18) கைபர் போர் ஹிஜ்ரி 7. முஹர்ரம்!
கைபர் என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 30 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால் இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும் நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது
மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே மற்ற இரண்டு எதிரிகளின் கணக்கைத் தீர்க்க நாடினார்கள். அப்போதுதான் அப்பகுதியில் அமைதியும். சாத்தியும் சமாதானமும் முழுமையாக நிலவ முடியும் அத்துடன் இரத்தம் சிந்தும் போர்களிலிருந்து முஸ்லிம்கள் ஓய்வு பெற்று இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்க முடியும்
சதித்திட்டங்கள் நீட்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும் கைபர் நகரம் ஒரு மையமாக விளங்கியது. எனவே நபி (ஸல்) அவர்கள் தங்களது கவனத்தை முதலாவதாக இதன் பக்கம் செலுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடித்துத் திரும்பிய பின் மதீனாவில் சில வாரங்கள் தங்கி விட்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்”
நயவஞ்சகர்களும் உறுதி குலைந்த நம்பிக்கையாளர்களும் ஹுதைபிய்யாவில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்டதால் அவர்கள் விஷயமாக அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு கட்டளை பிறப்பித்தான்
போரில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுப்பதற்காக நீங்கள் புறப்படும் போது உங்களைப் பின்தொடர்ந்து வர எங்களை அனுமதியுங்கள் என்று போருக்குச் செல்லாது தங்கியோர் கூறுகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றிட அவர்கள் நாடுகின்றனர். 30 எங்களைப் பின் தொடராதீர்கள்! இப்படித்தான் முன்னரே அல்லாஹ் கூறி விட்டான் என (முஹம்மதே!) கூறுவீராக! நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகிறீர்கள் என்று அவர்கள் கூறுவார்கள் அவ்வாறில்வை! குறைவாகவே தவிர அவர்கள் புரிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 48:15)➚ ஆகவே நபி (ஸல்) அவர்கள் கைபருக்குப் புறப்பட்ட போது போர் புரிய ஆசையுள்ளவர்கள் மட்டும் புறப்பட வேண்டும் என அறிவித்தார்கள். ஆகவே, ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்த 1400 தோழர்கள் மட்டும் இப்போருக்காகப் புறப்பட்டனர்.
கைபர் யுத்தத்தின் போதுதான் அபூ ஹுரைரா ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்று மதீனா வந்தார்கள் (புகாரி: 4137) ➚ ஆனால் அபூ ஹுரைரா மதினா வரும் போது நபியவர்கள் கைபரை நோக்கி புறப்பட்டிருந்தார்கள். பிறகு அபூ ஹூரைரா (ரலி) அவர்களுக்க மதீனாவிலிருந்து புறப்பட்டது கைபரை நோக்கி வந்தார்கள். அபூ ஹுரைரா ஏராளமான நபிமொழிகளை அறிவித்த நபித்தோழர் ஆவார்.
அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கைபர் மீது போ தொடுத்த போது மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்: ஏறுகையில், அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியோன் அல்லாஹ் மிகப் பெரியோன் லாஇலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களே உங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்) ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவளையுமே நீங்கள் அழைக்கிறீர்கள் அவன் உங்களுட னேயே இருக்கின்றான் என்று கூறினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ குல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால்) முடியாது என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லா பின் கைஸே என்று அழைத்தார்கள் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று நான் பதிலளித்தேன் அதற்கு அவர்கள், உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா?அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என்று கூறினார்கள். நான் சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ் வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினேன் அந்த வார்த்தை: லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொன்னார்கள் (புகாரி: 4205) ➚
இது கையருக்கு மூன்று நாட்களுக்கு முன்னால், நபி (ஸல்) அவர்களின் பால்தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச்சென்ற போது நடந்த போராகும்.
