18) பிரார்த்தனை ஏற்கப்படுவதற்காகப் பிரார்த்தனை
இப்ராஹிம் நபி செய்த துஆக்களை நாம்பார்த்து வருகின்றோம் அவற்றில் இந்தப் பிரார்த்தனையும் மிக முக்கியமான படிப்பினையை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.
எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!
தசம் எத்தனையோ அல்லாஹ்விடம் பிரார்த்தனைகளை முன்வைக்கின்றோம் அவையனைத்தும் பயனற்றதாகி விடக்கூடாது என்பதற்காகவும் அதன் பயனைக் கட்டாயம் அடையவேண்டும் என்பதற்காகவும் இப்ராஹீம் நபி இவ்வாறு து.ஆ செய்கிறார்கள். பெயரளவில் நானும் பிரார்த்தித்தேன் என்று சென்று விடவில்லை இப்ராஹீம் நபியவர்கள்.
நாம் அல்லாஹ்விடம் கேட்டுவிட்டோம்.
அல்லாஹ் நாடினால் தருவான், நாடினால் தராமலும் இருப்பான். கேட்பது கடமை! என்றும் கடந்து செல்லவில்லை. நாம் கேட்டது கட்டாயம் கிடைக்கவேண்டும் என்ற கனவோடும். ஆர்வத்தோடும் ஆசைகளோடும் பிரார்த்தித்தார்கள். எங்கே நமது கோரிக்கை வீணாகிவிடுமோ என அச்சித்தால் அதற்கு உறுதுணையாகவே தமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளபடவும் பிரார்த்திக்கிறார்கள். நபிகளாரும் நமக்கு அதைத்தான் சுற்றும் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
இறைவா! உன்னிடம் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்பு கேட்கிறேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அர்சும் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5266)
துஆ என்ற வணக்கத்தில் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. பிரார்த்திப்பதில் துர்பாக்கியசாலயாகவும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இப்ராஹீம் நபி இருக்கிறார்கள்.இறையருளில் அவர்களின் இறைநம்பிக்கை அளப்பரியதாக இருந்தது.
வழிகேடர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நிராசையடைவார்கள்?” என அவர் கூறினார்.
மனிதனுக்காக இறைவன் கொடுத்த துஆ என்னும் மகத்தான வாய்ப்பினை கன கச்சிதமாக இப்ராஹீம் (அலை) கையாண்டார்கள்.
இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையை நம்மில் பலர் கேட்டாலும் அவர்களின் உறுதியான alama போன்று நம்பிக்கையுடன் நாம் கேட்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
அச்சத்துடனும் ஆவலுடனும் அவனைப் பிரார்த்தியுங்கள்! நன்மை செய்வோருக்கு அல்லாஹ்வின் அருள் அருகில் இருக்கிறது.
அல்லாஹ் தருவான் என்ற நம்பிக்கையுடன் கேட்கவேண்டும்.
இவ்வாறு உறுதியாகக் கேட்டால் இப்ராஹீம் நபிக்கு வழங்கியதைப் போன்று இறைவன் நமக்கும் இன்ஷா அல்லாஹ் வழங்குவான்.