21) மக்கா வெற்றி – ஹிஜிரி 8

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

மக்காவை நோக்கி படையெடுக்க காரணம்

ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனா முஸ்லிம்களுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும் பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாக்கவும் செய்தனர்.

உடனடியாக பனூ குஸாஆ குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்கா இறைமறுப்பாளர்களை தட்டிக் கேட்க தங்கள் தோழர்களை தயார்படுத்தினார்கள்.

மக்காவை நோக்கி

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான்.
அலீ (பின் அபீ தாலிப்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்)அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், நீங்கள் “ரவ்ளத்து காக் என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்களின் தலைவர்களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்! கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்: (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள் என்று கூறினார்கள். பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப் பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம் கடிதம் எங்கே? அதை எடு) என்று கேட்டோம் அவள் எம்மிடம் கடிதம் எதுவுமில்லை என்று பதிலளித்தாள். (

அவள் அமர்ந்திருந்த ஒட்டகத்தை தாங்கள் படுக்க வைத்து அந்தக் கடிதத்தைத் தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய்சொல்ல மாட்டார்கள் ஒன்று நீயாக கடிதத்தை எடுத்துக் கொடு) அல்லது உன்னைச் சோதிப்பதற்காக உனது ஆடையை நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும் என்று நாங்கள் சொன்னோம் விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள் (அங்கிருந்து அந்தக் கடிதத்தை வெளியில் எடுத்தாள் அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்! அவர்களை நோக்கி நடந்தோம் அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர் குஹாதிப் பின் அபீ பல்தஆ அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும். இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார் என்னை விடுங்கள்: அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன் என்று கூறினார்கள் அப்போது தபி (ஸல்) அவர்கள் ஏஹாதிப் அவர்களை நோக்கி ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள் அல்லாஹ் வின் மீதாணையாக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல.

இணைவைப்பாளர்களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து. அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும் என் மனைவி மக்களையும் என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர் என்று கூறினார். (இதைக் கேட்ட தபி ஸல்! அவர்கள், இவர் உண்மை சொன்னார் இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள் என்று (தோழர்களைப் பார்த்துக் கூறினார்கள். அப்போது உமர் ரலி அவர்கள், இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும். இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார் என்னை விடுங்கள் இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று (மீண்டும்) கூறினார்கள்.

அப்போது தபி (ஸல்) அவர்கள். இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது அல்லது உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா? என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். (புகாரி: 3983)

மக்கா வெற்றிக்கான பயணம் ஹிஜ்ரி ஆம் ஆண்டு ரமளான் மாதம் கி. பி 630 இல் நடைபெற்றது. நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் மக்கா நோக்கி புறப்பட்டார்கள் ரமலான் மாதம் என்ற காரணத்தினால் அனைவரும் நோன்பு நோற்றிருந்தனர். மக்காவிற்கு செல்லும் வழியில் அல் ஹதீக் என்னும் இடத்தில் நோன்பை விட்ட நபி(ஸல்) அவர்கள். பிறகு அந்த மாதம் முடியும் வரை நோன்பை வைக்கவில்லை. இதிலே நபியவர்களுடன் பல குலத்தவர்களும் சேர்ந்து கொண்டனர் அப்போது. நபியவர்களுக்கு மிக கலபமான முறையில் மக்கா வெற்றி கிடைத்தது. எதிர்ப்புகள் ஒன்றும் இருக்கவில்லை பெரும்பாலும் மக்காவாசிகள் அனைவர்களும் பயந்தே இருந்தனர்.

இது பற்றிய விளக்கம் அறிய பார்க்க (புகாரி: 4272, 1948, 1944, 4279, 3983, 4274, 3007, 4286, 4280, 4290, 3171, 4287, 2988, 4305, 4306, 4307, 4308, 6641, 4302, 2434, 2432, 2236, 1176, 1175, 4298, 4299)

பயணத்தில் நோன்பை விடுதல்

இப்னு அப்பாஸ் அவர் கூறுகிறார்கள் நபி அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு விக்க வெற்றி போருக்காக மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள் இது நபி அ அகமதீனாவிற்கு செய்து வருகை தந்ததியிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது. தமி அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு தோற்றபடி பயணம் செய்தார்கள் இறுதியில் கநீர் என்னுமிடத்திற்குச் இந்த இடம் உ பானுக்கும் குதை எனுமிடத்திற்குமிடையே உள்ள தீப் பகுதியாகும் புங்கு (ஸல்) அவர்கள் நோன்ளய மீட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்
நபி அவர்கள் மதினாலிருந்து மக்காவிற்கும் பணம் வேற் கொண்டார்கள் அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள் உட்டான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள மாத்திரம் கொண்டுவரச் செய்து மன்னின் பகற் பொழுதில் மக்கள் வேண்டு மென்பதற்காக அதை அருத்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள் மக்காலை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை. (புகாரி: 4275)

அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி படையெடுத்து வரும் செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற் கொண்டு மர்ருழ் ழஹ்ரான்’ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூசுஃப்யான், இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, இது (குபாவில் குடியிருக்கும் குஸாஆ’ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள் என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை) என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (புகாரி: 4280)

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே ! அபூ சுஃப்யான் (மதிப்பு, மரியாதை என்ற) இந்தப் பெருமிதத்தை விரும்பக்கூடியவர். எனவே அவருக்காக ஏதாவது ஆக்குங்கள் ! என்று கூறினார். அதற்கு நபியவர்கள் “ஆம் ! (குரைஷிகளில் யார் அபூ சுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர். யார் தன்னுடைய வீட்டின் கதவினை தாழிட்டுக் கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர்” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 2626)

மக்காவிற்குள் இஸ்லாமியப் படை நுழைதல்

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க் கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள். (புகாரி: 5808)

வழி குறுகலாக உள்ள ‘கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார்.

இது பற்றி புகாரியில் வந்துள்ள அறிவிப்பைக் காண்போம்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்) என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் அப்பாஸே! இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர் என்று பதிலளித்தார்கள். (உடனே) எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!) என்று அபூசுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார்.

பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் -ரலி- அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்க, இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர் அவருடன் தான் (அன்சாரிகளின் கொடியிருக்கிறது என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும் யுத்த நாளாகும். இன்று கஅபாவின் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும் என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு) என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர், (அல்லாஹ்வின் தூதர் -ஸல்-அவர்களிடம்) சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள். இப்படி… இப்படி… எல்லாம் கூறினார் என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார் என்று சொல்லிவிட்டு, மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கிய மான) நாள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) ஹஜூன் என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான கதா’ என்னும் கணவாய் வழியாக மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் குதா வழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர். (புகாரி: 4280)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணிகளான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள்.

அப்போது அவர்களது பார்வை யில் நான் பட்டபோது, “அபூஹுரைரா நீயா?” என்று கேட்டார்கள். நான், “(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அப்போது அவர்கள், “ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)” என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்” (முஸ்லிம்: 3647)

குறைஷிகளுக்கு அபயமளித்தல்

அன்சாரிகளின் படை நபியவர்களை சுற்றிக் குழுமியது. இந்தப் படையைக் கண்டதும் குறைஷியம் கடும் அச்சம் கொண்டனர். இது பற்றி முஸ்லிமில் இடம் பெற்றுள்ள செய்தியைக் காண்போம்.
(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, “இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பிவைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடு வோம்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம் படையினரிடம்) “நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)” என்று கூறிவிட்டு, தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, “நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்”பிறகு “நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை “ஸஃபா’ மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்” என்று கூறி(விட்டுப் போனார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை. முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.
(முஸ்லிம்: 3647, 3648, 3649)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார் யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார் என்று கூறினார்கள் (முஸ்லிம்: 3647, 3648, 3649)

அன்சாரிகளின் குறையும் நபியவர்களின் உரையும்

நபியவர்கள் குரைஷிகளுக்கு அபயம் அளித்தார்கள்
அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் இந்த மனிதருக்கு நபியவர்களுக்கு தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது” என்று பேசிக்கொண்டனர். அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு “வஹீ வந்தால், அது எங்க ளுக்குத் தெரியாமல் போகாது அப்போது “வஹி முடிவடையும்வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தமாட்டர்.
அவ்வாறே “வஹி வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரி சமுதாயமே! என்று அழைத்தார்கள் அம்மக்கள் இதோ வந்தோம், அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினர் இம்மனித ருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட் டது என்று நீங்கள் சொன்னீர்கள்தானே)?” என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஆம்; அவ்வாறு கூறவே செய்தோம்” என்று (உண்மை) சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்வாறாயின் (முஹம்மத் புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன் நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான், என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகள் அழுதுகொண்டே வந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர் என்று சொன்னார்கள். அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர். (முஸ்லிம்: 3647, 3648, 3649)

கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கினார்கள். மேலும் உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது” (17:81) என்றும் உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. இனியும் செய்யப்போவதில்லை” (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள் (முஸ்லிம 3650)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள் அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது” என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் ஸஃபா குன்றுக்கு வந்து அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள் (முஸ்லிம்: 3647, 3648, 3649)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவர் அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் இதைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை. (புகாரி: 1601)