சலமா பின் அசுவ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் முதல் தொழுகையான ஃபஜ்குக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள காபாவை நோக்கிப் புறப்பட்டேன். தூகரத்’ என்னுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து என்னைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (பல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டு விட்டன என்று கூறினான் நான் அவற்றை யார் பிடித்துச் சென்றது) என்று கேட்டேன் அதற்கவன், கத்பான் குலத்தார் என்று பதில் சொன்னான் உடனே நான் உரக்கச் சப்தமிட்டு யா எப்பஹர் (அதிகாலை ஆபத்து உதவி உதவி என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைத்து சென்று அவர்களை அடைந்தேன் அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக் கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர்.
நான் அக்வ உடைய மகன் இன்று பால் திருடர்கள் தண்டனை பெறப் போகும். நாள் என்று பாடியபடி) கூறிக் கொண்டே அவர்கள் மீது அம்பெய்யத் தொடங்கினேன் நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும் நான் ரஜ்ஸ்’ எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன் அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள் விட்டுவிட்டுப்போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு வந்து சேர்ந்தனர். நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க! அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன் அப்போது நபி (ஸல்) அவர்கள், அவே உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்து விட்டாய் ஆகவே மென்மையாக நடந்து கொள் என்று கூறினார்கள் பிறகு நாங்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.(புகாரி: 1940) ➚
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் கைபர் போர் நடந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன் கைபருக்கு அருகிலுள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையைத் தொழுதார்கள் பின்னர் பயண உணவைக் கொண்டு வரும்படிக் கூறினார்கள் அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்பட வில்லை அதைக் குழைக்கும் படி கட்டளை யிட்டார்கள் அது குழைக்கப்பட்டதும் அதை நபி ஸஹ்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள் அப்போது வாயை மட்டும் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம் பின்னர் புதிதாக) உளு செய்யாமலேயே தொழுதார்கள் (புகாரி: 4125) ➚
சலமா பின் அக்வ: ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் போருக்காகப் புறப் பட்டோம். இரவு நேரத்தில் தாங்கள் சென்று கொண்டிருந்த போது ஒருவர் ( தந்தையின் சகோதரர் ஆமிர் பின் அக்வ (ரலி) அவர்களிடம் ஆமிரே உங்கள் கவிதைகளில் சிலதைப் பாடி: எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டிர்களா? என்று கூறினார். ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள் அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தர்மமும் செய்திருக்க மாட்டோம் தொழுதிருக்கவும் மாட்டோம் உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில் எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச் சந்திக்கும் போது எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக! எங்கள் மீது அமைதியைப் பொழிவாயாக அற வழியில் செல்ல நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் தயாராக வந்து விடுவோம்.
எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்) என்று பாடிக் கொண்டிருந்தார்கள் வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள், யார் இந்த ஓட்டக வோட்டி? என்று கேட்டார்கள். ஆமிர் பின் அக்வ என்று மக்கள் பதிலளித்தார்கள் அப்போது, அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மக்களில் ஒருவர். இறைத்தூதரே (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும் உறுதியாகி விட்டது. அவர் நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்.
அன்றைய தினம் போருக்காக! மக்கள் அணிவகுத்து நின்ற போது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து ஒரு யூதனின் காலை வெட்டப் போன போது அன்னாரது வாளின் மேற்பகுதி. அன்னாரின் முழங் காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பிய போது. சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள் என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும் என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள் அழிந்து விட்டன; (அவர் தமது வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று மக்கள் எண்ணு கிறார்கள் என்று தெரிவித்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியவர் தவறிழைத்து விட்டார் ஆமிருக்கு நிச்சயமாக நற்செயல் புரிந்த நன்மை அறப்போர்புரிந்த நன்மை ஆகிய இரண்டு நன்மைகள் உண்டு என்று கூறியவாறு தம் இரு விரல்களையும் தபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறினார்கள் (புகாரி: 4196) ➚
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற மேலும், அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம் நாளை (இஸ்லாமிய சேனையின் இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான் என்று கூறினார்கள் அந்தக் கொடி தங்களில் எவரிடம் தரப்படும் என்ற போசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர் மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்படவேண்டுமென்று ஆசைப் பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர் அப்போது நபி (ஸல்) அவர்கள் அலீ பின் அபீ தாலிப் எங்கே? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது நபி (OR) அவர்கள், அவரை அழைத்து வரும்படி அவரிடம் ஆளனுப்புங்கள் என்று கூறினார்கள்.
