22) பாதை திரும்பிய பஹ்ரைன் மக்கள்
இதயங்களிலிருந்து வாய்களின் வழியாக ஓசையாக மட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்ததிருக்குர்ஆன் யமாமாப் போரின் தாக்கத்தால் எழுத்துக்கள் வடிவில் ஏடுகளில் பதிவாகின.இவ்வாறு ஏடுகளில் திருக்குர்ஆன் பதிவாகி பாதுகாக்கப்படும் இந்தப் புனிதப் பணிக்கு மட்டும்யமாமா போர் காரணமாக இருக்கவில்லை; இஸ்லாத்தை விட்டு, ஈமானை விட்டு வெளியேபோன மக்கள் உளப்பூர்வமாக உள்ளே வருவதற்கு ஒரு தோரண வாயிலாகவும் அமைந்துவிட்டது.
“ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் உண்மையானகொள்கை; நாம் இடையே கண்ட கொள்கை போலியானது, பொய்யானது” என்ற விஷயம் நன்குவிடியும் காலைப் பொழுது போல் மதம் மாறிய மக்களுக்குப் புலனானது.
இதற்கு எடுத்துக் காட்டாக பஹ்ரைன் மக்களைக் கூறலாம். மதீனாவை அடுத்து முதன் முதலில்ஜும்ஆ நடத்தப்பட்ட பள்ளிவாசல் பஹ்ரைனில் இருக்கும் ஜுவாஸா என்ற கிராமத்தில் உள்ளபள்ளிவாசல் தான். இந்த பஹ்ரைன் நாடு ஜும்ஆவை மட்டும் நடத்திக் கொண்டு சும்மாஇருக்கவில்லை. மதீனாவில் அமைந்த மத்திய அரசுக்கு ஜிஸ்யா வரியையும் செலுத்திக்கொண்டிருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பஹ்ரைன் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்குப்பின்னால் தான் இவ்வாறு வரி செலுத்தத் துவங்கியது. இந்த ஒப்பந்தம் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டுநடந்தது.
அப்போது பஹ்ரைன் நாட்டு அதிகாரியாக இருந்தவர் முன்திர் பின் சாவா ஆவார். அவர்இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். பஹ்ரைன் நாட்டின் மீது நபி (ஸல்) அவர்கள் கொண்டிருந்தஉறவும் உடன்படிக்கையும் மதீனாவில் அமைந்த இஸ்லாமிய அரசுக்குப் போதிய வருவாயைஅளித்துக் கொண்டிருந்தது. இதைப் புகாரியில் இடம் பெறும் ஹதீஸ்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களைப்பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்துக் கொண்டு வரும் படி அனுப்பினார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் ஹள்ரமி (ரலி) அவர்களைத் தலைவராக்கி இருந்தார்கள்.
அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)அவர்கள் நிதியுடன் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல,அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்து விட்டுத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம்சைகையால் கேட்டார்கள். அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா ஏதோ கொண்டு வந்திருக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நான்நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.
“ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்றுநம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான்அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப் பட்டு, அவர்கள் அதற்காகப்போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல்உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அவ்ஃப் அல் அன்சாரி (ரலி),
(புகாரி: 3158)
பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருட்கள் கொண்டு வரப்பட்டன. “அவற்றைப்பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்)அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அது தான் மிக அதிக அளவாக இருந்தது.அதற்கு எந்த மதிப்பும் அளிக்காமல் நபி (ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 421)
பஹ்ரைனுக்கும், மதீனாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார ரீதியிலான உறவுஅபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நீடித்தது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்துஅறியலாம்.
