19) பெண்களுக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனம் கொண்டவர்கள்; வலிமை குறைந்தவர்கள். ஆகவே பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதும் வாடிக் கையாகி விட்டது. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது. எப்போதும் பெண்களுக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

(அல்குர்ஆன்: 2:228)

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டேபோனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 5186), (முஸ்லிம்: 2914)