23) ஓமனில் தோன்றிய ஒரு பொய்த் தூதன்
ஜுவாஸாவில் முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்களைக் காப்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள்அனுப்பி வைத்த படையினருக்கு ஏற்பட்ட சோதனை, படைத்தவனிடம் கையேந்திக் கேட்டதும்நீங்கியது. அவர்களது பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப் பட்டது. இது அவர்களது உள்ளத்தில்ஒரு புதியதொரு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது.
படைத் தளபதி அலா பின் ஹள்ரமி மக்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.எதிரிகளின் களத்தை நெருங்கிய போது அவர்களது எண்ணிக்கை முஸ்லிம்களின் புருவத்தைச்சற்று உயர்த்தியது. அங்கு பெருங் கூட்டமே பெருக்கெடுத்து வந்திருந்தது.
அது இரவு வேளை! மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் கூட்டமாக முஸ்லிம்கள் தங்கினர்.இருள் சூழ்ந்திருக்கும் இந்த இரவு வேளையில் எதிரிகளின் முகாம்களில் சலசலப்புகள்!சப்தங்கள்! இந்தச் சப்தங்கள் அதிகமான அளவில் உயர்ந்து கொண்டிருந்தன.
சுதாரித்துக் கொண்ட அலா பின் ஹள்ரமி உடனே எதிரி முகாமுக்கு வேவு பார்த்து வர ஒருவரைஅனுப்பி வைக்கிறார்.
வேவு பார்த்தவர் ஒரு சுபச் செய்தியைச் சுமந்து வருகின்றார். முஸ்லிம்களை எதிர் கொள்ள வந்தஅந்தப் படையினர் சுத்தமாக சுய நினைவின்றிக் கிடக்கின்றனர். போதையில் புதையுண்டுப்போன அவர்கள், புத்தி பேதலித்துப் போய் புலம்பித் தள்ளுகின்றனர். அதனால் தான் இந்த மிருகக்கூச்சல் என்ற தகவலை தளபதியிடம் எடுத்து வைத்தார். அடுத்த கணம் அலா பின் ஹள்ரமி தன்பரிவாரத்துடன் களத்தில் நின்றார்.
சிறு மூளை பாதிக்கப்பட்ட அந்தப் பெருங் கூட்டத்தினருக்கு எதிரில் நின்று முஸ்லிம்கள்போரிடுவது பெரிய வேலையாக இல்லாது போயிற்று! தப்பி ஓடியவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவினர் தான் என்று கணக்கிடும் வகையில் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டு,இருக்கும் இடம் தெரியாமல் ஆயினர்.
முஸ்லிம்கள் அதிகம், அதிகமாக வெற்றிப் பொருட்களை எடுத்தனர். இந்தப் போர்முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியாக அமைந்தது.
கூட்டம் ஓடிய பின்பும் குறட்டை விடும் தலைவர்
படைக் களத்தில் எதிரிகள் யாரும் இல்லை! ஒன்று பலியாயினர்; அல்லது பின்வாங்கி, பயந்துஓடி விட்டனர். இந்த விபரம் எதுவுமே கைஸ் கிளையினரின் படைத் தளபதியான ஹதம் பின்லபீஆவுக்குத் தெரியாது. காரணம் அவர் கண்ணயர்ந்து தூங்கி விட்டார். விழித்துப் பார்க்கின்றார்.தன்னுடைய கூட்டம் வேரறுக்கப்பட்டு விட்டது என்று அறிந்து கொண்டு தனது வாகனத்தில் ஏறிஅமர்கின்றார். விரைந்து ஓடுவதற்காக! ஆனால் வாகனம் படுத்துக் கொண்டது. “இதைச் சரிசெய்பவர் யார்?” என்று குரல் எழுப்புகின்றார்.
“இதோ நான் வருகின்றேன்” என்று ஒருவர் முன் வந்து, “உன் காலை வாகனத்திலிருந்து தூக்கு”என்கிறார். அது போல் அவர் காலைத் தூக்கியதும், இவர் வீசிய வீச்சில் ஹதம் பின் லபீஆவின்கால் துண்டாகிப் போனது. “காலை ஓய்த்த நீ ஆளையும் ஓய்த்து விடு” என்று கூறுகின்றார்.அதாவது என்னைக் கொன்று விடு என்று கெஞ்சுகிறார். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.
அதன் பின் யார் அவ்வழியே கடந்து சென்றாலும், “என்னைக் கொன்று விடுங்கள்” என்று கூச்சல்போட்டுக் கொண்டே இருந்தார். இவ்வாறு ஹதம் பின் லபீஆ குரல் எழுப்பிக் கொண்டிருக்கையில்அவருக்கு அருகில் ஆஸிம் பின் கைஸ் என்பார் வருகின்றார். அவர் உடனே ஹதம் பின்லபீஆவைக் கொன்று விடுகின்றார். கொல்லப்பட்ட அவர் கீழே சாய்ந்த பின்னர் தான் அவருக்குக்காலில்லை என்ற விபரம் தெரிகின்றது. அதனால் ஆஸிம் பின் கைஸ் வேதனை அடைந்தார்.
