19) சமூகத்திற்காகவும், சந்ததிக்காகவும் செய்த பிரார்த்தனைகள்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்யும்போது தமக்காக மட்டும் பிரார்த்தித்து (சுயநலமாக, தன்னலமாக) தமது பிரார்த்தனையை முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அவற்றில் தனது சந்ததிகளையும், சமூகத்தார்களையும் பின்வரும் மக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களையும் தனது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்கிறார்கள். அவைகளை இனி காண்போம்.

சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு

“என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 14:35)

வணக்கத்தை நிலைநாட்ட…

என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக்கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக!

(அல்குர்ஆன்: 14:40)

வணக்கத்தை வழிகாட்ட…

எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக!

(அல்குர்ஆன்: 2:128)

கட்டுப்பாட்டைக் கேட்டல்

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!”

(அல்குர்ஆன்: 2:128)

நற்குணமுடைய பிள்ளை

“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ் சினார்.)

(அல்குர்ஆன்: 37:100)

பிள்ளைக்குப் பாதுகாப்பு வேண்டி….
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.

“அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்”

எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.

(புகாரி: 3371)

மக்களுக்குக் தலைவராக்க வேண்டி…
إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا فَقَالَ وَمِنْ ذُرِّيَّنِي

“மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:124)

சந்ததியில் தூதரை அனுப்பக் கோரி…

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ

“எங்கள் இறைவனே! எங்கள் தலைமுறையினரான) அவர்களிலிருந்து ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக!

(அல்குர்ஆன்: 2:129)

மனைவியையும், பிள்ளையையும் பாலைவனத்தில் விட்டு வந்த போது…
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ . ت مِنْ ذُرِّيَّتِي بوَادٍ غَيْرِ ذِي زَرْع . عند بيتك رَبَّنَا لِيُقِيمُوا الصَّلاةَ فَاجْعَلْ أَفْئِدَةً من مِنَ النَّاسِ تَهْوِي . المحرم إِلَيْهِمْ
وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு 5 அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் செலுத்துவதற்காக கனிகளிலிருந்து = அவர்களுக்கு உணவளிப்பாயாக!

(அல்குர்ஆன்: 14:37)

நம்பிக்கை கொண்டோருக்கு உணவை வேண்டுதல்
وَارْزُقْأَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

“இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாயாக!”

(அல்குர்ஆன்: 2:126)

நம்பிக்கை கொண்டோருக்கும், சந்ததிக்கும் மன்னிப்பை வேண்டுதல்

” எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் -நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறை நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!” (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)

(அல்குர்ஆன்: 14:41)

எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலாஅன்பாளன்”

(அல்குர்ஆன்: 2:128)

இப்ராஹீம் (அலை) அவர்கள் எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும் சரி! தனக்குக் கட்டுப்பாட்டை வேண்டும்போதும் बग्री! சந்ததியையும் இணைத்துக் கொள்கிறார்கள். உம்மை மக்களுக்குக் தலைவராக்கப் போகிறேன் என இறைவன் கூறிய போது ‘என் சந்ததியையும் அவ்வாறு ஆக்கு’ என்றார்கள். சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு தேடும்போதும் சந்ததிகளையும் இணைக்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுவதற்குக் கேட்ட போதும், மன்னிப்பு தேடும்போதும் அவர்களையும் இணைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளுக்குப் பாதுகாவலும் தேடுகிறார்கள்.

பாலைவனத்திலே மனைவியையும் பிள்ளையையும் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப விட்டு வந்தபோதும் தனது கடமை முடிந்து விட்டது என்றில்லாமல் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறார்கள். பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கி மக்களுக்குப் பயனளிக்க என் வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறார்கள். இன்னும் தனது சந்ததிகளிலிருந்து தூதர்களை நியமிக்குமாறும் கேட்கிறார்கள்.

தனக்கு எது தேவையோ அதை மட்டும் அல்லாஹ்விடம் கேட்காமல் தனது சந்ததிக்கும். சமூகத்திற்கும் எது தேவையோ அவையனைத்தையும் அல்லாஹ்விடம் கேட்டு குடும்ப மற்றும் சமூகப் பொறுப்பாளராகவும். பாதுகாவலராகவும் சமுதாய அக்கறையோடு இப்ராஹீம் நபி இருந்தார்கள்.

அவர்களின் சமூகம் மட்டுமின்றி இறுதிவரை இறைநம்பிக்கையாளராக இருக்கும் அனைவரையும் தமது பிரார்த்தனையில் இணைத்து அவர்களுக்காகவும் பாவ மன்னிப்பைக் கேட்கிறார்கள்.

