24) பொறுப்பின்கீழ் உள்ளோருக்கு நலம் நாடுதல்
ஆட்சி பீடத்தில், அதிகார மட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஏதேனும் ஒரு சிறு பொறுப்பில் இருப்பவர்கள், உடனிருப்போரை கண்காணித்து வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழே இருக்கும் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர். அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கினால். அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங் களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர். அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல் : (முஸ்லிம்: 3732)
நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்” என்று சொல்ல நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: மஅகில் பின் யஸார் (ரலி), நூல் : (புகாரி: 7150)