22) ஹுனைன் யுத்தம் – ஹிஜிரி 8 துல்கஅதா
ஹுனைன் என்பது ‘தில் மஜாஸ்’ என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது.
மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.
இவர்களில் ஹவாஸின், கத்ஃபான், ஸகீஃப் கோத்திரத்தினர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும் ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர். முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது இந்தக் கோஷ்டிகளுக்கு மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் தென்படவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க மாலிக் இப்னு அவ்ஃப் நஸ் என்பவனின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஹுனைன் போரின் போது ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் மற்றவர் களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர் கொண்டனர். (புகாரி: 4337)
அனஸ் கூறுகிறார் இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப் பட்டன. பிறகு காலாட்படையினரும் அதற்குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால் நடைகளும் நிறுத்தப்பட்டன (முஸ்லிம்: 1914)
மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி
ஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், நபி (ஸல்) அவர்கள் பத்தாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார;கள். இவர்களில் பெரும்பாலோர; புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள்
மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து “நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்” என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர;கள் இன்ஷா அல்லாஹ்! நாளை அவை முஸ்லிம்களின் கனிமா பொருளாகிவிடும்” என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார;. (அபூதாவூது 2140)
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!”
(அல்குர்ஆன்: 7:138 என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி) நூல் :
(அஹ்மத்: 20892)
நோன்பை விடுமாறு கட்டளையிடுதல்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மக்கா வெற்றிக்குப் பின்) ஹுனைன் நோக்கி (புனிதப் போருக்காகப்) புறப்படத் திட்ட மிட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) பல தரப்பட்டவர்களாயிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை…. அல்லது தண்ணீர்ப் பாத்திரத்.ை.. கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ….அல்லது தமது வாகனத்தில்…. வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர் களிடம், நீங்களும் நோன்பை விடுங்கள் என்று சொன்னார்கள். (புகாரி: 4277)
உளவாளிகள் ஊடுருவுதல்
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்த போது அவர்களிடம் இணைவைப்பவர்களி டையேயிருந்து உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் பேசியபடி அமர்ந்து கொண்டான்; பிறகு, திரும்பிச் சென்று விட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), அவனைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். நான் அவனை (தேடிப் பிடித்துக்) கொன்று விட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனது உடைமைகளை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) உபரியாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். (புகாரி: 3051)
முஹஸ்ஸப் பள்ளத்தாக்கில் முகாமிடுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி முடிந்து) ஹுனைன் (போருக்குச்) செல்ல திட்டமிட்ட போது, அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப் போகும் இடம் பனூ கினானா குலத்தாரின் (முஹஸ்ஸப் என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (மக்கா குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சபதம் செய்தார்கள் என்று கூறினார்கள். (புகாரி: 4285)
முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்
இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.
மேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
முஸ்லிம்கள் பின்வாங்கி ஓடுதல்
எதிரிகளின் அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்காத முஸ்லிம்கள் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஹுனைன் போரின் போது ஹவாஸின் குலத்தார் (நபி -ஸல்-அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (புனிதப் போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின் போது) மன்னிப்பளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அப்போது (ஹவாஸின் குலத் தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.
(புகாரி: 4333)
நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுப் பின்வாங்கிச் சென்று விட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள். அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்து விடாமல் (இடைவெளி இருக்கு மாறு) பார்த்துக் கொண்டார்கள். தம் வலப்பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைக்க அவர்கள், இதோ, வந்துவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள் என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் இடப்பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைத்தார்கள் அவர்கள் (மீண்டும்), இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், அல்லாஹ்வின் தூதரே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம் என்று சொன்னார்கள்.
(புகாரி: 4337)
நபி (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை விட்டு) இறங்கி, நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன் என்று சொன்னார்கள். (பிறகு, அந்தப் போரில் இணை வைப்பவர்கள் தோற்றுவிட்டனர்.
(புகாரி: 4333)
ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு விட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மை தானா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், (ஆம், உண்மைதான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள் அல்லாஹ்வின் தூதரோ பின்வாங்கிச் செல்லவில்லை.
நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களை தமது பைளா என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் இறைத் தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன் என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். அன்று நபி (ஸல்) அவர்களை விடத் துணிச்சலுடையவர் எவரும் மக்க ளிடையே காணப்படவில்லை என்று கூறினார்கள்
(புகாரி: 2864, 3042)
கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க் களத்தில் நாங்கள் சந்தித்த போது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்). நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சுற்றிக் கொண்டு அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டு விட்டு) என்னை இறுக அணைத்துக் கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன்.
பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான். உடனே நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைச் சென் றடைந்து, மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இது) அல்லாஹ் விதித்த விதி என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.
(புகாரி: 3142)
பின்வாங்கி ஓடியவர் உமர் போன்ற மிகப் பெரும் ஸஹாபாக்களும் இருந்தார்கள். கதாதா (ரலி) கூறுகிறார் நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன். நான் அப்போது (தோற்ற மக்களிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், மக்களுக்கு என்னாயிற்று? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொன்னார்கள். பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள்.
(புகாரி: 4322)
முஸ்லிம்கள் பின்வாங்கி ஓடியதைப் பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு பேசுகிறது. பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தவர்களைத் தண்டித்தான். இது மறுப்போருக்குரிய தண்டனை. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்: 9:25-27
அவ்தாஸ் சம்பவம்
போல் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர் ஒரு பிரிவினர் தாயி பை நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் நக்லா என்ற ஊரை நோக்கி ஓடினர் மற்றும் ஒரு பிரிவினர் அவ்தாஸை நோக்கி ஓடினர். அதற்கு அபூ ஆமிர் ஏழி) தலைமை ஏற்றார். அவ்தாஸ் சம்பவம் தொடர்பாக புகாரியின் அறிவிப்பைக் காண்போம்.
அபூ மூசா ரலி அவர்கள் கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போளர் முடித்துக் கொண்டு திரும்பிய போது ஆயிர் அவர்களை தளபதியாக்கி அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிறகு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள் அப்போது ஆமிர் அவர்கள் (கவிஞன்); துரைத் பின் ஸிம்மா வைச் சந்தித்தார்கள். அவர்கள் இருவருக்கு மிடையில் சண்டை நடந்தது அதில்) துரைத் கொல்லப்பட்டான் அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்கு! அனுப்பியிருந்தார்கள் அப்போரின் போது அபூஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து அதை அவர் களது முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று என தந்தையின் சகோதரரே உங்கள் மீது அம்பெய்தவன யார்? என்று கேட்டேன். என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ! என்று (அவனை நோக்கி என்னிடம் சைகை காட்டினார்கள்.
நான் அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான் அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே என்னைக் கண்டு ஓடுகிறாயே உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா? என்று கேட்டேன் உடனே அவன் ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆயிர் அவர்களிடம் (சென்று) உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் என் மூலம் கொன்று விட்டான் என்று கூறினேன் பிறகு எனது முழங்காலில் பாய்ந்திருக்கும்! இந்த அம்பைப் பிடுங்கியெடு என்று அவர்கள் கூற உடனே நான் அதைப் பிடுங்கினேன் அதிலிருந்து தீர் கொட்டியது. என் சகோதர ரின் மகனே தபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்? சலாம் கூறி. எனக்காக (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு என்று அபூ ஆமிர் ரலி அவர்கள் சொன்னார்கள். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்து விட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமிர் ரலி அவர்கள் வீர மரண மடைந்தார்கள்.
பிறகு அங்கிருந்து நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது வீட்டில் பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும்; கட்டிலின் கயிறு ரபி (ஸல் அவர்களின் முதுகிலும், இரு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது பிறகு அவர் களிடம் எங்கள் செய்தியையும் அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆயிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளு செய்தார்கள் பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இறைவா அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயால மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பவரையும் விட அந்தஸ்தில் உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன் உடனே நான் எனக்காகவும் பாவ மன்னிப்புக் கோருங்கள் குபியே) என்று கூறினேன் அதற்கவர்கள். இறைவர் அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்பு வாயாக என்று பிரார்த்தித்தார்கள்
(புகாரி: 4323)
இப்போல் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாயிஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, களிமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாயிஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.
கனீமா பொருட்கள்
இப்போரில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனிமத்துப் பொருட்கள் கிடைத்தன ஆராயிரம் அடிமைகள்
இருபத்தி நான்காயிரம் ஒட்டகங்கள் நாற்பதாம்ரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் வெள்ளிகள் ஆகியவை கனீமத்தாக (வெற்றிப் பொருளாகக் கிடைத்தன. நபி (ஸல்) இவற்றை ஒன்று சேர்த்து
ஜிஃரானா என்ற இடத்தில் வைத்து அதற்கு மஸ்து இப்னு அம்ர் கிஃபாயை பாதுகாவலராக நியமித்தார்கள்.தாயிஃப் சென்று திரும்பிய பிறகுதான் இவற்றை நபி (ஸல்) பங்கிட்டார்கள்.
