18) கடுமையான வேதனை

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

18) கடுமையான வேதனை

இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமையின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.

 

 لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ‌ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ‏

 

அவர்களுக்கு (தீயவர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கையி லும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமை யானது அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.

(அல்குர்ஆன்: 13:34)

وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ‏

 

எனது வேதனை தான் துன்புறுத்தும் வேதனை.

(அல்குர்ஆன்: 15:50)

وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏

அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(அல்குர்ஆன்: 22:2)

وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏

 

மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.

(அல்குர்ஆன்: 20:127)

وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى‌

மறுமையின் வேதனை மிகவும் இழிவுபடுத்தக் கூடியது.

(அல்குர்ஆன்: 41:15)

كَذٰلِكَ الْعَذَابُ‌ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ

மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?

(அல்குர்ஆன்: 68:33)