“பஹ்ரைன் நாட்டிலிருந்து பொருட்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்”என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரைபஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில்பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்த போது, “நபி (ஸல்) அவர்கள் யாருக்காவதுவாக்களித்திருந்தால் அல்லது கடன் பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்” என்று அபூபக்ர் (ரலி)அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று, “நபி (ஸல்) அவர்கள் இன்னின்னபொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கைநிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்த போது ஐநூறுநாணயங்கள் இருந்தன. “இது போல் இன்னும் இரண்டு மடங்கு எடுத்துக் கொள்வீராக!” என்றுஅபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(புகாரி: 2296)
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்துக் கொஞ்ச நாள் கழித்து,பஹ்ரைனை ஆண்டு கொண்டிருந்த அதிபர் முன்திர் பின் சாவா மரணிக்கின்றார். மரணவேளையின் போது தனக்கு அருகில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், “மரணிக்கும் ஒருவர், தான் விட்டுச் செல்லும் சொத்தில் தனக்காக எவ்வளவு பயன்படுத்திக்கொள்ளலாம்? இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் நிர்ணயம் செய்துள்ளார்களா?” என்றுவினவினார்கள்.
அதற்கு அவர்கள், “மூன்றில் ஒன்று” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள். “அந்தமூன்றில் ஒன்றை நான் என்ன செய்ய வேண்டும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?” என்றுமுன்திர் பின் சாவா கேட்டார். “நீங்கள் விரும்பினால் உங்களது உறவினருக்கு அதைச்செலவழிக்கலாம்; நீங்கள் விரும்பினால் தேவையுடையோருக்கு வழங்கலாம்; அல்லது அதைஉமக்குப் பின்னால் உள்ளவருக்காக வக்ஃப் செய்து விடலாம்” என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)பதிலளித்தார்கள். அதற்கு அவர், “அதை பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாமைப் போல் ஆக்கவிரும்பவில்லை” என்று பதிலளித்து, அது போலவே செய்து விட்டு இறந்து விட்டார்.
திருந்தினார்கள்; திரும்பினார்கள்
முன்திர் பின் சாவா இறந்ததும், முன்திர் பின் நுஃமான் என்பவன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான்.மக்கள் பாதை மாறத் தொடங்கினார்கள். “முஹம்மத் ஓர் இறைத் தூதர் என்றால் அவர்இறந்திருக்க மாட்டார்” என்று அவர்களில் ஒரு சிலர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.இந்த வாதத்தில் பலர் பாதம் சறுகினர்.
பஹ்ரைன் நாட்டினர் இப்படி ஒட்டு மொத்தமாகத் தடம் மாறிப் போன அவ்வேளையில்அந்நாட்டின் ஓர் அங்கமான ஜுவாஸாவும் ஆட்டம் கண்டது. மத மாற்றம் எனும் நெருப்புபஹ்ரைன் என்ற வளையத்தைச் சுற்றி எரியும் போது அதன் உள்ளே சூடத்தைப் போன்றுஇருக்கின்ற ஜுவாஸாவின் மீது பற்றிப் பரவாமல் இருக்குமா? நிச்சயமாக பற்றும். ஆனால்அந்தத் தீ அதைத் தாண்டவில்லை; தீண்டவுமில்லை. அதற்குக் காரணம் அங்கிருந்தகண்ணியத்திற்குரிய நபித்தோழர் ஜாரூத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் தான்.
“அப்துல் கைஸ் கூட்டத்தாரே! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் தெரிந்தால்சொல்லுங்கள். இல்லையேல் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார். அதற்குஅவர்கள் சரி என்றனர்.
“முஹம்மது நபிக்கு முன்னால் அல்லாஹ்வின் தூதர்கள் வந்திருந்தார்களா?” என்று ஜாரூத் (ரலி)கேட்டதும், அவர்கள் “ஆம்” என்றனர். “நீங்கள் அவர்களைப் பற்றிக் கேட்டு அறிந்தீர்களா? அல்லதுபார்த்து அறிந்தீர்களா?” என்று கேட்டார்.
“நாங்கள் பார்த்து அறியவில்லை. கேட்டுத் தான் அறிந்திருக்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். “அவர்கள் என்ன ஆனார்கள்?” என்று கேட்க, “அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்” என்றுஅம்மக்கள் பதிலளித்தனர்.
“அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லவா? அதைப் போல் முஹம்மத் (ஸல்)அவர்களும் இறந்து விட்டார்கள். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் மனப்பூர்வமாகஒப்புக் கொண்டிருக்கிறேன்” என்று ஜாரூத் (ரலி) சொன்னார்.
