29) இராக்கை நோக்கி இஸ்லாமியப் படை

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் கிறித்தவ சாம்ராஜ்யத்தை எதிர்த்துநடைபெற்ற முஃத்தா மற்றும் தபூக் யுத்தங்களைப் பற்றிக் கடந்த இதழில் கண்டோம்.
இதன் பின்னர் முஃத்தா போரில் ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி),அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவில் உள்ளபல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒருபடையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறைகூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள்குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரதுதந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின்மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவேஇருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார்.இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 3730)
இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவை அனுப்புகையில்அதற்கு விமர்சனம் கிளம்புகின்றது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மேற்கண்டவாறு பதிலளிக்கின்றார்கள். இது நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில்நடந்த நிகழ்ச்சியாகும்.
அந்தப் படை மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ஜுர்ஃப் என்ற இடத்தில்இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள். அவர்களது இறப்புச் செய்தியைக்கேட்டவுடன் படையில் இருந்தவர்கள் பின் தங்கி மதீனாவிற்கு வந்து விட்டனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதன் முதலில் நிறைவேற்றியதுஉஸாமா படையை அனுப்பி வைத்தது தான்.
உஸாமா தலைமையில் படையை அனுப்பி வைத்த காலகட்டத்தில் தான் மதீனாவைச்சுற்றியுள்ள அரபகப் பகுதிகளில் மத மாற்றப் புரட்சிகள் வெடிக்கத் துவங்கின. அவைஎரிமலையாக மாறிய கட்டத்தில் உஸாமாவின் படை போரை முடித்துத் திரும்பி வந்தது.வெற்றிகரமாகவே திரும்பி வந்தது.
இந்தக் கட்டத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் முழுப் பலத்தையும் போலிநபி கலகக் கூட்டங்களை அடக்குவதில் செலுத்தி, அல்லாஹ்வின் அருளால் அதில்மகத்தான வெற்றியும் கண்டார்கள். இப்படி அன்னாரது படைகள் வலப் பக்கமும்,இடப்பக்கமும் போலி நபிகளை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் காலம் ஹிஜிரி12ஆம் ஆண்டாகும். ஹாபிழ் இப்னு கஸீர் அவர்களின் கருத்துப்படி மத மாற்றத்திற்குஎதிராக நடந்த தலையாய போர் யமாமா போர். இந்தப் போர் ஹிஜிரி 11ல் துவங்கி 12ஆம்ஆண்டு நிறைவு பெறுகின்றது.
இதன் பின்னர் தான் பாரசீகத்தின் கையில் இருக்கும் இராக்கை நோக்கிச் செல்லுமாறுஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தளபதி, அல்லாஹ்வின் போர் வாள்காலித் பின் வலீதை அனுப்பி வைக்கிறார்கள்.

