09) மண்ணறை வாழ்க்கை
பாடம் 8
மண்ணறை வாழ்க்கை
மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன?
மனிதர்கள் மரணித்ததிருந்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு ”ஃபர்ஸக்” திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்..
கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?
ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் மலக்குமார்கள் அவனிடம் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். அவை 1. உன்னுடைய இறைவன் யார்? 2. உன்னுடைய மார்க்கம் எது? 3. உங்களுக்கு அனுப்பட்ட இறைத்தூதரான முஹம்மது நபியைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்? ஆகிய மூன்று கேள்விகளாகும்.
இதற்கு முஃமின்கள் 1. என்னுடைய இறைவன் அல்லாஹ் 2. என்னுடைய மார்க்கம் இஸ்லாம். 3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று பதிலளிப்பார்கள். காஃபிர்களால் பதிலளிக்க முடியாது. அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள்.
கப்ரில் வேதனை செய்யப்படுமா?
ஆம். தீயவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ர) நூல் முஸ்ம் (5503)
கப்ரில் நல்லோர்களின் நிலை என்ன?
மலக்குமார்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நல்லோர்கள் கியாமத் நாளில் அல்லாஹ் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் வரை புதுமாப்பிள்ளை தூங்குவது போன்று தூங்குவார்கள். (திர்மிதி 991)