தாயிஃப் போர்
இப்போர் உண்மையில் ஹுனைன் போரின் ஒரு தொடராகும். ஹவாஜின் எஸ்கிப் கிளையினரில் தோல்வியடைந்த அதிகமானவர்கள் தாயிஃபில் அடைக்கலம் புகுந்தனர் தாம் பின் கோட்டையில் எதிரிகள் அடைக்கலம் புகுந்திருந்தனர். அக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள் அந்த முற்றுகை நாற்பது நாட்கள் நீடித்தது (முஸ்லிம்: 1914)
அப்துல்லாஹ் பின் அமர் ரலி அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்ட போது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இறைவன் நாடினால் நாம் நாளை மதீனாவுக்குத் திரும்பிச் செல்வோம் என்று அவர்கள் சொன்னார்கள் அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள். இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா? என்று பேசிசிக் கொண்டார்கள். நபி ஏபல் அவர்கள் மீண்டும் ஒரு முறை நாம் திரும்பிச் செல்வோம் என்று சொன்னார்கள் பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பக-லேயே போர் புரியுங்கள் என்று சொன்னார்கள் அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய (அதனால்) (பலத்த காயங்களுக்கு ஆளானார்கள் அப்போது நபி ஸல் அவர்கள், இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனா வுக்குத் திரும்பிச் செல்வோம் என்றார்கள். தபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது மகிழ்ச்சியை அளித்தது அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
கோட்டையில் இருந்து வெளியேறி பலர் நபி (ஸல்) அவர்களிடம் சரணடைந்தனர்.அதில் பிரசித்திப் பெற்ற அபூபகராவும் ஒருவர் தாயிஃப் நகர மக்களின் அடிமைகள் சிலரோடு தாயிஃப் கோட்டையின் மதில் கவரைத் தாண்டிக்குதித்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
(புகாரி: 4326)
கனிமத்துகளைப் பங்கிடுதல்
தாயிஃபில் முற்றுகையை முடித்துக் கொண்டு நபி ஸல் ஜிஃரானா திரும்பி அங்கு பத்து நாட்களுக்கு மேவாக தங்கியிருந்தார்கள் ஆனால் கனியத்தைப் பங்கிட பங்கிடவில்ை இவ்வாறு நபி தாமதப்படுத்தியதற்குக் காரணம், ஹவாஸின் கிளையினர் மன்னிப்புக்கோரி தங்களிடம் வந்தால் அவர்களது பொருட்களை திரும்பக் கொடுத்து விடலாம் என்பதற்கே பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் திரும்ப வராததால் களிமா பொருட்களை நபி (ஸல்) பங்கிட்டார்கள் கோத்திரங்களின் தலைவர்களும் மக்காவின் முக்கியப் பிரமுகர்களும் தங்களின் பங்கை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த இவர்களுக்கு களிமா முதலாவதாகவும் அதிகமாகவும் கொடுக்கப்பட்டது. சுதாதா ரளி அவர்கள் எதிரிகளில் ஒருவனைக் கொன்றார்கள் என்பதை நாம் முன்னர் பார்த்தோம்.
நபியவர்கள் கனிமத்துகளைப் பங்கிடும் போது கதாதா ரலி) அவர்கள் தாம் ஒரு எதிரியைக் கொன்றதைப் பற்றி எடுத்துரைத்தார்கள் அது பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்போம். நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு போரில் எதிரி ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உட லிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார்? என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன் மீண்டும் நபி (சல்) அவர்கள் போரில் எதிரி ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள் உடனே நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார்? என்று கேட்டேன் பிறகு உட்கார்ந்து விட்டேன் பிறகு, மூன்றாவது தடவையாக அதே போன்று நபி அவர்கள் சொன்னார்கள் உடனே, நான் எழுந்தேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ கத்தாதாவே உங்களுக் கெள நேர்ந்தது? என்று கேட்டார்கள் நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன் ஒரு மனிதர், இவர் உண்மையே சொன்னார்.
அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன எனக்காக அவரை ஏதாவது கொடுத்துத் திருபதிப்படுத்தி விடுங்கள் என்று சொன்னார் அப்போது அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்கள். இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ் வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு தன்னால் கொல்லப்பட்டவரின் உடலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள் உடளே தமி ஸல் அவர்கள், அபூபக்ர்) உண்மை சொன்னார் என்று கூறி விட்டு அதை எனக்கே கொடுத்து விட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்று விட்டு பலூ சலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன் அது தான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.