அலீ ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலி) அவர்கள், நம்மைப் போன்று அவர்களும் ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங் குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது அரபுகளின் உயரிய செல்வமான சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்(புகாரி: 4210) ➚
போருக்கு முந்திய இரவு கைபருக்கு மிக அருகாமையிலேயே முஸ்லிம்கள் இரவைக் கழித்தார்கள் எனினும் யூதர்களால் முஸ்லிம்களின் வருகையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் அவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச்) செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரையில் அவர்களை நெருங்க மாட்டார்கள். அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டி யையும் (பேரீச்ச ஓலைகளாலான கூடைகளையும் எடுத்துக் கொண்டு வயல் வெளிகளை நோக்கி வெளியேறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்த போது முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட படையும் வருகின்றனர்) என்று கூறினர் அப்போது நபி (ஸல்) அவர்கள், கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட்) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்டவர்களான அந்தச் சமுதாயத்த வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று கூறினார்கள். (புகாரி: 4197) ➚
கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும் வீதிகளில் ஓடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்முடன்) போரிட்ட வர்களைத் தாக்கினார்கள் அவர்களின் குடும்பத்தினரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோரைத் கைது செய்தார்கள். (புகாரி: 4200) ➚
சலமா (ரவி) அவர்கள் எதிரிகளால் தாக்கப்பட்டார் இது பற்றி அவர்கள் கூறுகிறார்கள்
அப்போது மக்கள், சலமா தாக்கப்பட்டு விட்டார் என்று கூறினர். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாகத் துப்பினார்கள் (அதன் பின்) இந்த நேரம் வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை என்று சலமா (ரவி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 4206) ➚
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் யூத இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தமது படையினரிடமும் மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (குஸ்மான் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் இருந்தார் அவர் யூதர்களின் அணியிலிருந்து பிரிந்து சென்ற (போரிடாது) எவரையும் படையிலிருந்து விலகி தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தமது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார் அப்போது, இன்றைய தினம் இன்னவர் உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்தது போல வேறெவரும் நம்மில் தேவை தீரப்போரிடவில்லை என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள் அப்போது மக்களில் (அக்ஸம் பின் அபில் ஜவ்ன் என்ற ஒருவர் நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன் என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.
அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார் அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த குஸ்மான் என்ற மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப் பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தனது வாளை (அதன் கீழ் பகுதியை பூமியில் வைத்து அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் (பின் தொடர்ந்து சென்ற அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். என்ன அது? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர். இவர் நரக வாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்க ளல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர் எனவே நான் அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன் (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்: பிறகு அவர் மிகக் கடுமையாக எதிரிகளால் காயப்படுத்தப்பட்டார் எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தனது வாளின் (கீழ்) முனையை பூமியில் நட்டு வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் நற் செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரசுவாசிகளில் ஒருவராக இருப்பார் இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார் ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்று கூறினார்கள் (புகாரி: 4203) ➚
அல்லாஹ்வின் தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்ட பொழுது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டு விட்ட பொழுது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில் யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கின்றோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகின்றோம் என்று கேட்டுக் கொண்டார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக் கின்றோம் என்று கூறினார்கள். (புகாரி: 2338) ➚
நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ள அனுமதியளித்து ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். (புகாரி: 2328) ➚
உமர் (ரலி) அவர்கள், தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி வசித்து வந்தார்கள் (புகாரி: 2338) ➚
அபூஹுரைரா ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம் அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளி யையோ போர்ச் செல்வமாசுப் பெறவில்லை மாடு, ஒட்டகம், (வீட்டுப்)பொருட்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச் செல்வமாகப் பெற்றோம் (புகாரி: 4234) ➚
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது(போர்ச் செல்வத்திலிருந்து குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட் படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.(புகாரி: 4228) ➚
அதவாது (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக் காக இரு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும்.
