47) இறந்தருக்காக கடமையான நோன்பை நோற்றல்
நூல்கள்:
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை
இறந்தவர் மீது கடமையான நோன்பு அல்லது நேர்ச்சை செய்த ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீதிருந்த கமை நீங்கிவிடுகிறது.
«مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகி யிருந்த நிலையில் இறந்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவ தற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)