“அடப் பாவமே! இவர் கால் இழந்தவர் என்று தெரிந்திருந்தால் நான் இவர் மீது கை வைத்திருக்கமாட்டேனே!” என்று கூறினார்.
இதன் பிறகு, தோல்வியுற்று ஓடிய எதிரிகளை அவர்கள் போன வழியில் முஸ்லிம்கள் துரத்திச்சென்றனர். எதிரிகள் கடல் கடந்து தாரீன் என்று பாரசீகத் தீவிற்குத் தப்பிச் சென்று விட்டனர்.
இதற்கிடையே அலா பின் ஹள்ரமி தன் படை வீரர்களை ஆசுவாசப் படுத்தி அமைதியடையச்செய்து, அவர்களிடம் போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப் பங்கீடு செய்கின்றார்.
சிறிய ஓய்வை அவர்களுக்கு அளித்து விட்டு அதன் பின்னர் “தீவிற்குச் சென்ற அந்தத்துரோகிகளை விடக் கூடாது. அவர்களைத் துடைத்தெடுப்பது தான் நம்முடைய தலையாய பணி!எனவே தொடரலாமா?” என்று கேட்கின்றார். அவர்கள் தலையசைத்துத் தங்கள் இசைவைத்தெரிவிக்கின்றார்கள். தலைவருக்குக் கட்டுப்படுகின்றார்கள்.
தீவிற்குச் செல்வதற்கு முஸ்லிம் களிடம் கப்பல் படை இல்லை. இந்தக் காலாட் படையேகடற்படை ஆனது. அல்லாஹ்விடம் பணிந்து பிரார்த்தனை செய்கின்றனர். அங்கு ஓர் அற்புதம்நிகழ்ந்தது. கருணை நாயன் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்தான். அல்லாஹ்வின்அருளால் கடல் பணிந்து, தன் நீர் மேனியை நில மேனியாக்கியது. அடைக்கலமாக இருந்த அந்தத்தீவு எதிரிகளின் அடக்கத்தலமாகியது.
இந்தப் புனிதப் போரின் நிகழ்வுகளை ஒரு பாதிரி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.அதிகாலை நேரத்தில் அவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார். அவரிடம், “நீங்கள்இஸ்லாத்தைத் தழுவிய காரணம் என்ன?” என்று கேட்கப்பட்டது. “படை வீரர்களாகிய நீங்கள்அதிகாலை நேரத்தில் கேட்ட பிரார்த்தனை வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல! கொள்கைவைரம் பாய்ந்த வைர வார்த்தைகள் ஆகும். அவை தான் என் உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தன” என்று அவர் பதிலளித்தார்.
இவ்வாறு அலா பின் ஹள்ரமி மாபெரும் வெற்றி வாகை சூடினார். இறுதி நபிக்குப் பிறகுஇன்னொரு நபி என்று பஹ்ரைன் பகுதியிலிருந்து தோன்றிய கருத்து, இறுதி முடிவைச்சந்தித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு தூதர் கிடையாது என்றகொள்கை முழக்கம் எல்லா திசைகளிலும் எதிரொலித்தது. இரண்டு பகுதிகளைத் தவிர! ஒன்று(ஓமன் என்ற) உமான். மற்றொன்று மஹ்ரா ஆகும்.
இனி எதிர்காலம் ஏகத்துவத்திற்குத் தான் என்பதை மோப்பம் பிடித்து, ஆதாயம் தேடி நுழையும்அரசியல்வாதிகள் போல அன்றைய அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்த ஆயுதம் இறைத்தூதுத்துவம்!
காரணம் இந்த இறைத் தூதுத்துவம் ஓர் இருபத்து மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது கால்நூற்றாண்டு கரைவதற்குள் ஆட்சியைப் பிடித்து விட்டது. அண்டை நாடுகளையும், அயல்நாடுகளையும் தன்னகப்படுத்தி, தன்னுடைய பொன்னாட்சிக்குக் கீழ் கொண்டு வரும் தாரகமந்திரத்தைத் தன் கைவசம் கொண்டுள்ளது என்பதை உணர்ந்த சிலர், இந்த இறைத் தூது எனும்ஆயுதத்தைத் தூக்கி வரத் துவங்கினர்.
