46) இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யலாம்
46) இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யலாம்
மரணித்தவர் விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவும், நல்ல வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும் என்பதற்காக வும் அல்லாஹ்விடம் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
மரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார் கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவ
மன்னிப்பு தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது அவர் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின். வ நக்கிஹி மினல் கத்தாயா சுமா யுனக்கஸ் ஸல்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்ஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்” என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக! கருணை புரிவாயாக! இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவா யாக! இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவி அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்து வதைப் போன்று தூய்மையாக்குவாயாக!
மேலும் இங்குள்ள வீட்டை விட சிறந்த வீட்டையும், இங்குள்ள குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும், இங்குள்ள துணையை விடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மண்ணறை யின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பின் வேதனையி லிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக!)
அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்து விட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)