21) யமாமாவின் தாக்கமும் இறை மறை ஆக்கமும்

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பிவிடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவேமுடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
(அல்குர்ஆன்: 3:144)
இவ்வசனம் உஹத் போர்க்களத்தில் நடந்த நிகழ்வை ஒட்டி இறங்கியது என்பதை நாம்நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டாலோஅல்லது கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் பழைய பாதைக்குத் திரும்பி விடுவீர்களா?என்ற கேள்வியை இந்த வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் நபித் தோழர்களைநோக்கி முன் வைக்கின்றான்.
அதாவது அப்படி ஒரு கட்டம் வரும். அப்போது நீங்கள் தடம் புரண்டு விடலாகாது என்றஎச்சரிக்கையுடன் கூடிய ஒரு கட்டளையை முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணிக்கும்முன்பே நபித்தோழர்களிடம் கூறுகின்றான்.
அதற்கேற்றாற் போல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது தோன்றி விட்டஅந்தப் போலி நபிகளுடன் நபி (ஸல்) அவர்கள் போரிடவில்லை. ஆட்சி, அதிகாரம்எதிரிகளை எதிர் கொள்ளும் இராணுவ வலிமை இத்தனையும் தன் கை வசம்வைத்திருந்த இஸ்லாமிய அரசின் அந்த அதிபதி, தன் ஆட்காட்டி விரலைஅசைத்திருந்தால் போதும். முஸைலமா என்ற போலித் தூதனின் ஒரு எலும்பு கூடதேறாத வகையில் தோழர்கள் தங்கள் வீர விளையாட்டை ஆடி முடித்திருப்பார்கள்.அவனை முடிந்து போன கதையாக்கி யிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள்அவ்வாறு செய்யவில்லை. தோழர்களின் அந்த ஆட்டக்களம் தூதரின் அந்தமரணத்திற்குப் பின் நிகழட்டும் என்று அல்லாஹ் விட்டு வைத்ததைப் போல்அமைந்துள்ளது. போலி நபி அஸ்வத் அல் அன்ஸீ என்பவனைத் தவிர மற்ற போலிநபிகளான ஸிஜாஹ், தலீஹா அல்அஸதீ, முஸைலமா ஆகிய அனைவரும் நபி (ஸல்)அவர்களின் மரணத்திற்குப் பிறகு தான் எதிர் கொள்ளப்படுகின்றார்கள். அஸ்வத் அல்அன்ஸீ என்பவன் யமனில் பிரோஸ் என்பவரால் நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்குமுன்னால் கொல்லப்பட்டு விடுகின்றான். தலீஹா அல்அஸதீ, ஸிஜாஹ் ஆகியோரதுநிலைகளை இதற்கு முன்னர் நாம் வருகின்ற வரலாற்று வழியில் கண்டிருக்கின்றோம்.
முஸைலமாவின் நிலையை இப்போது தான் பார்த்தோம். போலி நபியாகவாதிட்டவர்களில் முஸைலமா என்பவன் மிகப் பெரிய பிரச்சனைக்குரியவன். போலித்தூதர்களில் வலிமை மிக்க போலித் தூதன். அவனை நபித் தோழர்கள் நபி (ஸல்)அவர்களின் மரணித்திற்குப் பிறகே எதிர் கொள்ள நேரிட்டது. மேற்கண்ட வசனத்தில்அல்லாஹ் குறிப்பிட்ட படி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்தாலோ அல்லதுகொல்லப்பட்டு விட்டாலோ, அவர்கள் கொண்டு வந்த கொள்கையை விட்டு நாங்கள் ஒருபோதும் பின் வாங்கி விட மாட்டோம் என்பதை நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் நடந்த யமாமா போர்க்களத்தில் நபித் தோழர்கள் நிரூபித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர், அவருக்கு நிகராக இனியொரு தூதர் இறுதி நாள்வரை இல்லை என்ற உண்மையை அன்னாரின் தோழர்கள் யமாமா போர்க்களத்தில்வரலாறாக்கியிருக்கின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) மரணமும் முஸைலமா மரணமும்

