27) புறம் பேசுதல்
27) புறம் பேசுதல்
இன்றைக்கு பாவம் என்று உணரப்பட்டு அதிகமானோரால் செய்யப்பட்டு வரும் குற்றம் புறம் பேசுவதாகும். புறம் பேசியதற்காக ஒருவன் மண்ணறையில் தண்டிக்கப்படுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, “இவ் விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்” என்று கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ் வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே!
ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ் விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப் படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 3