28) சிறுநீர் கழித்து விட்டுசுத்தம் செய்யாமல் இருத்தல்
28) சிறுநீர் கழித்து விட்டுசுத்தம்
செய்யாமல் இருத்தல்
மலமும், சிறுநீரும் மனிதனின் உடம்பிலிருந்து வெளிப்படும் அசுத்தங்களாகும். ஆனால் மலம் கழித்தால் மக்கள் சுத்தம் செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.
சிறுநீரை தூய்மையான தண்ணீரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு நீர் கிடைத்தாலும் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிற அளவிற்கு சிறுநீர் ஒன்றும் பெரிய அசுத்தமில்லை என்று கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையில் மலத்திலிருந்து துர்வாடை கிளம்புவது போல் சிறுநீரிலிருந்தும் துர்வாடை கிளம்புகிறது. மலத்தில் நோய்க் கிருமிகள் இருப்பதுபோல் சிறுநீரிலும் நோய்க் கிருமிகள் இருக்கிறது.
எனவேதான் இவ்விரண்டு அசுத்தங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. சுத்தம் செய்யா விட்டால் மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக் கிறது. சிறுநீர் விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காரியங்களிலும் நாம் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ரு களைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ் விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.
ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்” என்று கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ் விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப் படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்