48) சத்தியம் தெளிவாக
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ
ரப்பன-Fப்தஹ் பைனனா வபைன qகவ்மினா பில்ஹqக்qகி வஅன்த khகைருல் Fபாதிஹீன்.
பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாய மான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன். (அல்குர்ஆன்: 7:89)➚
(ஷுஐப் (அலை) அவர்களைத் தங்கள் மார்க்கத்திற்கு வந்து விடுங்கள் என்று மக்கள் கேட்ட போது ஷுஐப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَـٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
ரப்பி-ஹ்கும் பில்ஹqக்(க்), வரப்புனர் ரஹ்மானுல் முஸ்தoஆனு oஅலா மா தsஸிFபூன்.
பொருள்: என் இறைவா! நீ உண்மையான தீர்ப்பை வழங்குவாயாக! “நீங்கள் கூறுவதற்கு எதிராக எங்கள் இறைவனாகிய அளவற்ற அருளாளனே உதவி தேடப்படுபவன். (அல்குர்ஆன்: 21:112)➚
(மக்கா வாசிகள் இஸ்லாத்தை ஏற்க மறுத்த போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)