக்கு அண்டை வீட்டாரோ அல்லது உறவினர்களோ உணவு சமைத்து கொடுக்குமாறு மார்க்கம் கூறுகிறது.
ஆனால் இறந்தவருடைய வீட்டிலேயே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு உறவினர்கள் அண்டை வீட்டார்கள் போய் சாப்பிடும் நிலை மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு முரணானதும் மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
எந்தத் தேவைக்காகவும் அடுப்பெரிக்கக் கூடாது என்ற அர்த்தத்தில் இப்படி கூறினால் அது தவறாகும். மூட நம்பிக்கையாகும்.