(புகாரி: 3142)
ஹுனைன் யுத்தத்தில் பிடிபட்ட கைதிகளிலிருந்து உமர் ரலி) அவர்களுக்கு இரண்டு அடிமைப் பெண்கள் கிடைத்தார்கள் அவ்விருவரையும் அவர்கள் சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஹுனைன் போரில் பிடிமட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போரில் பிடிபட்ட கைதிகளுக்குக் கருணை காட்டி அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டிருந்தார்கள் ஆகவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக நடமாடத் தொடங்கினார்கள் உடனே உமர் ரலி) அவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் அவர்களிடம் அப்துல்லாஹ்வே இங்கே பார் என்ன இது? என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்க் கைதிகள் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள் (உடனே) உமர் ரலி) அவர்கள், அப்படியென்றால் நீ சென்று அந்த இரு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டு விடு என்று கூறினார்கள்
(புகாரி: 3144)
அன்சாரிகளின் குறையும், நபியவர்களின் உருக்கமான உரையும்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ் தனது தூதருக்கு (ஹுனைன் போரில் அளித்த போது அவர்கள் குறைஷிகளில் சிவருக்கு நூறு ஒட்டகங் கள்ளக் கொடுக்கலானார்கள் உடனே அன்சாரிகளில் சிலர், தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பாளாக நமது வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார் நம்மை விட்டு விடுகிறாரே என்று பேசிக் கொண்டார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்களிடம் அவர்களுடைய இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது உடனே தமிஎல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச் சொல்வி அவர்களை முழுதாகப் பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் ஒன்று திரட்டினார்கள் அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்று திரண்டு விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ளதே. அந்தச் செய்தி என்ன? என்று கேட்டார்கள் அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், எங்களில் யோசனையுடையவர்கள் எதுவும் சொல்லவில்லை.
அல்லாஹ்வின் தூதரே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நமது வாட்களில் ஹவாஸின் குலத்தாருடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார். ஆனால், நம்மை விட்டு விடுகிறாரே என்று பேசிக் கொண்டார்கள் என்று பதில் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிராகரிப்பைக் கைவிட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். மக்கள், செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்) கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்பவற்றை விட நீங்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும் என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதரே! ஆம்; நாங்கள் தாங்களே எங்களுக்குப் போதுமென்று) திருப்தியடைந்தோம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்குப் பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களை விட மற்றவர்களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் அருகே அவனது தூதரை (என்னை)யும் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்
(புகாரி: 3147)
நபியவர்களின் மீது நியாயமற்ற புகார்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்ள்:
ஹுனைன் போரின் போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள் உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும் போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும் என்று கூறினார். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளா விட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூசா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி: 3150)
ஹவாஸின் குலத்தினர் இஸ்லாத்தை ஏற்பதும் போர்க்கைதிகளைத் திருப்பிக் கொடுத்தலும்
ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜிஇர்ரானா’ என்னும் இடத்திற்கு) முஸ்லிம்களாக வந்த போது நபி (ஸல்) அவர்கள் எழுந்திருத்தார்கள். (வந்தவர்கள்) நபியவர்களிடம் (முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டார்கள் அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர். (இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்குதர வேண்டியுள்ளது.) பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்துக் கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய போது பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்ட போது எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: உங்க ளுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றாரோ அவர் திருப்பித் தந்து விடட்டும்; அல்லாஹ், (இனி வரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகின்றவரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறேவைத் திருக்கட்டும் என்று கூறினார்கள்.
மக்கள், நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம். அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் இதற்கு யார் சம்மதிக்கிறார், யார் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள் உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள் மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.
(புகாரி: 4318, 4319)
உம்ராவை நிறைவேற்றுதல்
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைத் தாம் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து புறப்பட்டுப் போய்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள் (புகாரி: 3066)
உம்ராவை நிறைவேற்றிய பிறகு மதீனாவை நோக்கித் திரும்பினார்கள்.
கிராம மக்கள் தர்மத்தை வேண்டுதல்
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன் மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; சமுரா’ என்னும் (கருவேல முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந் திருந்தாலும் கூட அவற்றை உங்க ளிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள் என்று கூறினார்கள். (புகாரி: 2821)