22) விமர்சனம் 41
ஈஸா அலைஹிவஸல்லம் என்ற சொல்லிலிருந்தே இஸ்லாம் என்பது பிறந்தது என்கிறார் ஜெபமணி.
ஜெகன் மேரி என்பதிலிருந்து தான் ஜெபமணி பிறந்தது என்றும், பார்த்து திருடுபவர் என்பது தான் பாதிரியார் என்று திரிந்தது என்றும், முருகவேல் என்பதே சாமுவேலானது என்றும் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே அளவு முட்டாள்தனமானது ஜெபமணியின் இந்த அரிய கண்டுபிடிப்பு.
இறுதி விமர்சனம்
தனது நூல் நெடுகிலும் இயேசு பற்றி பைபிள் கூறும் வசனங்களை அள்ளித் தெளித்து அவரைக் கடவுளாக்க முயன்றுள்ளார். பைபிளை வேதமென நம்பியவர்கள் தான் இதில் ஏமாற முடியுமே தவிர முஸ்லிம்கள் அல்ல.
ஆனால் அவர் அள்ளித் தெளித்தது பைபிள் வசனங்கள் என்பதால் பைபிள் வசனங்கள் கொண்டே அவர் எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்களை மறுப்போம்.
1) அப்போது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஏசு க யாலை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
இன்னொருவரால் ஞானஸ்நானம் பெற்றவர் தான் தேவ மகனாகப் பிறந்தாராம். அந்தோ பரிதாபம்
2) அப்பொழுது ஏசு அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வீராக என்று எழுதியிருக்கிறதே என்றார்
இறைவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் இயேசுவை ஆராதிப்பவர் ஜெபமணி உட்பட சாத்தான் என்கிறார் இயேசு.
3) சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான். அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று என்னப்படுவார்கள் என்றார் இயேசு
தேவனுடைய புத்திரர் என்ற பதம் அன்றைய வழக்கில் தேவனுடைய அடிமைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு இது சான்று. இயேசு மாத்திரம் தேவனின் புத்திரர் அல்ல. சமாதானம் பண்ணும் அனைவரும் தேவனின் புத்திரர்களே என்று இயேசுவே கூறுகிறார்.
இப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திராய் இருப்பீர்கள் என்றார் இயேசு..
4) அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போல் இருக்க வேண்டாம். மனுஷர் காணும் படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதகளின் சந்திகளில் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.
ஜெபமணி போன்ற பாதிரிமார்களுக்கு சொல்லப்பட்ட இந்த போதனையை அலட்சியம் செய்வதேன்?
5) அவர்களைப் போல் நீங்கள் செய்யாதிருங்கள் உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்வதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறார்.
பிதாவிடம் அதாவது கர்த்தராகிய கடவுளிடமே பிரார்த்திக்க வேண்டும் என்று ஏசு கூறியுள்ளார். தன்னிடம் பிரார்த்திக்க அல்ல.
6) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது என்றார் ஏசு
ஜெபமணி போன்றோர் மூன்று எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய புறப்பட்டதேன்?
7) ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை அறிந்திருக்கும் போது பரலோகத்தி ருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
இறைவனிடம் மட்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் ஏசு.
8) பரலோகத்தி லிருக்கிற என் பிதாவின் சித்தாந்தத்தின் படி செய்கிறவனே பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே தீர்க்கதரிசினம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அனேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செயகக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்
ஏசு தேவ குமாரன் அல்ல என்பதற்கும் ஏசுவைக் கர்த்தனாக்கும் ஜெபமணி போன்றோர் அந்நாளில் ஏசுவால் கைவிடப்படுவார்கள் என்பதற்கும், இவர்களெல்லாம் அக்கிரமக்காரர்கள் என்பதற்கும் இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?
ஜெபமணியாரே அந்நாள் பற்றிய நம்பிக்கையும் தேவனைப் பற்றிய பயமும் உமக்கு இருந்தால் ஏசுவின் இந்தப் போதனையை இன்றளவும் நடைமுறைப்படுத்தும் இஸ்லாத்தின் பால் திரும்புவீரா?
1) மனிதருடைய கற்பனைகளை உபதேஷங்களாகப் போதித்து வீணாய எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கத்தரிசி நன்றாய் சொல்லியிருக்கிறான் என்றார்.
மனிதர்களின் கற்பனைகளைக் கலந்து வைத்துக் கொண்டு தான் ஏசுவைத் தேவகுமாரன் என்கிறார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
2) அதற்கு அவர் (ஏசு) நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?தேவன் ஒருவன் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார்
தன்னை நல்லவன் என்று கூறுவதற்கே சம்மதிக்காமல் அது கடவுளின் தனித்தன்னை என்று கூறியவரையா ஜெபமணியாரே தேவ குமாரன் என்று கூறிகிறீர்கள்.
11) அவருடைய சீஷர்கள் அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாதது தான் தேவனாலேயே எல்லாம் கூடும் என்றார்கள்.
இரட்சகன் இறைவன் மட்டுமே நான் அல்ல என்று இவ்வளவு தெளிவாக அறிவித்த பின்னரும் ஏசுவை இரட்சகர் என்று ஜெபமணியாரே கூறத் துணியலாகுமா?
12) ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
மறுமையில் இரட்சிப்பது இறைவனின் தனி உரிமை. தனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்று ஏசு பிரகடனம் செய்த பின்பும் ஏசு இரட்சிப்பார் என்று கூற முடியுமா?
இந்தக் கருத்தில் அனேக வசனங்கள் பைபிளில் காணப்படுகின்றன. மனிதக் கரங்களால் மாசு படுத்தப்படாமல் இன்றளவும் பைபிளில் எஞ்சி நிற்கின்ற உண்மையான ஏசுவின் போதனைகள் இவை.
ஜெபமணி எடுத்துக்காட்டும் பைபிள் வசனங்களின் கருத்துகளை இவ்வசனங்கள் அடியோடு மறுக்கின்றன. இரண்டும் நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். எதை உண்மை என்று ஏற்றாலும் பைபிளில் கலப்படம் உள்ளது என்று நிரூபணமாகும்.
எனவே ஜெபமணி தன் தவறான கிறித்தவக் கோட்பாட்டை விட்டு விலகி கலப்படமற்ற தூய வேதத்தைப் பெற்ற ஒரே இறைவனை மாத்திரமே வணங்கச் சொல்கின்ற தூய இஸ்லாத்தை தெரிந்தெடுக்குமாறு பரிந்துறை செய்கிறோம்.