20) எதிரிகள் மூலம் சோதனை வருவதைத் தவிர்க்க

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

ரப்பனா லா தஜ்oஅல்னா Fபித்னதல் லில்லdhதீன கFபரூ வghக்Fபிர் லனா ரப்பனா, இன்னக அன்தல் oஅzஸீzஸுல் ஹகீம்.

பொருள்: எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 60:5)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)


رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ

ரப்பனா லா தஜ்oஅல்னா Fபித்னதல் லில்qகவ்மிள் ளாலிமீன்.வநஜ்ஜினா பிரஹ்மதிக மினல் qகவ்மில் காFபிரீன்.

பொருள்: எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!(உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன்: 10:85-86)➚

(நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தினர் ஃபிர்வ்னின் தொல்லையிலிருந்து பாதுகாக்கக் கேட்ட பிரார்த்தனை)


رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ

ரப்பி-ன்sஸுர்னீ oஅலல் qகவ்மில் முFப்ஸிdதீன்.

பொருள்: என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்: 29:30)➚

(நபி லூத் (அலை) அவர்கள் தன் சமூகத்தாரிடமிருந்து பாதுகாக்கக் கேட்ட பிரார்த்தனை)


رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

ரப்பி நஜ்ஜினீ மினல் qகவ்மிள் ளாலிமீன்.

பொருள்: என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன்: 28:21)➚

(நபி மூஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய திட்டமிட்ட செய்தி கிடைத்த போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)