தளபதிக்கு தலைவர் பிறப்பித்த உத்தரவு

இராக்கை நோக்கிச் செல்கையில் தமது போர்ப் பணியை பாரசீக வளைகுடாவின் ஒருமூலையில் உள்ள உபுல்லா என்ற பகுதியிலிருந்து துவங்குமாறு ஆட்சித் தலைவர்அவர்கள், காலித் பின் வலீதைக் கேட்டுக் கொண்டார்கள். உபுல்லா என்பது அராபியக்கடற்கரையில், பாரசீக வளைகுடாவில் உள்ள துறைமுக ஊராகும். இங்குசிந்துவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வணிகக் கூட்டம் வந்து செல்லும்.
இங்கிருந்து தான் பாரசீக மன்னர் ஹுர்முஸ், அரபியர்களை தரை மார்க்கமாகவும்,இந்தியர்களை கடல் மார்க்கமாகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார். இதுஅரபியர்களுக்கு ஓர் ஆபத்தான பகுதியாக இருந்து வந்தது. எனவே இங்கிருந்து இராணுப்பணியைத் துவக்குமாறு காலித் பின் வலீதுக்கு அபூபக்ர் (ரலி) கட்டளையிட்டிருந்தார்கள்.
மக்களிடம் அன்பு காட்டும் படியும், அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்குமாறும்காலிதிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மக்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டால் சரி!இல்லையேல் அவர்களிடம் ஜிஸ்யா வரியைப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.தன்னுடைய படையில் சேருமாறு எவரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், மதம்மாறியவர் எவரிடமும் எந்த உதவியும் கோரக் கூடாது என்றும் அவர்கள் திருந்தி மீண்டும்இஸ்லாத்தில் இணைந்து இருந்தாலும் அவர்களிடம் உதவி கோரக் கூடாது என்றும் தமதுஉத்தரவில் அபூபக்ர் (ரலி) குறிப்பிட்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் அனைவரையும் தமது படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்கூறியிருந்தார்கள்.
இந்த உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு, படைத் தளபதி காலித் (ரலி) பாரசீகப் பேரரசுக்குஎதிரான தனது படையெடுப்பைத் துவங்குகின்றார்.
இராக் செல்லும் வழியில் பான்கியா, பாருஸ்மா, உல்லைஸ் என்று அழைக்கப்படும்சவாத் என்ற கிராமங்களில் காலித் தங்குகின்றார். ஜாபான் என்பவர் இவ்வூர்களின்ஆட்சியாளர் ஆவார்.
(வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் அவர்களின் கருத்துப்படி முஸ்லிம்கள், சுப்ஹ் நேரத்தில்இந்தக் கிராமங்களில் ஒரு பெருங்கூட்டத்தைத் தாக்கிக் கொன்றனர். இதன் பின்னர்)ஆயிரம் திர்ஹம் ஜிஸ்யா அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் படி ஜாபான் என்றஅந்த ஆட்சியாளருக்கும், படைத் தளபதி காலிதுக்கும் இடையில் உடன்படிக்கைகையெழுத்தானது. அவர்கள் தரப்பில் இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டவர் பஸ்பஹராபின் சலூபா என்பவர் ஆவார்.

ஹிராவை நோக்கி வீர நடை

பிறகு அங்கிருந்து காலித் பின் வலீத் ஹிராவுக்குச் செல்கின்றார். காலித், ஹிராவுக்குவந்தவுடன் அங்குள்ள பெரும்புள்ளிகள் கபீஸா பின் இயாஸ் என்ற ஆட்சியாளருடன்காலிதைச் சந்திக்க வருகின்றனர். நுஃமான் பின் அல்முன்திர் என்ற ஆட்சியாளருக்குப்பின் பாரசீக மன்னர் கிஸ்ராவால் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர் தான் கபீஸா பின்இயாஸ்.
அவர்களிடம் காலித் விடுத்த கனிவான செய்தி மற்றும் எச்சரிக்கை இதோ!
“அன்புடையீர்! உங்களை நான் அல்லாஹ்வின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் வரும்படி அழைக்கின்றேன். அந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் எனில், நீங்கள்முஸ்லிம்கள்! அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டத்தின் மூலம்) கிடைக்கும் பலன்கள்உங்களுக்கும் கிடைக்கும். அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டத்தின் மூலம்) கிடைக்கும்தண்டனைகள் உங்களுக்கும் கிடைக்கும். இதை ஏற்க மறுத்தால் இஸ்லாமிய அரசுக்குநீங்கள் வரி கட்ட வேண்டும். வரி கட்ட மறுத்தால் நான் ஒரு கூட்டத்தைக் கூட்டிவந்திருக்கின்றேன். அந்தக் கூட்டம் சாதாரணக் கூட்டமல்ல! சாகசக் கூட்டம்! அந்தக்கூட்டம் (உங்களைப் போல்) வாழ்வதற்குப் பேராசை கொண்ட கூட்டமல்ல! சாவதற்குப்பேராசை கொண்ட கூட்டம்! இந்தச் சரித்திரக் கூட்டத்துடன் அல்லாஹ் உங்களுக்கும்எங்களுக்கும் மத்தியில் ஒரு முடிவைத் தருகின்ற வரை போராடுவோம்”
இவ்வாறு இரும்புப் பாளங்களையும் பற்றி எரியச் செய்யும் திராவகச் சொற்களால் காலித்பொரிந்து தள்ளுகின்றார். அதற்கு கபீஸா பின் இயாஸ், “நாங்கள் உங்களுடன் போர்செய்வதற்கில்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் மார்க்கத்தையும் விடுவதற்கில்லை.அதனால் நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தி விடுகின்றோம்” என்று கூறினார்.
இதைச் செவியுற்ற காலித், “உங்களுக்குக் கேடு தான். இறை மறுப்பு என்பது தட்டலைந்துதடுமாறித் திரிய வைக்கும் ஒரு பாலைவனம். அறிவில்லாத அரபி தான் இதில் நடந்துசெல்கின்றான். அவனை இருவர் சந்திக்கின்றனர். ஒருவன் அரபியன். மற்றொருவன்அந்நியன். பாலைவனத்தில் செல்லும் அரபியனோ அரபியனை நம்பாமல் (பாரசீக)அந்நியனை நம்பிச் செல்கின்றான். இது போல் உங்கள் நிலை அமைந்திருக்கின்றது”என்று கூறினார். இறுதியாக தொள்ளாயிரம் திர்ஹம் வரித் தொகை செலுத்த வேண்டும்என்று உடன்படிக்கை செய்தார்.

