50) தவறான நம்பிக்கைகள்
50) தவறான நம்பிக்கைகள்
உயிருள்ளவர்கள் பேசுவதை இறந்து விட்டவர்கள் செவியேற் பார்கள் என பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தங்களுடைய தேவைகளை இறந்தவர்களிடத்தில் முறையிடுவதன் மூலம் இணைவைப்பு என்ற கொடிய பாவத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் நடக்கின்ற எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கவோ, கேட்கவோ இறந்தவர்களால் முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அனைத்தையும் செவியேற்கின்ற வல்ல இறைவனிடம் மட்டும் நம்முடைய தேவைகளை முறையிட வேண்டும்.
நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது!
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார் கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்கள் நீர் செவியேற்கச் செய்பவ ராக இல்லை.
நீங்கள் அவர்களை (இறந்தவர்களை) அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவி யேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத்நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அல்லாஹ் (மறுமை நாளில் தான்) உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்!