09) வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)
இப்ராஹீம் நபியிடமும். நபியிடமும் கஃபாவைக் இஸ்மாயில் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு விட்டோம்; நமது கடமை முடிந்து விட்டது என்று அவர்கள் கலைந்து செல்லவில்லை. மாறாக நாம் செய்த இப்பணியை இறைவன் ஏற்றுக் கொண்டானா? இதற்காக மறுமையில் நமக்கு நன்மை கிடைக்குமா? அவ்வாறு கிடைக்கா விட்டால் நமது பணி வீணாகி விடுமே என் அஞ்சி அவர்கள் செய்தப் பணியை ஏற்றுக்கொள்ள து.ஆ செய்கிறார்கள்.
இந்த துஆவையும் நாம் கேட்கத் தவறி விட்டோம். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற
எண்ணற்ற வணக்கங்களை நாம் செய்கின்றோம். இவற்றை நாம் செய்த பிறகு இறைவா! இதை உனக்காக நான் செய்துள்ளேன், எனது காரியத்தை ஏற்றுக்கொள்வாயாக, இதற்குப் பன்மடங்கு நன்மையை வாரி வழங்குவாயாக! என்று பிரார்த்தனை கேட்டுள்ளோமா?
ஒரு வணக்கத்தைச் செய்துவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என கருதுகிறோம். அந்த வணக்கத்தை வல்லோன் ஏற்றுக் கொண்டானா என்பது பற்றிய கவலையில்லாமல் கடந்து செல்கின்றோம். ஆனால் நமது வணக்கம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அதன் விளைவு தற்போது தெரியாது. மறுமையில்தான் நாம் நஷ்டமடைதுள்ளோம். கைசேதப்பட்டுள்ளோம் என்பதை கொள்வோம்.”
அதற்கு முன்பாகவே வணக்கமாக நாம் செய்யும் இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் செய்வதுடன் இப்ராஹீம் நபியைப் போன்று அவை ஏற்றுக்கொள்ளப்படவும் அல்லாஹ்விடம் இதுபோல் பிரார்த்தனையை நாம் முற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்வதால் நமது அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட இந்தப் பிரார்த்தனையும் உதவியாக இருக்கும்.