23) மறுமை வெற்றிக்கு

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ

ரப்பனாa ஆமன்னா பிமாa அன்zஸல்த வத்தபoஃனர் ரஸூல Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன்.

பொருள்: எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (அல்குர்ஆன்: 3:53)➚

(நபி ஈஸா (அலை) அவர்களுடன் இருந்தோர் கேட்ட பிரார்த்தனை)


وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ

வலா துkhக்zஸினீ யவ்ம யுப்oஅthஸூன்.

பொருள்: (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (அல்குர்ஆன்: 26:87)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)