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில் அதிகம் கனிமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.இப்னு உமர் (ரழி) கூறினார்கள் கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம். (புகாரி: 4242) ➚
கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனிஹாக்களை (இரவ லாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் (புகாரி: 2630) ➚
இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அபூமூஸா அல்அஷ்அரி ஏழி) அவர்களும் தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். இதைப் பற்றி அபூமூஸா (ரழி) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்த போது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே, நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா அவர்களும் மற்றொருவர் அபூருஹ்ம் அவர்களுமாவர். நான் தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன் என் குலத்தாரில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்’ என்றோ, ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்’ என்றோ என் தந்தை அபூ மூசா (ரலி) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன் என அறிவிப்பாளர் அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித் தோம் எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷியிடம் எங்களை இறக்கி விட்டது. அவரிடம் (அபிசீனியாவில் ஜஅஃபர் பின் அபீ தாலிப் அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம் ஜஅஃபர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தர விட்டுள்ளார்கள். ஆகவே, நீங்களும் எங்களுடன் (இங்கேயே தங்குங்கள் என்று கூறினார்கள் ஆகவே நாங்கள் அவருடன் தங்கினோம் இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் கைபர் போரில் கிடைத்த பொருட்களில் எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். கைபர் வெற்றியில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் தான் பங்கிட்டுத் தந்தார்கள் ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர் களுடைய சகாக்களுக்களுடனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள் (3136)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். பின்பு எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின் வெற்றியா? ஜஅஃபன் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்” என்று கூறினார்கள்.
(அல் முஃஜமுல் அவ்ஸத் (2003) பாகம் 2 பக்கம் 287
பிறகு நாங்கள் கைபருக்கு வந்து கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எங்களுக்கு! வெற்றியளித்தான் வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?! என்று கேட்டார்கள். இறைச்சி சமைப்பதற்காக என்று மக்கள் கூறினர். எந்த இறைச்சி? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சி என்று மக்கள் கூறினர் அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒருவர். அல்லாஹ் வின் தூதரே! இறைச்சிகளைக் கொட்டி விட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா? என்று கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று கூறினார்கள். (புகாரி: 4196) ➚
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (கைபர் போரின் போது ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் சாப்பிடப்பட்டு விட்டன என்று கூறினார். அதற்கு பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, கழுதைகள் சாப்பிடப்பட்டு விட்டன என்று கூறினார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து கழுதைகள் தீர்ந்து போய் விட்டன என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர் என்று மக்களிடையே அறிவிப்புச் செய்தார். உடனே, இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த அந்தப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டன. (புகாரி: 4199) ➚
இத்துடன் வெள்ளைப் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவதும் அன்றைய தினத்தில் தடைசெய்யப்பட்டது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் கைபர் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டை (பச்சையாக) உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள் (புகாரி: 4215) ➚
அது போன்று அறியாமைக்கால மக்கள் செய்து கொண்டிருந்த முத்ஆ எனும் வாடகைத் திருமணமும் அன்றை தினம் தடை செய்யப்பட்டது.
