மரணமும் மறுமையும் – 22 (ஹவ்ளுல் கவ்ஸர்)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

மறுமையின் கடுமையான வெயிலின், வெப்பத்தின், வியர்வையின் நடுவே இறைவனின் அர்ஷின் நிழலில்  சிலருக்கு அல்லாஹ் இடமளிப்பான் என்பதனை கடந்த உரையிலே பார்த்தாம். அது போன்ற இன்னொரு நிம்மதி ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான நாள்

மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும்.

تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏  فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏
اِنَّهُمْ يَرَوْنَهٗ بَعِيْدًا ۙ‏  وَّنَرٰٮهُ قَرِيْبًا ؕ‏

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) ரூஹும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

(அல்குர்ஆன்: 70:4)
மேற்குறிப்பிட்ட நாள் மறுமை நாளைப் பற்றியது தான் என்பதற்கு கீழ்காணும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

ஜகாத் கொடுக்காதவர்களுக்கு விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்… அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1803)

(ஜன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி கோட்பாடு)

கவ்ஸர் பற்றிய அறிவிப்பு

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான அந்த நாளில் ஏற்படும் கடுமையான தாகத்தை தணிக்க இறைவன் செய்த ஏற்பாடு தான், நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஹவ்ளுல் கவ்ஸர் என்ற சுவையான, அதிஅற்புதமான நீர் தடாகம்!

بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا، فَقُلْنَا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «أُنْزِلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ» فَقَرَأَ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ} [الكوثر: 2] ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ؟» فَقُلْنَا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ، عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ، هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ …

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃதத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள், அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; (ஹதீஸ் சுருக்கம்)

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்:  (முஸ்லிம்: 670)

மிஃராஜில் கவ்ஸர்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்:  (புகாரி: 6581) .

நபி (ஸல்) அவர்கள் நம்மை எதிர்பார்த்திருக்கும் இடம்

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَتْلَى أُحُدٍ بَعْدَ ثَمَانِي سِنِينَ، كَالْمُوَدِّعِ لِلْأَحْيَاءِ وَالأَمْوَاتِ، ثُمَّ طَلَعَ المِنْبَرَ فَقَالَ «إِنِّي بَيْنَ أَيْدِيكُمْ فَرَطٌ، وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ، وَإِنَّ مَوْعِدَكُمُ الحَوْضُ، وَإِنِّي لَأَنْظُرُ إِلَيْهِ مِنْ مَقَامِي هَذَا، وَإِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوهَا»، قَالَ: فَكَانَتْ آخِرَ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது.

பிறகு அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (அல்கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன்.

நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது.

அறி: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்: (புகாரி: 4042)

இதன் நீள, அகல அளவு, நிறம், சுவை

حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ المِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகம் ஏற்படாது.

அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: (புகாரி: 6579)

மறுமையில் அது நமக்கு முன்னால் (முன் திசையில்) இருக்கும்

أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 6577)

(கணக்கிலடங்கா) கோப்பைகள்

أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ اليَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி) ,
நூல்: (புகாரி: 6580)

ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) கூறியதாவது:

حَارِثَةَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ الحَوْضَ فَقَالَ: «كَمَا بَيْنَ المَدِينَةِ وَصَنْعَاءَ»

“ (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என (நபி-ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள்.

நூல்: (புகாரி: 6592)

மதம் மாறியவர்கள் தடுக்கப்படுதல்.

إِنِّي فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، مَنْ مَرَّ عَلَيَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، لَيَرِدَنَّ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

அறி: சஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: (புகாரி: 6583)

عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَذُودَنَّ رِجَالًا عَنْ حَوْضِي، كَمَا تُذَادُ الغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الحَوْضِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன்மீது ஆணையாக! (தனது குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்:  (புகாரி: 2367)

إِنِّي عَلَى الحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ، وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي، فَأَقُولُ: يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي، فَيُقَالُ: هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ، وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ ” فَكَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ: «اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ أَنْ نَرْجِعَ عَلَى أَعْقَابِنَا، أَوْ نُفْتَنَ عَنْ دِينِنَا» {أَعْقَابِكُمْ تَنْكِصُونَ} [المؤمنون: ]: «تَرْجِعُونَ عَلَى العَقِبِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன்.

அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.

அறி: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) ,
நூல்: (புகாரி: 6593)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள்.

أَنَا فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، وَلَيُرْفَعَنَّ مَعِي رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيُخْتَلَجُنَّ دُونِي، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ

பித்அத்வாதிகள் தடுக்கப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள்.

உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும்.

அறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: (புகாரி: 6576)

சமுதாயத்தில் நுழைந்துள்ள ஏராளமான பித்அத்கள்

  • தஸ்பீஹ் தொழுகை எனும் பித்அத்.
  • ஸலாத்துல் ஹாஜத் எனும் பித்அத்.
  • தொழுகையின் நிய்யத்தில் பித்அத்.
  • தொழுகைக்குப் பிறகு உள்ள கூட்டு எனும் பித்அத்.
  • தொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு எனும் பித்அத்.
  • நோன்பின் நிய்யத்தில் பித்அத்.
  • ஸஹருடைய நேரத்தில் பித்அத்
  • நோன்பு திறக்கும் போது ஓதும் துஆவில் பித்அத்.
  • நபியவர்களுக்காக உம்ரா எனும் பித்அத்.
  • நபியவர்கள் சார்பாக நாம் குர்பானி எனும் பித்அத்.
  • திக்ரு செய்வதில் பித்அத்.
  • தராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து எனும் பித்அத்.
  • ஷாதுலிய்யா தரீக்கா எனும் பித்அத்.
  • ஷாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா எனும் பித்அத்.
  • மௌலூது, ராத்தீபு, புர்தா எனும் பித்அத்.
  • நரகிற்கு வழிகாட்டும் சுப்ஹான மௌலூது எனும் பித்அத்.
  • புர்தா ஷரீபின் எனும் பித்அத்.
  • முஸாபஹாவில் பித்அத்.
  • மீலாது மற்றும் மவ்லித் எனும் பித்அத்.
  • ரபியுல் அவ்வல் மாத பித்அத்.
  • முஹ்ர்ரம் மாத பிஅத்கள்.
  • மிஹ்ராஜ் நாள் பித்அத்கள்.
  • பராஅத் இரவு பித்அத்கள்.
  • சபர் (பீடை) மாதம் என்ற பெயரில் பித்அத்கள்.
  • மரண சடங்குகளில் பித்அத்.
  • கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதும் பித்அத்.

இவையெல்லாம் பித்அத்துகள் மறுமையில் பெரும் பாவத்தை பெற்று தரும் என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு எத்தனை முறை சுட்டிக் காட்டினாலும் அதை திருத்திக் கொள்ளாத மக்கள், பித்அத்திலேயே இன்பம் காணக்கூடிய மக்கள், ஹவ்ளுல் கவ்ஸர் நீர் தடாகத்திலிருந்து தடுக்கப்படுவார்கள்.

எனவே பித்அத்களை செய்து மறுமையில் கிடைக்கும் சிறிய ஆறுதலான ஹவ்ளுல் கவ்ஸர் நீர் தடாகத்தின் நீரை குடிக்க முடியாதவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது. இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

செவி, பார்வை, உள்ளத்தைப் பற்றிய விசாரணை

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன்: 17:36)

இதன் பின்னர், நடக்கும் நிகழ்வுகளை, தொடர் விசாரனைகளை, இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் வரிசையாக காண்போம்.