20) முஃதா யுத்தம் ஹிஜிரி 8
நபி (ஸல்) அவர்களின் காவத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது இப்போர் ஹிஜ்ரி ஜுமாதா அல்லா,கி.பி 12 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.
முஃதா என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர் இங்கிருந்து பைத்துல் முகத்தஸ் இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது. (ஃபத்ஹூல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி ஏழி அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள் ஆனால் போகும் வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷுரஹ்பீல் இப்று அம்கு அல்கஸ்ஸானி என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டாள்.
தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்க மாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக கொடிய ஒன்றாக கருதப்பட்டது தனது சதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் தபி (ஸல்) பெரும் கவலைக்குள்ளானார்கள் 1000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார் செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள் (ஜாதுல் மஆது பத்ஹுல் பாரி) அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகம் இருந்ததில்லை.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதா போரின் போது ஸைத் பின் ஹாரிஸா ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைத் கொல்லப்பட்டு விட்டால் ஜஃபர் (தலைமையேற்கட்டும்) ஜஅஃபர் கொல்லப்பட்டு விட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா தலைமையேற கட்டும் என்று சொன்னார்கள். நான் அந்தப் புனிதப் போரில் அவர்களுடன் பங்கேற்று இருந்தேன் நாங்கள் ஜஃபர்ன் அபிதாப் (ரன் அவர்களைத் தேடிச் சென்ற போது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களுடைய உடலில் இருந்த காயங்கள் ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம் (புகாரி: 4261) ➚
அல்ஹாரிஸ் பின் உமைர் கொல்லப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் படைக்கு நபியவர்கள் அறிவுரை கூறினார்கள். பொதுவாக எந்த ஒரு படைப்பிரிவை அனுப்பும் பொழுதும் நபியவர்கள் அந்தப் படைப்பிரிவினருக்கு பின்வருமாறு உபதேசிப்பார்கள்
புரைதா பின் அல்ஹசிப் எனி அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் எவர் அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால் தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
பிறகு பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள் இறைவளின் பெயரால் இறைவ னின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறுத்து உண்மைக்கு எதிராக நடப்பவர்களு டன் போராடுங்கள். அறப்போர் புரியுங்கள் போர் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள் ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள் அங்கனேம் செய்யாதீர்கள்: குழந்தைகளைக் கொல்லாதீர்கள் உம்முடைய எதிரிகளான இணைவைப்பாளர்களை நீர் சந்தித்தால் மூன்று அம்சங்களின் பக்கம் அவர்களை அழைப்பிராக அவற்றில் எந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வந்தாலும் அவர்களிடமிருந்து அதை ஏற்பீராக; நடவடிக்கையை நிறுத்தி விடுவிாக பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பிராக அதை ஏற்று அவர்கள்மீது நடவடிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நிறுத்திவிடுவராக. (முஸ்லிம்: 3566) ➚
அவர்களிடமிருந்து இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும் ஜாபின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு மன் என்ற இடத்தை அடைந்தது பல்கா மாநிலத்தின் மாப் என்ற இடத்தில் ஹிர்க ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்க்ஷ ஜுதாம் பல்கயள பஹ் பலிய ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் விரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர் (அவ் முஃஜமுல் கபீர வித்தப்ரானீ 1311 பாகம் 14 பக்கம் 377.
இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை 1100 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இவட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர்.இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம் அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.
ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏழி இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமுட்டி உரையாற்றினார் எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம்.
நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும் அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம் எனவே தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள் இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு ஒன்று வெற்றி அல்லது வீரமரணம் “(அல் முஃஜமுல் கபீர் வித்தப்ரானீ 13011 பாகம் 14 பக்கம் 377)
இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர்.
‘முஃதா என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர்.
போர்க்களச் செய்திகளை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
முஃதா போர்க் களத் தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் நபியவர்கள் கூறினார்கள் ஸைத் பின் ஹாரிஸா கொடியைக் கையிலெடுத்து இஸ்லாமியச் சேனைக்குத் தலைமை தாங்கி;க் கொண்டுள்ளார் இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் அதைத் தம் கையில் எடுத்து தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார் அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை அப்துல்லாஹ் பின் ரவாஹாதம் கையில்) எடுத்து தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு காலித் பின் வலீத் (தளபதியாக நியமிக்கப் படாமலேயே அதைக் கையிலெடுத்துக் கொண்டுள்ளார். அவருக்கு வெற்றி யளிக்கப்பட்டுவிட்டது. வீர மரணத்தினால் அவர்கள் பெற்ற பெரும் பேற்றினை நாம் அறிந்த பிறகும் அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி: 2798) ➚
ஜஅஃபர் (ரலி) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் மிகத் தீவிரமாகப் போரிட்டார்கள் எதிரிப்படைகளில் ஒருவன் அவருடைய இரு கரங்களையும் வெட்டினான்.
அல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக கவனத்தில் இரண்டு இறக்கைகளை வழங்கினான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஜஅஃபர் பின் அபீ தாலிப் அவர்கள் ஜிப்ரீல் மற்றும் மீக்காயில் ஆகியோருடன் பறந்து கடந்து சென்றார்கள் அவருக்கு இரண்டு இறக்கைகள் உள்ளன அவருடைய (வெட்டப்பட்ட இரு கைகளுப் பகரமாக அல்லாஹ் அதனை அளித்துள்ளான் (அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம் கற்றித் திரிகிறார்கள்: இதனை முன்னிட்டே இவர்களுக்கு ஜஅஃபர் அத்தய்யார் பறக்கும் ஜஅஃப்ரஜஅஃபர துலஜனாஹைன் (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபற என்றும் கூறப்படுகிறது (அல்முஃஜமுல் அவ்ஸத் 6932)
இப்னு உமர் ரலி அவர்கள், ஜஅஃபர் (ரவி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் பின் ஜசு மருக்கு சலாம் சொன்னால் இரு சிறகுகள் உடையவரின் மகனே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்வார்கள் (புகாரி: 3700) ➚
இப்னு உமர் (ரலி) கூறுகிறார் நாங்கள் ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தேடிச் சென்ற போது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம் அவர்களுடைய உடலில் இருந்த காயங்கள் ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம் (புகாரி: 4261) ➚
முதலில் ஸைத்ர பிறகு ஜஅஃபர் (ரலி பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் வரிசையாக ஷஹுதான் பிறகு ஹாலித் பின் வலீத் (ரலி) தலைமைப் பொறுப் பேற்று மிக வீரதீரமாக போரிட்டார்கள்
காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் முஃதா போரின் போது தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைத்துவிட்டன என் கரத்தில் யமன் நாட்டின் அகலமான வாள் ஒன்று மட்டுமே உடையாமல்) எஞ்சியது (புகாரி: 4265) ➚
அல்லாஹ்வின் உதவியினால் இந்த யுத்தத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இருந்த ரோமர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.
எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச் சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் அவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர் 1000 பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் மோதுவதும். பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா ஆச்சரியமான விஷயமாக இருந்தது.
முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக அமைந்தது எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர். இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர் கலைம், அஷ்ஜ் கத்ஃபான், துப்யான் பஜாரா ஆகிய கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.
பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர் இருந்தது முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள். ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் பலிய்’ கிளையினரைச் சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
‘தாத்துஸ் ஸலாசில்’ என்பது ‘வாதில் குரா’ என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.