இவ்வாறு அவர் சொன்னதும், “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நாங்களும்மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறோம்” என்று அம்மக்கள் கூறினார்கள். சத்தியத்திலேயேநிலைத்து நின்றார்கள்.
முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்கள்
ஜுவாஸா மக்கள் இஸ்லாத்தில் நிலைத்து நின்றது அவர்களைச் சுற்றி வாழ்ந்த ஊர் மக்களிடம்ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே மதம் மாறிய அவர்கள் அப்துல் கைஸ் கூட்டத்தினர்வசிக்கும் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டனர். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப்பொருட்கள் உள்ளே செல்வதையும் தடை செய்தனர். இதனால் அம்மக்கள் கடுமையான பசிக்கும்,பட்டினிக்கும் உள்ளாயினர்.
இந்நிலையில், முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்களைக் காப்பதற்காக ஒரு படையை அலா பின்ஹள்ரமி (ரலி) அவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைக்கின்றார்கள். அலா பின் ஹள்ரமி (ரலி) பஹ்ரைனை நெருங்கியதும் யமாமாவைச் சேர்ந்தசுமாமா (ரலி) மக்கள் கூட்டத்துடன் வந்து அவருடன் சேர்ந்து கொண்டார்கள். சுமாமாவை அலாபின் ஹள்ரமி தகுந்த மரியாதையுடனும், மிகுந்த அன்புடனும் வரவேற்றனர்.
ஓட்டம் பிடித்த ஒட்டகக் கூட்டம்
இந்தச் சூழலில் இஸ்லாமியப் படையினருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. பயணத்தின் ஊடேஓய்வுக்காக ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அந்த இடத்தில் ஒரு துளியளவு கூட தண்ணீர்கிடையாது. அந்த இடத்தில் இறங்கிய மாத்திரத்தில், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் ஒட்டகக்கூட்டம் ஓட்டம் பிடித்து விட்டன. படையினரின் உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பைகள்அனைத்தும் அந்த ஒட்டகங்கள் மீது தான் இருந்தன. அதனால் குடிப்பதற்கு நீர், உண்பதற்குஉணவு எதுவும் தங்கள் கைவசம் இல்லாது, கையறு நிலையில் அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.உடுத்திருக்கும் ஆடைகள் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை.
இப்படி ஓர் இக்கட்டான வேளையில், கும்மிருட்டில் வேறு வழி தெரியாது அவர்கள் திகைத்துப்போய் விட்டனர். அலா பின் ஹள்ரமியின் கவனத்திற்கு இது வருகின்றது. அலா பின் ஹள்ரமிஅவர்கள் கண்ணியமிக்க ஓர் அறிஞர். பிரார்த்தனைகள் அங்கீரிக்கப்படும் தகுதி வாய்ந்தவர் என்றுமக்களிடம் அறியப்பட்டிருந்தார்.
மக்கள் அவரை இது தொடர்பாக அணுகியதும், அல்லாஹ்வின் ஆற்றலை அவர் அம்மக்களிடம்எடுத்துரைத்தார். பொறுமை காத்து அவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தநெருக்கடியைத் தீர்த்து வைக்குமாறு, சுப்ஹ் தொழுகை முடிந்து எல்லோரும் அல்லாஹ்விடம்உருக்கமாகப் பிரார்த்தித்தனர். அவர்கள் கையை ஏந்தியிருக்கும் போது சூரிய ஒளி தலைகாட்டுகின்றது. அதன் ஒளிக் கதிர் மணற்பரப்புகளில் பட்டுத் தெறிக்கின்றது.
அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்று, அருகில் ஒரு சுனையில் நீர் சுரக்கச் செய்தான். ஊற்றுபெருக்கெடுத்து ஓடியது. மக்கள் அதில் குடித்தார்கள்; குளித்தார்கள்; உள்ளம் குளிர்ந்தார்கள்.இந்நிலையில் ஓடிய ஒட்டகக் கூட்டம் திரும்ப வந்தது.
புனித மார்க்கத்தை விட்டு ஓடி, புது மதம் புகுந்தவர்களை எதிர்த்து அலா பின் ஹள்ரமிஅவர்களின் படை ஆயத்தமாகின்றது.