26) இறைவேதத்தை அலட்சியப்படுத்துதல்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

26) இறைவேதத்தை அலட்சியப்படுத்துதல்

இறைவன் வகுத்த சட்டதிட்டடங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்கு திருக் குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் தந்துள்ளான். இவ்விரண்டின் அடிப்படையில் வாழ்ந்தவர் மண்ணறை யிலும், மறுமையிலும் வெற்றி பெறுவார். ஆனால் இந்த உபதேசத் தைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி மரணிப்பவருக்கு மண்ணறையில் நெருக்கடியான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

(அல்குர்ஆன்: 20:124)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டளை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 3174)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள்.

அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப் பாளன் அவனுடைய மண்ணறையில் வேதளை செய்யப் படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணை யாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும்.

அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரி யுமா? அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள்வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை)அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்து கொண் டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்னத் அபீ யஃலா: 6504