மக்கா வெற்றியின் போது மாநபியின் நிலை

பொதுவாக எந்த வெற்றியின் போதும் எந்த தலைவனாக இருந்தாலும் ஆர்ப்பரிப்பதும் கொக்கரிப்பதும் தான் நடைபெறும். ஆனால் அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்கள் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதை கண்டு இறைவனை போற்றிப் புகழும் வகையில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) “அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியா யத்தைத் “தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன். (புகாரி: 4835)

இப்னு ஹதல் கொல்லப்படுதல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொன்றுவிடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள். (புகாரி: 1846)

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி …

மக்கா வெற்றி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு என்பதை நாம் அறிவோம். காரணம் அரபுலகில் பலரும் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றி எனும் இந்நிகழ்வையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய நிகழ்வு நடைபெற்றதும் அலைஅலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தனர்
அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந் தார்கள். நாங்கள் அவர்களிடம் “மக்களுக் கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப் பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள். “அவரை அவருடைய குலத்தாரான குறைஷியருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். (புகாரி: 4302)

கஃபாவின் சாவியை வேண்டுதல் நபித்தோழர்களுடன் தொழுகை
மக்காவில் நுழைந்ததும் கஃபாவின் சாவியை கேட்டு வாங்கி, தாமே கஃபாவை திறந்தார்கள். பிறகு உள்ளே தொழுதார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது “கஸ்வா எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர்.

இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் “(கஅபாவின் சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபி (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு(உள்ளே நுழைந்து)விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன் அவர்கள், “அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையி-ருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது. (புகாரி: 4400)

மக்காவின் புனிதம் பற்றி பொது அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், “இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காக வும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்கா வெற்றி நாளில், “(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான்.

அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமான தாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப் படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுகளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆம்) “இத்கிரை’த் தவிர” என்று விடையளித்தார்கள். (முஸ்லிம்: 2632)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹு தஆலா மக்காவை துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கி யுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பக-ன் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்ப வருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக் கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரத் தான் என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். (புகாரி: 2434)

உயர் குலப் பெண்ணின் திருட்டும் நபியவர்களின் உத்தரவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந் துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்? என்று கேட்டார்கள்.

உடனே உஸாமா (ரலி) அவர்கள், எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்த தெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான் முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப் பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்; மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளது தேவையைப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன். (புகாரி: 4304)

அதன் பிறகு சில நாட்கள் நபிகள் நாயகம் மக்காவில் தங்கி முக்கிய போதனைகளை செய்தார்கள். இது தான் மக்கா வெற்றியின் சுருக்க நிகழ்வுகளாகும். இணைவைப்பு எனும் அசத்தியம் அழிந்து ஏகத்துவம் எனும் சத்தியம் வெற்றி வாகைசூடியது.

இந்த வெற்றி முஸ்லிம்களுக்கு வலிமையையும் கண்ணியத்தையும் அளித்தது. அது நாள் வரையிலும் மக்காவில் அடிமைப்பட்டுக்கிடந்த முஸ்லிம்கள் கண்ணியத்தை பெற்றார்கள். முழு அரபுலகமும் இஸ்லாமின் வசமானது. முஸ்லிம்களின் நற்பண்புகளால் இஸ்லாம் மென்மேலும் வளர்ச்சியை அடைந்தது.

ஜூதைமா குலத்தார் சம்பவம்

காலித் (ரழி) அவர்களுக்கு ஜுதைமா சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் பணியை நபி (ஸல்) வழங்கினார்கள். இது ஹிஜிரி 8 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 350 தோழர்களுடன் புறப்பட்ட அப்படையில் முஹாஜிர்களும், அன்சாரிகளும், ஸுலைம் கூட்டத்தினரும் கலந்திருந்தனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு அஸ்லம்னா நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் தங்களுடைய வழக்குப்படி) ஸபஃனா, ஸபஃனா’ நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம் என்று சொல்லலானார்கள். உடனே காலி-த் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல மாட்டார் என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, இறைவா! கா-த் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இருமுறை சொன்னார்கள். (புகாரி: 4339)

கொல்லப்பட்டவர்களின் சொந்தங்களுக்கு தியத் வழங்குவதற்காக நபி (ஸல்) அலீயை அனுப்பி வைத்தார்கள்.இப்பிரச்சனையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் காலிதுக்கும் பேச்சு முற்றிப்போய் வாக்குவாதம் ஏற்பட்டது. காலித் (ரலி), அப்துர் ரஹ்மான் அவர்களைத் திட்டினார்கள். இதனை அறிந்த நபியவர்கள் காலிதிற்கு அறிவுரை கூறினார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர் களை) ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் தோழர்களில் யாரையும் ஏசா தீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது” என்று சொன்னார்கள் (முஸ்லிம்: 4968)