உலகத்தில் எத்தனையோ ஆன்மீக அரசியல் இயக்கங்கள் உள்ளன. அந்த இயக்கங்களைஉருவாக்கிய தலைவர்கள் இறந்தவுடனே அவர்களது தொண்டர்கள் அப்படியே அவர்காட்டிய பாதையை விட்டு தடம் புரண்டு விடுவர். அவர் கொண்டு வந்த கொள்கையும்அவருடன் சேர்ந்து இறந்து போய் விடும். ஆனால் இந்த சத்தியத் தோழர்களோ, நபி (ஸல்)அவர்கள் இருந்தாலும் இறைத்தூதர் தான், இறந்தாலும் அவர்கள் இறைத்தூதர் தான்என்பதை அவர்கள் இருக்கும் போதும், இறந்த பின்னரும் ஒரு சேர செயல்படுத்திக்காட்டியுள்ளனர். அதற்கு யமாமா போர் ஓர் இரத்த சாட்சியாகும். இந்த உண்மையைஉலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னரும்முஸைலமாவை அல்லாஹ் விட்டு வைத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
உண்மைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் மரணத்தைத் தழுவினார்களே தவிரஅவர்கள் கொண்டு வந்த கொள்கை மரணத்தைத் தழுவவில்லை. ஆனால் போலித் தூதன்முஸைலமாவுடன் அவனது அசத்தியக் கொள்கையும் சேர்ந்தே சாவைச் சந்தித்தது.அத்துடன் அவனைப் பின்பற்றிய சந்ததியினரும் இனந் தெரியாமல் அழிந்து போயினர்.இவ்வாறு அழிந்து போன அவனது ஆதரவாளர்களின் எண்ணிக்கை – தோட்டத்திற்குள்கொல்லப்பட்ட முஸைலமா படையினரின் எண்ணிக்கை பத்தாயிரம் பேர் என்று இப்னுகஸீர் கூறுகின்றார்.
உமது எதிரி தான் சந்ததியற்றவன் (அல்குர்ஆன்: 108:3) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்குமுஸைலமா இலக்கணமானான். ஆதரவற்ற அனாதைப் பிணமானான்.

காலித் கண்ட மகத்தான வெற்றி

முஸைலமாவின் பிணத்தைக் காண்பதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விலங்குபோடப்பட்ட முஜாஆ பின் முராராவுடன் காலித் பின் வலீத் வருகின்றார். இறந்தவர்களைகாலிதுக்கு முஜாஆ அடையாளம் காட்டிக் கொண்டு வருகையில் ஒரு பிணத்தைக் கண்டு, ‘‘இவன் தான் முஸைலமாவா?’’ என்று கேட்டார். அதற்கு முஜாஆ, ‘‘இல்லை. இவன்முஸைலமாவின் ஆளான ரஜ்ஜால் பின் அன்புவா ஆவான். இவன் முஸைலமாவைவிடச் சிறந்தவன் ஆவான்’’ என்று பதிலளித்தான். பிறகு மஞ்சனித்த, மூக்கந்தண்டு சற்றுஉள்ளிறங்கிய ஒரு சடலத்தைக் கடந்து செல்லும் போது, ‘இவன் தான் அந்த ஆசாமி’என்று முஜாஆ அடையாளம் காட்டினான். ‘‘இவனைப் பின்பற்றிய உங்கள் முகங்களில்அல்லாஹ் கரியைப் பூசுவானாக’’ என்று காலித் அவனிடம் இடித்துரைத்தார்.
இதன் பின் கைதிகளையும், போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்களையும் எடுத்து வரதன் குதிரைப் படைகளை காலித் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்துகோட்டைகளைத் தன் கைவசம் கொண்டு வரக் களமிறங்குகின்றார். இப்போது அங்குஎஞ்சியிருந்தவர்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் தான்.
ஆனால் அப்பெண்களைப் போராளிகள் போல் நிற்க வைத்து, இன்னும் போர் வீரர்கள்இருக்கின்றார்கள் என்பது போன்ற ஒரு மாயையை முஜாஆ ஏற்படுத்தி விட்டான்.
ஏற்கனவே நீண்ட நாள் நடந்த போரில் நைந்து வாடிப் போன நபித் தோழர்களை மீண்டும்வாட்டியெடுக்க விரும்பாத காலித், போராளிகள் போல் நின்றிருந்த அந்தப் பெண்களிடம்சமாதானம் பேசினார். உங்கள் முன் உள்ள ஒரே வழி இஸ்லாம் தான் என்று கர்ஜித்தார்.அவ்வளவு தான்.
அலை அலையாக அத்தனை பேரும் இஸ்லாத்திற்கு, அதாவது முஹம்மத் (ஸல்)அவர்கள் தான் உண்மையான தூதர் என்ற கொள்கைக் கோட்டைக்குள் நுழைந்தனர்.
இதன் பின்னர் சிறை பிடித்த கைதிகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்.எஞ்சியவர்களை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்துஒப்படைத்தார்.
அப்படி வந்தவர்களில் உள்ள ஓர் அடிமைப் பெண்ணின் பெயர் ஹனஃபிய்யா. அவரை அலீ(ரலி) தனக்காக எடுத்துக் கொண்டனர். அப்பெண்மணியின் மூலம் பிறந்த குழந்தைக்குமுஹம்மத் என்று பெயரிட்டிருந்தார். அக்குழந்தையின் பெயர் தந்தை அலீ (ரலி)யுடன்இணைக்கப்படாமல் முஹம்மத் பின் ஹனபிய்யா என்று கூறப்பட்டது.