இராக்கில் கிடைத்த முதல் வரி

உடன்படிக்கையின் படி தொள்ளாயிரம் திர்ஹம் வரி பெறப் பட்டது. இது தன் இராக்கின்ஆளுகையிலிருந்து பெறப்பட்ட முதல் ஜிஸ்யா வரியாகும். இராக்கிலிருந்து பெறப்பட்டநிதியும், பஸ்பஹரா பின் சலூபாவிடமிருந்து பெறப்பட்ட நிதியும் உடனே மதீனாவிற்குஅனுப்பிவைக்கப் பட்டது. இத்துடன் ஹிரா இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
மதாயினுக்கு காலித் எழுதிய மடல்
இதன் பின்னர் காலித் பின் வலீத், மதாயின் நகரத்தாருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார்.அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:
பாரசீக அரசுகளுக்கு காலித் எழுதிக் கொள்வது. நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்குஅமைதி உண்டாகட்டுமாக! நிற்க!
உங்களுடைய பணியாளர்களை ஒவ்வொருவராக உதிரச் செய்து, உங்களதுஆளுகைகளை உங்களிடம் இருந்து உருவச் செய்து, உங்களுடைய சூழ்ச்சிகளைஉருக்குலைத்துக் கொண்டிருக்கின்றானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நாம் தொழுவது போல் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்தவற்றைச்சாப்பிடுபவர் முஸ்லிம் ஆவார். எங்களுக்கு ஏற்படும் நன்மை அவர்களுக்கு உண்டு.எங்களுக்கு ஏற்படும் சோதனை அவர்களுக்கும் உண்டு. என்னுடைய கடிதம் உங்களுக்குவந்ததும் எனக்குக் கட்டுப்படுகின்ற உறுதிப் பிரமாணத்தை எனக்கு அனுப்பி வைத்து,என்னிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல், அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாருமில்லையே அப்படிப்பட்ட அந்த நாயன் மீதுஆணையாக! நான் உங்களுக்கு எதிராக ஒரு படையை அனுப்பி வைப்பேன். நீங்கள்வாழ்வை நேசிப்பது போல் அவர்கள் சாவை நேசிப்பவர்கள்.
இது தான் காலித் எழுதிய கடிதம்.
இதைப் படித்ததும் பாரசீக அரசர்கள் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைய ஆரம்பித்துவிட்டார்கள். மதாயினுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து விட்டு, காழிமாஎனுமிடத்தில் களம் காணும் காரியத்தில் இறங்குகின்றார் காலித்.
காழிமாவை நோக்கி காலிதின் படை
யமாமாவிலிருந்து இராக்கை நோக்கிப் புறப்பட்ட தளபதி காலித் பின் வலீத் தனதுபடையை மூன்று படைகளாகப் பிரித்திருந்தார். முஸன்னா பின் ஹாரிஸாஅஷ்ஷைபானீ என்பவரின் தலைமையில் ஒரு படையை நியமித்திருந்தார். அந்தப் படைகாலித் பின் வலீதின் படை புறப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாகக் கிளம்பி விட்டது.
அதீ பின் ஹாத்தம் அத்தாயின் தலைமையில் இன்னொரு படையை அமைத்திருந்தார்.இந்தப் படை காலித் பின் வலீதுக்கு ஒரு நாள் முன்னதாகப் புறப்பட்டுச் சென்றது.கடைசியாக காலிதின் படை கிளம்பியது.
இந்த முப்படைகளும் வெவ்வேறு திசைகளில் புறப்பட்டுச் சென்றன. இந்த மூன்றுபடைகளும் ஹஃபீர் என்ற இடத்தில் சங்கமிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தார்.இந்தப் படைகள் கிளம்புவதற்கு முன்னதாக காழிமாவின் ஆளுநர் ஹுர்முஸுக்குக்கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
நிற்க! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அமைதி அடையுங்கள். அல்லது வரிசெலுத்தி உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் எங்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் பழிக்க வேண்டியது உங்களைத் தான். வேறுயாரையுமல்ல! நீங்கள் வாழ்வை விரும்புவது போன்று சாவை விரும்பும் மக்களைஎன்னுடன் அழைத்து வந்திருக்கின்றேன்.
இவ்வாறு அந்தத் கடிதத்தில் காலித் குறிப்பிட்டிருந்தார்.
ஹுர்முஸ் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கடிதத்தின் தகவலை பாரசீகப்பேரரசர் அர்தஷீருக்கு உடனே தெரிவித்தார். ஏற்கனவே முஸ்லிம்களைப் பற்றியும், வந்துகொண்டிருக்கும் அவர்களது படையைப் பற்றியும் ஹுர்முஸுக்குத் தகவல் வந்திருந்தது.பேரரசருக்குத் தகவல் கொடுத்த ஹுர்முஸ், பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு,காலிதை எதிர் கொள்வதற்குப் புறப்பட்டுச் செல்கின்றார். இவ்வாறு செல்லும் போது,காலிதின் படைகள் ஹஃபீர் என்ற இடத்தில் சங்கமிக்கின்றன என்ற செய்தியைக்கேள்விப்பட்டு, தனது படையுடன் ஹஃபீருக்குப் புறப்படுகிறார்.

