08) உஸாமா பின் ஜைத் (ரலி)
1) நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார் (புகாரி: 3730) ➚
2) நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள். (புகாரி: 3730) ➚
3) இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள் அனுப்பியிருந்தார்கள். (புகாரி: 3730) ➚
4) மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்க இவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது. (புகாரி: 4304) ➚
5) நபி (ஸல்) அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள் (புகாரி: 2988) ➚
6) நபியவர்கள் இவர் சிறுவராக இருக்கும் போது இவரை ஒரு தொடையிலும் ஹசன் (ரலி) அவர்களை மறு தொடையிலும் வைத்து “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள். (புகாரி: 6003) ➚
7) மக்கா வெற்றியின் போது நபியவர்களுடன் கஃபாவினுல் நுழைந்தவர் (புகாரி: 2988) ➚
8 ) மக்கா வெற்றியின் போது இவரை நபிகளாரின் ஒட்டகத்தின் மேல் ஏற்றிச் சென்றார்கள் (புகாரி: 2988) ➚
9) ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறிய நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் நாங்கள் நல்லதைத் தவிர வேறதையும் அறியமாட்டோம் என்று சொன்னவர். (புகாரி: 2637) ➚
10) இவருடைய வீட்டில் நபிகளாரின் மனைவி ஸபிய்யா (ரலி) அவர்கள் அறை இருந்தது (புகாரி: 2038) ➚
➖➖➖➖➖➖➖➖➖➖➖