அத்தனை பேர்களின் கதியும், கதையும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயேமுடிந்தது. அடுத்த ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இது தொடர்பாகஎந்த ஒரு வேலையையும் விட்டு வைக்கவில்லை. அந்தக் கணக்கை முடிப்பதற்கு இன்னும்இருவர் மட்டும் எஞ்சியிருந்தனர். அவர்களில் ஒருவன் வகீத் பின் மாலிக் பின் அல் அஜ்திஎன்பவன் ஆவான்.
அறியாமைக் காலத்தில் இவன் தன்னை உமானின் அரசன் ஜுலந்தா என்று பிதற்றிக்கொண்டிருந்தான். பிறகு இவன் தன்னை ஒரு நபி என்று புலம்ப ஆரம்பித்தான். புத்தி பேதலித்துப்போன இவனுக்குப் பின்னாலும் உமான் நாட்டு அறிவிலிகள் செல்ல ஆரம்பித்தனர்.
இவன் உமானை ஒருவாறாக வென்று, ஜுலந்தாவின் இரு மகன்கள் ஜைஃபர், அப்பாத்* ஆகியஅரசர்களை உமானை விட்டே ஓடச் செய்து விட்டான். ஊரின் ஒதுக்குப் புறமான மலைஅடிவாரத்திற்கும், கடற்கரை ஓரத்திற்கும் துரத்தியடிக்கப் பட்ட அந்த இரு அரசர்கள், ஆட்சித்தலைவர் அபூபக்ர் (ரலி)க்குக் கடிதம் எழுதுகின்றார்கள். இறைத் தூதன் என்று தன்னைப்பிரகடனப்படுத்திய இந்தப் புரட்டுக்காரனை, பொய்யனை அதிரடியாக அடித்துத் துரத்துவதற்குப்படையனுப்பி வைக்கும் படி அந்தக் கடிதத்தில் கோரினார்கள்.
இவர்களது இந்தக் கோரிக்கையை ஏற்று ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் இருஅமீர்களை, ஹுதைபா பின் மிஹ்ஸன், அர்பஜா ஆகிய இரு தளபதிகளை அனுப்பிவைக்கின்றார்கள்.
இக்ரிமா, ஷர்ஹபீல் பின் ஹஸனாவின் படையினர் சரியான படை பலமின்றிமுஸைலமாவிடம் மோதித் தோல்வியைத் தழுவியதை இதற்கு முன்பு பார்த்தோம்.
இக்ரிமாவின் சமயோசிதமில்லாத இந்தச் செயலைக் கண்டித்து அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒருகண்டனக் கடிதம் அனுப்புகின்றார்கள். அந்தக் கண்டனக் கடிதத்தில், இனிமேல் இது போன்றசெய்தி என் காதுக்கு வரக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அத்துடன் உமானை நோக்கிச்செல்லும் ஹுதைபாவுடனும், அர்பஜாவுடனும் போய் சேர்ந்து கொள்ளுமாறும் இக்ரிமாவுக்குக்கட்டளையிட்டார்கள். “உங்களில் ஒவ்வொருவரும் தாங்கள் நடத்திச் செல்லும் படைக்குத்தளபதிகள். உமானில் நீங்கள் போர் செய்யும் போது, ஹுதைபா தான் தலைவர். உமான்முடிந்ததும் மஹ்ராவுக்குச் செல்லுங்கள். மஹ்ரா முடிந்ததும் யமன், ஹள்ர மவ்த்தை நோக்கிச்செல்லுங்கள். செல்லும் வழியில் மதம் மாறியவர்களுக்கு மரண தண்டனை வழங்கத் தயங்கவேண்டாம்” என்று அபூபக்ர் (ரலி) தனது கடிதத்தில் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.
இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அபூபக்ர் (ரலி)யின் ஆணைப் படி ஹுதைபாவும்,அர்பஜாவும் உமான் வந்தடைவதற்கு முன்பதாகவே அவ்விருவரையும் இக்ரிமா அடைந்துகொண்டார்.
அவ்விருவருக்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதிய கடிதத்தில், உமான் போர் முடிந்தவுடனேஅல்லது உமானில் தங்கியிருக்கும் போதே இக்ரிமாவிடம் கலந்தாலோசிக்கத் தயங்க வேண்டாம்என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இம்மூவரும் உமானை நெருங்கியதும், ஜைஃபருக்குக் கடிதம் அனுப்புகின்றார்கள். இதற்கிடையேஜைஃபருக்கு ஆதரவாக இந்தப் படை வந்து விட்டது என்ற தகவல் பொய் நபி வகீத்துக்குத் தெரியவருகின்றது.
*உமானின் அரசர்களான ஜைஃபர், அப்பாத் ஆகிய இருவரும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)அவர்களின் காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினர். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக்கண்டதில்லை. இவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய காலம் கைபர் போர் நடந்த பிறகாகும். (நூல்:அல்ஜர்ஹு வத்தஃதீல், அல் இஸ்திஆப்)