மரணமும் மறுமையும் – 07 (மரண வேளையில் சைத்தானின் ஊசலாட்டம்)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்
இறைவனுக்கு இணை வைக்கும் படி தூண்டுவான்.

மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இறுதி வாய்ப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் தன்னால் முடிந்தவரை பயன்படுத்துவான். அதில் சிக்கி ஏமார்ந்து நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் நாசமாக்கி விடக்கூடாது. இறைதூதர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துள்ளது!

أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ المُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ: ” يَا عَمِّ، قُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ” فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ: هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ: {مَا كَانَ لِلنَّبِيِّ} [التوبة: ] الآيَةَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா? என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் நான் அப்துல் முத்தலிபின் வழியில் தான் இருப்பேன் என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.

அறி: முஸய்யிப் (ரலி)

(புகாரி: 1360, 3884, 4675, 4772)

பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ய வேண்டும்

பெற்றோர்கள் மரணிக்கும் போது, தம் பிள்ளைகளுக்கு இதை உபதேசம் செய்ய வேண்டும்.

وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‌‏

என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது  என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

(அல்குர்ஆன்: 2:132)

اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?  எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?  என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது  உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்  என்றே (பிள்ளைகள்) கூறினர்.

(அல்குர்ஆன்: 2:133)

وَأَنْهَاكَ عَنِ الشِّرْكِ وَالْكِبْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நூஹ் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தனது மகனிடத்தில் இணைவைப்பதை விட்டும் உன்னை நான் தடுக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: (அஹ்மத்: 6583) (6295)

தற்கொலைக்கு தூண்டுவான்

கை கால்கள் சரியில்லாத, பார்வை மங்கிய, காது சரியாக கேட்காத 70 வயது பாட்டி நடுரோட்டில் பிச்சை எடுத்து உயிர் வாழ்கிறார்.‌ நடக்க முடியாமல் மரக்கட்டையால் செய்த ஒரு வண்டியிலே உட்கார்ந்து தள்ளிக் கொண்டு செல்கிறார். தற்கொலை செய்வதற்கு நியாயம் இருக்கும் என்றால் அவருக்கு இருக்கிறது.

தலையில் இருந்து கால் வரை ஏராளமான நோய்கள். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை. கல்லீரல் பிரச்சனை. கணையத்தில் பிரச்சனை. இரண்டு இட்லி சாப்பிட்டால் கூட சுகர் 500க்கு மேல் போகிறது. தற்கொலை செய்வதற்கு நியாயம் இருக்கும் என்றால் அவருக்கு இருக்கிறது.

கை கால்கள் நன்றாக இருக்கும் உனக்கு என்ன கேடு?

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ‎ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று ‎அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் ‎பாவமன்னிப்புத் தேடுவது கூட தடைசெய்யப்பட்டதாகும்.

‎ – ‎وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا ‏نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ ” كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: ‏بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ‎ “‎

ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க ‎முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் ‎விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் ‎சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்  என்று அல்லாஹ் ‎கூறி விட்டான்  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறி: ஜுன்துப் (ரலி)‎

(புகாரி: 1364)

‎ – ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، ‏يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي ‏نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا ‏فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا‎»‎

‎யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து ‎கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் ‎என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி ‎தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் ‎கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். ‎யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் ‎அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு ‎நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்  என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறி: அபூ ஹுரைரா (ரலி)‎

(புகாரி: 5778)

தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் கூறுகிறது. இதை செய்யும் படி ஷைத்தான் நம்மை தூண்டுவான்.

ஷஹீதை நரகவாசியாக்கிய ஷைத்தான்

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்’ என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’ என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் (புகாரி: 2898)

முஸ்லிம்களாக மரணிக்கிற பாக்கியத்தை கேட்போம்!

இப்படி பல்வேறு வகைகளில் நம் இறுதிவாயப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் பயன்படுத்தி நம்மை நரகவாசியாக ஆக்க துடிப்பான் அதிலிருந்து நம்மை தற்காத்து முஸ்லிமாக மரணிக்கிற பாக்கியத்தை அல்லாஹு தர வேண்டும் இன்று ஒவ்வொரு நாளும் இறைவனிடத்திலே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏

2:130. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”

3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.

இறைவனை மட்டுமே வணங்கி மரணிக்கிற முஸ்லிம்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிய வேண்டும் என்ற பிரார்த்தனை செய்தவனாக எனது இந்த உரையை முடிக்கிறேன்.