ஆனால் இன்று தங்களை சமுதாயப் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதுண்டா? இறை உதவி தான் முதன்மையானது என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இப்ராஹீம் நபி அவர்களின் இம்மாதிரியான பிரார்த்தளையுடன் ஒப்பிடுகையில் நமது நிலை நமக்குத் தலைகுனிவைத் தான் ஏற்படுத்துகிறது. நமக்கே பிரார்த்தனை நாம் செய்யாமல் நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கின்றோம் என்னும் போது எப்படி மற்றவர்களுக்காகப் பிரார்த்திக்கமுடியும்? உண்மையா சமூகப் போராளியாக எப்படி இருக்க முடியும்? இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் நமது குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.

நமது சமூகத்தின் இன்றைய சூழ்நிலைகளையும், சமுதாய அவலங்களையும் கவனத்தில் கொண்டு உண்மையான சமூகப் போராளியாகவும், சந்ததியின் பொறுப்பாளியாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்காக இப்ராஹீம் நபியைப் போன்று இவ்வாறு துஆ செய்யவேண்டும்.

இறுதியாக இப்ராஹீம் நபி நுஆவின் போது கடைப்பிடித்த வழிமுறைகளையும் நாம் கற்றுக்கொண்டு அதையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இப்ராஹிம் நபியின் பிரார்த்தனையின் போங்கு

இப்ராஹீம் நபி தனது து.ஆவில் சில ஒழுங்கு முறைகளைக் கையாளுகிறார்கள். அவற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவைகள் பின்வருமாறு:

“என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆகமாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். –  (அல்குர்ஆன்: 19:47-48)

“எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டுவிட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.) –  (அல்குர்ஆன்: 60:4)

அவன் என்னிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார்.  (அல்குர்ஆன்: 19:47-48)

எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நீயே அறிவாய். பூமியியோ, வானத்திலோ எந்த ஒன்றுமே அல்லாஹ்வைவிட்டும் மறையாது.-   (அல்குர்ஆன்: 14:38)

நீயே செவியேற்பவன், நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:127)

நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.  (அல்குர்ஆன்: 2:128, 14:36)

நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்.   (அல்குர்ஆன்: 2:129, 60:05)

எனது இறைவன் பிரார்த்தனையை செவியேற்பவன்.   (அல்குர்ஆன்: 14:39)

இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் மீதும், பிரார்த்தனையின் மீதுமுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் பிரார்த்தனையின் முடிவின்போது மன்னிப்பு மிக்கவன், நிகரிலா அன்பாளன், மிகைத்தவன், நன்கறிந்தவன், நுண்ணறிவாளன், பிரார்த்தனையை செவியேற்பவன் என்ற இறைவனின் பண்புகளான இம்மாதிரியான பயன்படுத்துகிறார்கள். வார்த்தைகளையும் பிரார்த்திக்கும் போது அல்லாஹ்வின் மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இப்ராஹீம் நபியும் அவ்வாறு இறை நம்பிக்கையோடுதான் தனது பிரார்த்தனையை அமைத்துக்கொண்டார்கள்.

அதேபோன்று பொதுவாகவே நமது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்றபோது அதற்கு உறுதுணையாக, இறைவா! நீயே மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன் என்பதுபோன்ற இம்மாதிரியான வாசகங்கள் அமைந்துள்ளன. இவைகளைக் கூறும்போது நமது அடிமைத் தனம் இன்னும் வலுப்பெறுகிறது. அல்லாஹ்வின் ஆளுமை மேலோங்குகிறது. நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன் என்பது போன்ற வாசகம் நம்மை அல்லாஹ்விடம் மென்மேலும் நெருங்கச் செய்யும் வாசகமாகவே அமைந்துள்ளது. இவ்வாறு கேட்பது அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்றுத் தருபவையாகவே உள்ளது.

“நீங்கள் ‘அல்லாஹ்’ என அழையுங்கள்! அல்லது ‘அர்-ரஹ்மான்’ என அழையுங்கள்! நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகியப் பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக!

 (அல்குர்ஆன்: 17:110)

அவன்தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவன். அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்.

அவன் தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. (அவனே) அரசன், தூய்மையானவன், அமைதியளிப்பவன், அடைக்கலமளிப்பவன், மிகைத்தவன், கண்காணிப்பவன், அடக்கியாள்பவன். பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அவன்தான் அல்லாஹ்! (அவன்) படைப்பாளன்; தோற்றுவிப்பவன்; உருவம் கொடுப்பவன். அவனுக்கு அழகியப் பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனையே போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.

 (அல்குர்ஆன்: 59:22-24)

இப்படி அல்லாஹ்விற்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. இவற்றில் நமது பிரார்த்தனைக்கு ஏற்றாற்போல் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் முன்னிறுத்தி இப்ராஹீம் நபியைப் போன்று அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.

இப்ராஹீம் நபி மாத்திரமின்றி மற்ற நபிமார்களும் இந்த வழிமுறையை கையாண்டுள்ளார்கள்.