கொடுங்கோலன் ஹுர்முஸ்

ஹஃபீர் என்பது பாரசீக வளைகுடாவின் பாலைவன எல்லைக் கோட்டிலும், காழிமா என்றதுறைமுகப் பகுதிக்கு அருகிலும் அமைந்திருக்கும் ஊராகும். இது ஹுர்முஸின்ஆளுகையில் உள்ளதாகும். இதனை ஆளுகின்ற ஹுர்முஸ், இறை மறுப்பில் மிகவும்கடுமையானவன். குணத்திலும் மிகவும் கெட்டவன்.
ஒருவரைத் திட்டும் போது, ஹுர்முஸை விடக் குணம் கெட்டவன் என்று மக்கள்உதாரணம் சொல்லும் அளவுக்கு ஹுர்முஸ் கெட்ட குணம் உள்ளவனாக இருந்தான்.ஆனால் அதே சமயம் பாரசீகத்தில் அவன் மதிப்பிற்குரியவன். பாரசீகத்தில் ஒருவனுக்குமரியாதை அதிகமாகும் போதெல்லாம் அவனுடைய அணிகலன்களின் மதிப்பும்அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால் ஹுர்முஸ் அணிந்திருக்கும் தொப்பியின்மதிப்பு ஒரு லட்சம் திர்ஹமாகும். இப்படிப்பட்ட ஆடம்பரப் பிரியன் தான் அநியாயக்காரஹுர்முஸ்.