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முத்அத்துன்னிஸா கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம் செய்ய வேண்டாம் என தடை விதித்தார்கள். (புகாரி: 4216) ➚
குதிரை இறைச்சியை சாப்பிட அனுமதி கொடுத்தார்கள் (புகாரி: 4219) ➚
கைபர் யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர் (புகாரி: 4200) ➚
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (கமூஸ்’ என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்த போது, (போர்க் கைதியான ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில் கொல்லப்பட்டு விட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் குமுஸ் பங்கிலிருந்து பெற்று மணந்து கொண்டார்கள்.(புகாரி: 4211) ➚
அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர் களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள் அவரது விடுதலையையே மஹ்ராசு ஆக்கி(அவரை நபி -ஸல்- அவர்கள் மணமுடித்து)க் கொண்டார்கள். (புகாரி: 4200) ➚
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடுகூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி நெய் போன்றவற்றை இட்டார்கள். ஹைஸ்’ எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவியரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா? என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் திரையிட்டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் நபியவர்களின் துணைவியரில் ஒருவர் அப்படி அவர்களுக்குத் திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிடா விட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு, திரையை இழுத்து (மூடி) விட்டார்கள். (புகாரி: 4213) ➚
கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள் யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள் விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க் கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாகக் கொண்டுவந்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள் பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளி டம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள் அப்போது அவள், “நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்” என்றாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை” என்று கூறினார்கள். மக்கள், அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அந்த விஷத்தின் அடையாளத்தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன். (முஸ்லிம்: 4408) ➚ (புகாரி: 2617) ➚
நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது பதக் பகுதி யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர் அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். (இப்னு ஹிஸாம்)
இது நபியவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் சொத்தாகவே இருந்தது. அவர்களின் மரணித்திற்குப் பிறகு அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் பொறுப்பில் இருந்தது (முஸ்லிம்: 3617) ➚
நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து வாதில் குரா என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும் அரபுகளின் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்ற போது அங்கிருந்த யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர் இது பற்றி அபூ ஹுரைரா (ரலி கூறுகிறார்.
நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள வாதில் குரா என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை பனூளிபாப் குலத்தாரில் (ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர் மீது பாய்ந்தது. அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துகள்! என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. எனது உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப் படும் முன் அவர் எடுத்துக் கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்ட போது ஒரு மனிதர் ஒரு செருப்பு வாரை. அல்லது இரண்டு செருப்பு வார்களைக் கொண்டு வந்து. இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும் முன்) நான் எடுத்துக் கொண்ட பொருள் என்று கூறினார் அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். (இது சாதாரண செருப்பு வார் அல்ல இதனைத் திருப்பித்தராமல் இருந் திருந்தால் இதுவே நரகத்தின் செருப்பு வார் அல்லது இரு வார்கள்ஆகும் என்று கூறினார்கள் (புகாரி: 4234) ➚
நபியவர்கள் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸாதின் தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள்.
நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு கைபர் நோக்கி அபான் இப்னு ஸாத் ரழி திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை வெற்றி கொண்டு விட்டார்கள்.அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபான் (பின் சயீத் அவர்களை ஒரு போர்ப் படையில் குளபதியாக) மதீனாவிலிருந்து நஜ்தை நோக்கி அனுப்பி வைத்தார்கள். பிறகு, கைபர் வெற்றிக்குப் பின் அங்கிருந்த நபி (ஸல்) அவர்களிடம் அபானும் அவரது தோழர்களும் வந்தனர். அவர்களுடைய குதிரைகளின் சேனங்களெல்லாம் பேரீச்ச மர நார்களைப் போல் இருந்தன (வெற்றிச் செல்வங்கள் ஏதுமின்றி வெற்றுடலாய் காணப்பட்டன). அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே (கைபரில் கிடைத்த போர்ச் செல்வத்திலிருந்து இவர்களுக்குப் பங்கிட்டுத் தராதீர்கள் என்று கூறினேன். அதற்கு அபான் அவர்கள் என் மலை உச்சியிலிருந்து இறங்கி வந்த குழிமுயலே! நீயா இப்படிச் சொல்கிறாய்)? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபாணே அமருங்கள் என்று கூறினார்கள் ஆனால், அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் பங்கு தரவில்லை (புகாரி: 4238) ➚