01) காலித் பின் வலீத் (ரலி)
1 ) பனூ ஜதீமா குலத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக இவரை நபிகளார் அனுப்பி வைத்தார்கள்? (புகாரி: 7189) ➚
2 ) மூத்தா போரில் இவர் தலைமை ஏற்றபோது தான் அல்லாஹ் வெற்றி தந்தான்? (புகாரி: 1246) ➚
3 ) நபிகளார் முன்னிலையில் உடும்புக் கறியை சாப்பிட்டவர்? (புகாரி: 5400) ➚
4 ) நபிகளாரின் மனைவி மைமூனா ( ரலி ) , இவர்களின் சிறிய தாயார்? (புகாரி: 5391) ➚
5 ) அல்லாஹ்வின் வாளில் ஒரு வாள் என்று நபிகளாரல் புகழ்ந்து கூறப்பட்டவர்? (புகாரி: 5391) ➚
6 ) கவசங்களையும் , போர்கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கியவர்? (புகாரி: 1468) ➚
7 ) எதிரிகளிடம் சிக்கிக் கொண்ட இப்னு உமர் ( ரலி ) அவர்களின் குதிரை மீட்டு தந்தவர்? (புகாரி: 3068) ➚
8 ) மூத்தா போரில் கடுமையாக போர் புரிந்ததால் இவரின் 9 வாள்கள் உடைந்தன? (புகாரி: 4266) ➚
9 ) அபூ பக்ர்ஸ் ( ரலி ) அவர்கள் , இவரைத் தான் பைசாந்தியர்களுக்கு எதிரான போரில் படைத் தலைவராக அனுப்பிவைத்தார்கள்? (புகாரி: 3069) ➚
10 ) ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் நபிகளாரை தாக்க இவர் தலைமையில் தான் குதிரைப்படை புறப்பட்டது? (புகாரி: 2731) ➚
➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