27) கைஸின் ஆட்சிக் கனவு

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

போலி நபியான அஸ்வத் அல்அன்ஸீ என்ற அந்த நாகப் பாம்பின் புற்றாகவும் புதராகவும்இருந்த யமன் தேசம், இப்போது அவனது அழிவின் மூலம் தூய்மையாகி விட்டது;துப்புரவாகி விட்டது.
இந்த அரும் பணியை ஆற்றியவர்கள் மூவர்! கைஸ் பின் மக்ஷூஹ், பைரோஸ்அத்தைலமீ, தாதவைஹ் ஆகிய மூவர் கொண்ட இக்குழுவினர் இந்த அரும்பணியைமுடித்து விட்டு, நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாக அடுத்த விவகாரம்உருவெடுக்கின்றது. இந்த விவகாரம் வெளியிலிருந்து வரவில்லை. உள்ளிருந்தேவெடிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த செய்தி யமனை அடைந்ததும் ஒருசிலர் தடுமாறினர். தடமும் மாறுகின்றனர் அஸ்வத் அல்அன்ஸீயைக் கொன்ற பிறகுஅந்த ஆட்சியை அடைய வழி என்ன? என்று கைஸ் கணக்குப் போடுகின்றான். அவனதுமத மாற்றம் அதற்கு விடையாக அமைகின்றது. அதனால் அவன் இஸ்லாத்தை விட்டுவெளியேறுகின்றான். இஸ்லாத்தை விட்டு விலகிச் சென்ற அவனையும் ஒரு கூட்டம்பின்பற்றுகின்றது.
கைஸின் இந்தத் துரோகம் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களை அடைகின்றது.அபூபக்ர் (ரலி) அவர்கள் உடனே ஆட்சி யாளர்களுக்கு அவசரக் கடிதம்அனுப்புகின்றார்கள். பைரோஸுக்கும், பாரசீக மக்களுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஆட்சியாளர்களிடம் அபூபக்ர் (ரலி) கேட்டுக்கொள்கின்றார்கள்.

கூட்டாளிகளைக் கொல்லும் கொடிய துரோகம்

பைரோஸ், தாதவைஹ் ஆகிய இருவரையும் தீர்த்துக் கட்ட கைஸ் திட்டம் தீட்டுகிறான்.பைரோஸுக்கும், தாதவைஹுக்கும் விருந்து ஏற்பாடு செய்கின்றான். முதலில்தாதவைஹை அழைக்கின்றான். அவர் வீட்டுக்குள் வந்ததும் அவரைக் கொலை செய்துவிடுகின்றான்.
அடுத்து பைரோஸை அழைத்து வர ஆளனுப்புகின்றான். பைரோஸும் அவனதுஅழைப்பை ஏற்று வருகின்றார். வருகின்ற வழியில், “தாதவைஹைப் போல் கொலைசெய்யப்படுவதற்காகப் போகிறார் பாருங்கள்” என்று ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம்பேசிக் கொண்டிருக்கின்றாள்.
இதைச் செவியுற்ற பைரோஸ், தான் செல்வது விருந்துக்கல்ல; வினைக்கு என்றுவிளங்கிக் கொண்டு கவ்லான் கிளையைச் சார்ந்த தன் தாய் மாமன்மார்கள் வீட்டைநோக்கித் தனது குதிரையைத் தட்டி விடுகின்றார்.
மலைப் பகுதியைத் தங்கள் வீடாகக் கொண்டிருந்த கவ்லான் கிளையாரிடம் தஞ்சம்அடைந்த அவருக்கு அக்கிளையார்கள் ஆதரவளித்து, கைஸுக்கு எதிராகக் களமிறங்கஆயத்தமானார்கள்.

