31) வாங்கிய கடனை ஒப்படைக்காமல் இருத்தல்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

31) வாங்கிய கடனை

ஒப்படைக்காமல் இருத்தல்

வாங்கிய கடனை உரியவரிடத்தில் முறையாக ஒப்படைக்கா விட்டால் அது பெரும் குற்றமாகும். கடனை அடைக்காமல் இறந்து விட்டால் இறந்தவரின் உறவினர்கள் அக்கடனை அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் பாக்கியங்களை மரணித்தவரால் அனுபவிக்க முடியாத துர்பாக்கிய மான நிலை ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கை யாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகிற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி-999

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது விட்டு இங்கே இன்னாருடைய கூட்டத்தாரில் யாராவது (புதைக்கப்பட்டார் களா?) என்று மூன்று முறை கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு யாரும் பதில் கூறவில்லை. இறந்து விட்ட இந்த மனிதர் தன் மீதிருந்த கடன் காரணத்தால் சொர்க்கத்தை விட்டும் தடுக்கப்பட்டு விட்டார்.

நீங்கள் விரும்பினால் அவருக்கு பதிலாக நீங்கள் அவரது கடனை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் வேதனையின்பால் அவரை ஒப்படைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜூன்துப் (ரலி)

நூல்: மஸானீது ஃபிராஸ் (16)