10) விதியை நம்புதல்
பாடம் 9
விதியை நம்புதல்
விதி என்றால் என்ன?
இந்த உலகத்தில் நடக்கின்ற அனைத்துக் காரியங்களும் இறைவனின் நாட்டத்தாலே நடக்கின்றது. இறைவன் நாடாமல் உலகத்தில் அனு கூட அசைவதில்லை. நம் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டாலும் துன்பம் ஏற்பட்டாலும் அவை அனைத்து இறைவன் நாடியதாலே ஏற்படுகின்றது. இந்த நம்பிக்கையே விதி எனப்படும்.
நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்று நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு அம்சம் என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . (நூல்:முஸ்ம் (1)
விதியை நம்பிக்கை கொள்ள மறுப்பவன் அல்லாஹ்வை மறுத்த காஃபிர் ஆவான்.
அல்லாஹ் படைப்பினங்களின் விதிகளை எப்போது எழுதினான்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ர)
நூல்:முஸ்ம் (5160)
அனைவருக்கும் சொர்க்கம் , நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா?
ஆம். அனைவருக்கும் சொர்க்கம் நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (தெரியும்) என்று சொன்னார்கள்.அவர் அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:இம்ரான் பின் ஹூசைன் (ர) நூல்:புகாரி (6596)
நாம் விதியை எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்?
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) (அல்குர்ஆன்: 57:23) ➚நடந்து விட்ட விஷயத்திற்குத் தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இந்த வசனத்திருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
விதியைப் பற்றி சர்ச்சை செய்யலாமா?
விதியைப் பற்றி சர்ச்சை செய்வது கூடாது. ஸஹாபாக்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த நேரத்தில் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
”இப்படித் தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத் தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டு வந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத் தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வயுறுத்துகிறேன்” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அஹ்மது 6381,