நாடு கடத்தலில் இறங்கிய கைஸ்

பைரோஸுக்குப் பக்க பலமாக ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்துபடைகள் புறப்பட்டு வரும் என்பதையெல்லாம் அறிந்த கைஸ், பைரோஸையும் அவரதுசந்ததியினரையும், தாதவைஹ் சந்ததியினரையும் உடனே நாடு கடத்தி விடுகின்றான்.தரை மார்க்கமாக ஒரு கூட்டத்தையும், கடல் மார்க்கமாக ஒரு கூட்டத்தையும் அனுப்பிவைக்கிறான்.
படை நடத்திய பைரோஸ்
ஆனால் பைரோஸோ கவ்லான், அக் மற்றும் இதற்கு ஆதரவளித்த கிளையினர்களுடன்யமனை நோக்கிப் படையெடுத்து வருகின்றார். யமன் முழுமையாக முஸ்லிம்கள்கைகளில் வந்து விடுகின்றது. போலி நபி அன்ஸியின் இடத்தில் தான் ஓர் ஆட்சித்தலைவனாக இருக்கப் போவதாக கைஸ் பகல் கனவு கண்டு கொண்டிருந்தான். அந்தக்கனவுக் கோட்டை இடிந்து சுக்கு நூறாக நொறுங்கிப் போகும் வகையில் நாலாபக்கங்களிலும் பைரோஸ் படையினர் யமன் நகரை முற்றுகையிட்டனர்.
இரண்டு அணியினரும் மிகக் கடுமையாக மோதினார்கள். யமன் தேசம் பைரோஸின்கைக்கு வந்தது. கைஸையும் அவனுடன் மதம் மாறிய அம்ர் பின் மஃதீகரிபையும் கைதுசெய்தனர். பைரோஸின் தளபதி முஹாஜிர் பின் அபீ உமய்யா அவ்விருவரையும் மத்தியஅரசான மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்.