இறை மறை ஆக்கம்

யமாமா ஒரு மாபெரும் வெற்றி வாகையை காலிதுக்குத் தந்தது மட்டுமல்லாமல் அதன்தாக்கம் குர்ஆனிலும் பிரதிபலித்தது. ஆம்! அல்குர்ஆனை மனனம் செய்திருந்த காரிகள்,குர்ஆனைப் படித்து மேதையான பண்டிதர்கள் பெருமளவிலான எண்ணிக்கையில் இதில்மரணமடைந்து விட்டார்கள். இதைப் புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நமக்குத்தெளிவுபடுத்துகின்றது.
வேத அறிவிப்பை (வஹீயை) எழுதுவோரில் ஒருவராக இருந்த ஸைத் பின் ஸாபித்அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
யமாமா போர் நடைபெற்ற பின் அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (அழைத்துவரச் சொன்)னார்கள். அவர்களுக்கு அருகில் இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) கூறினார்கள்:
உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள்கொல்லப்பட்டு விட்டனர். பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர்கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி(நம்மை விட்டு) போய் விடுமோ என்று நான் கருதுகின்றேன்’’ என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’’என்று உமரிடம் கேட்டேன். அதற்கு உமர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக இதுநன்மையானது தான்’’ என்று கூறினார். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இது விஷயத்தில் அவர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். (இறுதியில்)உமரின் கருத்தையே நானும் (சரியெனக்) கண்டேன்’’ என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.அப்போது உமர் (ரலி) பேசாமல் அபூபக்ர் (ரலி)க்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), ‘‘நீங்கள் புத்திசாலியான இளைஞர். உங்களைநாங்கள் சந்தேகப்பட மாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகவஹீ எழுதக் கூடியவராக இருந்தீர்கள். எனவே நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டு பிடித்து(ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’’ என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்குஅவர்கள் கட்டளையிட்டிருந்தால் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது.குர்ஆனை ஒன்று திரட்டும் படி எனக்குக் கட்டளையிட்டது அதை விட எனக்குப் பளுவாகஇருந்தது. நான், ‘‘நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச்செய்யப் போகின்றீர்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை தான்’’ என்று பதிலளித்தார்கள். இதையேநான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.
முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ்விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். ஆகவேநான் எழுந்து சென்று (மக்களின் கைகளிலிருந்த) குர்ஆனைத் தேடினேன். அவற்றைதுண்டுத் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்ச மட்டைகள் மற்றும் மனிதர்களுடையநெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். ‘அத்தவ்பா’ அத்தியாயத்தின் இருவசனங்களை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்.இவை வேறெவரிடமிருந்து (எழுத்து வடிவில்) கிடைக்கவில்லை.
(அவ்வசனங்கள் வருமாறு:)
உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவதுஅவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கைகொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர். அவர்கள் புறக்கணித்தால் “எனக்குஅல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறுயாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்” எனகூறுவீராக!
(அல்குர்ஆன்: 9:128), 129)
திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அவர்களைஅல்லாஹ் கைப்பற்றும் வரை இருந்தது. பின்னர் உமர் (ரலி) அவர்களிடம், அவர்களைஅல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் (ரலி) அவர்களின் புதல்வியார்ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.

(புகாரி: 4679, 4987)