ஆட்சித் தலைவரின் விசாரணை

ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் மிகக் கடுமையாகவிமர்சிக்கின்றார்கள். அந்தக் கண்டனத்தை ஏற்று அவ்விருவரும் அபூபக்ர் (ரலி)யிடம்வருத்தம் தெரிவிக்கின்றனர். இனி இது போன்று இஸ்லாத்திற்கு எதிராகக் கிளம்பமாட்டோம்; எதையும் கிளப்பவும் மாட்டோம் என்று ஆட்சித் தலைவரிடம்விண்ணப்பிக்கின்றார்கள்.
வெளிப்படையான அவர்களின் விண்ணப்பத்தை அபூபக்ர் (ரலி) ஏற்றுக் கொண்டுஅவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் விட்டு விடுகின்றார்கள். ஆட்சித் தலைவர்அவ்விருவருக்கும் விடுதலை வழங்கி விடுகின்றார். இதன் பின்னர் யமன் அமைதியைநோக்கித் திரும்பியது. ஆட்சி இஸ்லாமிய ஆளுநர்களிடம் வந்தது.
அல்லாஹ்வின் உண்மையான தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, போலித்தூதர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நபித் தோழர்கள் மீண்டும் ஆளுநர்அதிகாரத்தை திரும்பப் பெற்றனர். இது தான் யமன் நாட்டின் வரலாறாகும்.
தூள் தூளாகிப் போன பொய் தூதர்கள்
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து படையெடுத்து வந்த அத்தனைபோலித் தூதர்களும், பொல்லாத துரோகங்களும் முறியடிக்கப்பட்டன. முனைமழுங்கடிக்கப்பட்டு பிடுங்கி எறியப்பட்டன. அவ்வாறு பிடுங்கி எறியப்பட்ட போலித்தூதர்களின் முகங்களை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
1. அப்ஹலா பின் அஸ்வத் அல் அன்ஸீ – யமன்
2. முஸைலமா – யமாமா
இவ்விருவரும் கொல்லப்பட்டனர்.
3. தலீஹா பின் குவைலித் அல் அஸதீ – புஸாகா
இவர் திருந்தி விட்டார்.
4. ஸிஜாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுவைத் – ஜஸீரா
போலி பெண் நபியான இவள் தப்பியோடி ஜஸீராவில் தஞ்சம் புகுந்தாள்.
5. லகீத் பின் மாலிக் அல் அஸ்வதி – உமான்
இவன் கொல்லப்பட்டான்.
இவர்களெல்லாம் தங்களை நபி என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். அடையாளம்தெரியாமல் ஆனார்கள்; அடிச்சுவடற்று அனாதைகள் ஆனார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அரபிய தீபகற்பத்தையே கலக்கிய இந்தப் போலிநபிகள் களையெடுக்கப் பட்டு காலியாகிப் போனார்கள். தலீஹா மட்டும் திருந்தி சரியானபாதைக்குத் திரும்பினார்.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குக் கலக்கத்தை உண்டாக்கிய மதமாற்றக் கலகம் மக்கா,மதீனா தவிர மற்ற அரபுலகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியிருந்தது. இஸ்லாமியஆட்சி கட்டுப்பாட்டை விட்டு கை நழுவிப் போயிருந்தது.
ஈமானிய ஜோதி அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மதமாற்றக் கலகத்தை இரும்புக் கரம்கொண்டு அடக்கினார்கள். அதன் விளைவாகப் பாதை மாறிப் போன பஹ்ரைன், புஸாகா,எகிறிக் குதித்த யமாமா, எதிர்த்து நின்ற யமன், உருவி ஓடிய உமான், மஹரா போன்றஅத்தனை பகுதிகளிலும் மீண்டும் ஏகத்துவக் கொடி – இறுதி நபித்துவக் கொடிநாட்டப்பட்டது. இது அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்கை உறுதிக்குக் கிடைத்த வெற்றிக்கனிகளாகும்.
புனிதப் போரின் தளபதிகள்
இறுதி நபித்துவத்தை நிலை நாட்டும் அந்த அறப்போரை – அர்ப்பணிப்புப் போரை நடத்திச்சென்ற தளபதிகளின் திருமுகங்களை ஒரு முறை பார்த்து வருவோம்.
1. காலித் பின் வலீத் (ரலி)
2. இக்ரிமா பின் அபீஜஹ்ல் (ரலி)
3. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
4. ஷர்ஹபீல் பின் ஹஸனா (ரலி)
5. அலா பின் அல்ஹள்ரமி (ரலி)
6. ஹுதைபா பின் மிஹ்ஸன் (ரலி)
7. முஹாஜிர் பின் உமைய்யா (ரலி)
8. ஸுவைத் பின் அல் முகர்ரின் (ரலி)
9. காலித் பின் ஸயீத்
10. தரீபா பின் ஹாஜிஸ்
அடுத்து இறுதி நபித்துவத்தைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டமுக்கியமான நபித்தோழர்களைப் பார்ப்போம்.
யமாமா போரில் பங்கெடுத்தவர்கள்
1. ஸாபித் பின் அக்ரம் பின் ஸஃலபா (ரலி)
பத்ர் மற்றும் இதர போர்களில் குறிப்பாக முஃத்தா போரில் பங்கெடுத்தவர்.
2. ஹஜன் பின் வஹப் (ரலி)
இவரது இரண்டு மகன்களும் இந்தப் போரில் உயிர் தியாகம் செய்தனர்.
3. அபூதுஜானா (ரலி)
இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர். உஹதுப் போரின் போது அதிகமான சோதனைக்குஉள்ளாக்கப்பட்டவர். இவரைப் பற்றி முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
உஹத் நாளின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாள் ஒன்றை எடுத்து, “இதை என்னிடமிருந்து பெறுபவர் யார்?” என்று வினவினார்கள். நான், நான் என்றுசொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் கைகளை நீட்டினர். “இதற்குரிய முறையில்பெறுபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதும், கரஷா பின் அபூதுராஜா, “நான்அதற்குரிய முறையில் பெறுகின்றேன்” என்று சொல்லிப் பெற்றுக் கொண்டார். அந்தவாளைக் கொண்டு இணை வைப்பவர்களின் தலைகளை வீழ்த்தித் தள்ளினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(முஸ்லிம்: 4516)
4. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)
5. ஸைத் பின் கத்தாப் (ரலி)
6. ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரலி)