17) ஹூதைபியா உடன் படிக்கை (ஹிஜிரி 6, துல்கஅதா)
இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சமாதான ஒப்பந்தம் தான் மக்கா வெற்றிக்கு வழிகோலியது பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது.
இறை நிராகரிப்பாளர்கள் இறைவனுடைய மார்க்கத்தை அழித்தொழிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களை நிறைவேற்றினாலும் இறைவன் தன்னுடைய சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான் என்பதற்கு ‘ஹுதைபிய்யா என்ற இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி மிகப் பெரும் சான்றாக விளங்குகிறது.
“ஹுதைபிய்யா என்பது ஒரு கிணற்றினுடைய பெயராகும். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இந்த இடத்தில் தங்கியிருந்ததால் இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு ‘ஹுதைபிய்யா என்ற பெயர் ஏற்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் 1400 நபித்தோழர்களுடன் ‘உம்ரா’ செய்யும் நோக்கத்தில் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். பலிப்பிராணியாக 70 ஒட்டகங்களையும் உடன் கொண்டு சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு புறப்பட்ட செய்தி கிடைத்ததும் முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்துவதற்காக குறைஷிகளின் குதிரைப் படையினர், காலித் பின் வலீத் (அப்போது இவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை; அவர்களின் தலைமையில் அல்ஃகமீம்’ எனும் இடத்தில் முகாமிட்டனர். இந்தச் செய்தியறிந்த நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பாதையை மாற்றி காலித் பின் வலீத் அவர்களுடைய படைக்குத் தெரியாதவாறு வேறு வழியில் சென்று மக்காவை நெருங்கினார்கள் முஸ்லிம்களுடைய உம்ரா பயணக் குழுவினர் எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் குறைஷிக் குதிரைப் படையினரின் தளபதியான காலித் பின் வலீத் முஸ்லிம்கள் வந்து விட்ட செய்தியை குறைஷிகளுக்குத் தெரிவிப்பதற்காக விரைந்து சென்றார்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் இறங்கக் கூடிய வழியிலுள்ள சிறிய மலைப் பகுதியை அடைந்ததும் அவர்களுடைய ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது யானையைத் தடுத்த இறைவனே இதையும் தடுத்து வைத்திருக்கிறான் என்று கூறினார்கள் பிறகு என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனிதத் தலங்களைக் கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் நான் அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள் தம் ஒட்டகத்தை தட்டியெழுப்பினார்கள். அது உடனே குதித்தெழுந்தது. பிறகு நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் ஒரு கிணற்றின் அருகே முகாமிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பயணத்தின் நோக்கத்தை குறைஷிகளுக்குத் தெரிவிப்பதற்காக ஒரு தூதுவரை அனுப்ப நாடினார்கள். எனவே உமர் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்புவதற்கு அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வேண்டிய (என்னுடைய குடும்பமாகிய பலூகஅப் குலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் மக்காவில் கிடையாது. எனவே உஸ்மானை நீங்கள் அனுப்புங்கள். அவருக்கு அங்கு உறவினர்கள் உள்ளனர். நீங்கள் நாடியதை அவர் செய்து விடுவார் என்று கூறினார்கள்
நபி (ஸல்) உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து குறைஷிகளிடம் தூது அனுப்பினார்கள்.
குறைஷிகளிடம் நாங்கள் போருக்காக வரவில்லை உம்ராவை நிறைவேற்றுவதற்காகத் தான் வந்துள்ளோம்” என்று அறிவிக்குமாறும், இன்னும் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறும் கூறினார்கள். மேலும் மக்காவிலுள்ள ஈமான் கொண்ட ஆண்களிடமும், பெண்களிடமும் மக்கா வெற்றியைப் பற்றியும் ஈமான் கொண்ட யாரும் அதனை மறைக்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு அங்கு இறைவனுடைய மார்க்கம் மேலோங்கும் என்ற நற்செய்தியையும் கூறுமாறு அனுப்பி வைத்தார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கடிதத்துடன் குறைஷித் தலைவர்களை சென்று சந்தித்தார்கள். அவரை குறைஷிகள் தங்களிடத்தில் தடுத்து வைத்தனர். பிறகு தங்களுடைய பதிலைக் கூறி கடிதத்துடன் திருப்பி அனுப்பினர்.உஸ்மான் (ரலி) அவர்களின் வருகை தாமதமானதால் உஸ்மான் கொல்லப்பட்டதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்தி பரவியது. நபி (ஸல்) அவர்கள். நாம் இவர்களை அழிக்காமல் இங்கிருந்து செல்லக் கூடாது” என்று கூறி விட்டு, தம்முடைய தோழர்களிடம் குறைஷிகளிடம் போர் புரிய வேண்டும் என்பதற்காக பைஅத் (உறுதிப் பிரமாணம்) எடுத்தார்கள்.
அனைத்து ஸஹாபாக்களும் மக்காவாசிகள் போர் தொடுத்தால் போரில் பின்வாங்க மாட்டோம். மரணத்தையே எதிர்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமானாலும் நிலைகுலையாமல் இருப்போம் என்று உறுதிமொழி அளித்தனர். இது அங்கிருந்த ஒரு கருவேல முள் மரத்தடியில் நடந்தது
இந்த நிகழ்ச்சி தான் பைஅத்துர் ரிள்வான் (இறை திருப்தி பெற்ற உறுதிமொழி என வரலாற்றில் கூறப்படுகிறது. இதைப் பற்றி திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான் அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்குர்ஆன்: 48:18)➚
உறுதிமொழி அளித்த ஸஹாபாக்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என சிறப்பித்துக் கூறினார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லும் மக்கள் ஏதோ மரத்தைக் குறிப்பிட்டு இது தான் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த மரம்” என்று கூறி அதற்குப் புனிதம் இருப்பதாகக் கருதி அதனைச் சுற்றி வணக்க வழிபாடுகள் செய்தனர் இதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அதனை வெட்டி விடுமாறு கட்டளையிட்டனர்).
புதைல் பின் வரகா அல்குஸாயி என்பவர். தம் குஸாஆ குலத்தார் சிலருடன் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து முஹம்மத் அவர்களே கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் ஜீவ நதி அருகே முகாமிட்டுள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை சந்திக்காமல் தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் “நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை மாறாக நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கிறோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு கால கட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும். மக்களுக்குமிடையே இஸ்லாமிய பிரச்சாரத்திற்குத் தடையாக இருக்க வேண்டாம் நான் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும் அவர்கள் இதற்கு மறுத்து விட்டால். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ். தன் திட்டத்தை நடத்தியே தீருவான்” என்று கூறினார்கள்.
நீங்கள் சொல்வதை அவர்களுக்கு எடுத்துரைப்பேன் எனக் கூறி விட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று “நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம் அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார்.
அப்போது அங்கிருந்த அறிவிலிகள் அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள் அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள் என்றும் கூறினர் புதைல் நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
புதைல் கூறிய கருத்துகளைக் கேட்டவுடன் உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர் எழுந்து குறைஷிக் குலத்தாருக்கு அவர் செய்த சேவைகளைக் குறிப்பிட்டு விட்டு, முஹம்மது உங்கள் முன் நல்லதொரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். என்னை அவரிடம் செல்ல விடுங்கள் என்று கூறினார். அவர்கள் அவருக்கு அனுமதியளித்தனர்.அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்ததும் நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே அவரிடமும் சொன்னார்கள் அப்போது உர்வா, “முஹம்மதே உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் சரியானதாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முள்ளால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தை வேரோடு அழித்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? போரில் வேறு விதமான முடிவு ஏற்பட்டு குறைஷிகள் வென்று விட்டாலும் (அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விடுவார்கள் அல்லவா?) அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை உங்கள் தோழர்களிடம் பார்க்கிறேன். பல தரப்பட்ட மக்களைப் பார்க்கிறேன் போரில் உங்களை விட்டு விரண்டோடக் கூடிய கோழைத்தனமுடையவர்களாகவே இவர்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் அபூபக்ர்(ரலி) அவரைக் கேவலமாகத் திட்டிவிட்டு “நாங்கள் இறைத்தூதரை விட்டு ஓடி விடுவோமா?” என்று கோபமாகக் கேட்டார்கள் அபூபக்ர்(ரலி) உர்வாவிற்கு உதவி செய்தவராக இருந்ததால் அவர் அபூபக்ருக்கு எதிராக எதையும் கூறவில்லை.
பிறகு உர்வா நபித்தோழர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர்களுடைய நற்பண்புகளையும், கட்டுப்பாட்டையும் சகோதரத்துவத்தையும் பார்த்து விட்டு, தன் சமூகத்தாரிடம் சென்று என் சமுதாயத்தாரே நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன் (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும் பாரசீக மன்னன்) இஸ்ராவிடமும் (அபீஷினிய மன்னன்) நஜ்ஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். ஆனால் முஹம்மதுடைய தோழர்களைப் போன்று நான் பார்த்ததில்லை” என ஸஹாபாக்களைப் பற்றி புகழ்ந்து கூறினார் பிறகு முஹம்மத் உங்கள் முன் உயரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
உர்வாவின் உரையைக் கேட்டவுடன் பனூ கினானா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக குறைஷிகளிடம் அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதியளித்தனர்.
அவர் நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்த போது நபி (ஸல்) இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சார்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாக ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்கள் உடனே அவரிடம் தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் தல்பியா கூறியபடி அவரை வரவேற்றார்கள்.
அவர் இதைக் கண்டவுடன் சுப்ஹானல்லாஹ் இவர்களை இறையில்லத்திற்கு வர விடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். அவர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று “தியாக ஒட்டகங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்க விடப்பட்டு, அவற்றிற்கு அடையாளமிடப்பட்டிருப்பதை
நான் கண்டேன். ஆகவே இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டவுடன் மிக்ரஸ் இப்னு ஹப்ஸ் என்பவன் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக குறைஷிகளிடம் அனுமதி கேட்டான் அவர்கள் அவனுக்கு அனுமதியளித்தனர். அவன் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவன் மிக்ரஸ் என்பவன் இவன் ஒரு கெட்ட மனிதன் என்று கூறினார்கள். அவன் வந்தவுடன் நபி (ஸல்) அவர்களுடன் பேச ஆரம்பித்தான்
சுஹைல் இப்னு அமர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார் அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது” என்று (சஹ்ல் என்றால் சுலபம் என்று பொருள். அதை குறிக்கும் வகையில்) கூறினார்கள் சுஹைல் வந்ததும் ஒரு ஏட்டைக் கொண்டு வாருங்கள் உங்களுக்கும். எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், பேரருளாளனும், கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்ற வாசகத்தை நபியவர்கள் சொன்னார்கள்.
சுஹைல், ரஹ்மான் (கருணையன்புடையோன்) என்றால் என்ன? என்று எனக்குத் தெரியாது ஆயினும் இறைவா! உன் திருப்பெயரால் என்று வழக்கம் போல் எழுதுங்கள் என்று கூறினார். அவர்கள் அல்லாஹ்வை ரஹ்மான் என்று அழைப்பதை மறுத்து வந்தனர்.
அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹிம் (அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று தான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள். பிஸ்மிக்க அல்லாஹும்ம (இறைவா! உன் திருப்பெயரால்) என்றே எழுதுங்கள் என்று சொன்னார்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள். இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று (எழுதுமாறு) சொன்னார்கள்.
உடனே சுஹைல் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வர விடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்றாலும் உங்கள் விருப்பப்படி முஹம்மத் பின் அப்தில்லாஹ் என்றே எழுதுங்கள் என்று கூறி விட்டு அலீ (ரலி) அவர்களிடம் அதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள். நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் என்று கூறினார்கள் ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தமது கையால் அதை அழித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், குறைஷிகளுடன் தகராறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய் விட்டதற்குக் காரணம் அவர்கள் ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதியே ஆகும். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தை எழுதினார்கள்.
1. நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களிடமிருந்து தம்மிடம் மதீனாவிற்கு வருபவரை, அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும் இணை வைப்பவர்கள், தங்களிடம் மக்காவிற்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
இந்நிகழ்ச்சியைப் பார்த்ததும் உமர்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று. நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான்” என்று பதிலளித்தார்கள்.”நாம் சத்திய மார்க்கத்திலும், நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம்! அவ்வாறு தான் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள் அதற்கு உமர் (ரலி) அப்படியானால் இந்த நிபந்தனைகளை ஏற்று, நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? என்று கேட்டார்கள்.
ஒப்பந்தப் பத்திரம் எழுதி முடித்த பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
கூட ஆனால் ஒப்பந்த நிபந்தனையால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸஹாபாக்கள் ஒருவர் எழுந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கட்டளையிட்டும் யாரும் எழுந்திருக்கவில்லை
ஸஹாபாக்களில் யாரும் எழுந்திருக்காத காரணத்தால் தம்முடைய மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையும் தெரிவித்தார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரஸ் அவர்கள் கூறியதாவது ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளு செய்தார்கள் மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? என்று கேட் டார்கள். மக்கள், தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளு செய்வதற் கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்று பதிலளித்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள் உடனே. அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது நாங்கள் அதிலிருந்து (தண்ணி!! அருந்தினோம்; மேலும், உளு செய்தோம். அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் ஹ் கூறுகிறார்கள் நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்டேன் அவர்கள், நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும் நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம் என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3576) ➚
சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கட்டத்தில் இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். குறைஷிகள் அப்பெண்களை ஒப்பந்தப் பிரகாரம் திருப்பி அனுப்ப வேண்டும் என வேண்டினர் அப்போது நபி (ஸல்) அவர்கள். “நாம் ஒப்பந்தத்தில் பெண்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என எழுதவில்லை. ஆண்களை மட்டும் குறிக்கும் வாசகத்தைத் தான் பயன்படுத்தியுள்ளோம்) எனவே திருப்பியனுப்ப முடியாது” என மறுத்து விட்டார்கள்.
சமாதான ஒப்பந்தம் ஸஹாபாக்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் இறைத்தூதரின் செயல்பாடாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொண்டார்கள் அதனால் கிடைக்கவிருக்கும் வெற்றியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்
அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூபஷீர் என்பவர் முஸ்லிமான நிலையில் மதீனாவிற்கு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை மீண்டும் காஃபிர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர் மக்காவிற்குச் செல்லும் வழியில் தன்னை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவரைக் கொன்று விட்டார் மற்றொருவர் தப்பித்து மதீனாவிற்கே வந்தார்.
எனவே அபூபஷீரும், அவரது சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று உத்தரவிடுமாறு அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், “குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகிறாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம். அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்” என்றும் கூறியனுப்பினர். அப்போது தான் அல்லாஹ் மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.
(புகாரி: 1694, 1695, 2698, 2700, 2701, 2711, 2731, 2732, 2958, 3184) ➚ முஸ்லிம் இப்னு ஹிஷாம், தபகாத் இப்னு ஸஅத் மற்றும் ஹதீஸ் நூற்கள், வரலாற்றுச் சான்றுகளிலிருந்து இச்செய்திகள் தொகுக்கப்பட்டன)
இறைவனுடைய பேரொளியான சத்திய மார்க்கத்தை அழித்து விடலாம் என்றெண்ணி எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் தடைச் சட்டங்கள் கொண்டு வந்தாலும் இறைவன் தன்னுடைய பேரொளியைப் பரிபூரணமாக்கியே தீருவான் என்பதற்கு ஹுதைபிய்யா சம்பவம் மிகப் பெரும் சான்றாகத் திகழ்கிறது.
(அல்குர்ஆன்: 9:32-33)➚
நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி ஆம் ஆண்டின் இறுதியில் ரோமாபுரி மன்னருக்கு கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ரோமப்ாேந்திய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அப்போது அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது ஆகவே நபி ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள் அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று (இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது(புகாரி: 65) ➚
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய ஹெராக்ளியஸுக்கு எழுதப்படும் கடிதம்) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்
இறை வாழ்த்துக்குப் பின் விஷயம் என்னவென்றால், இஸ்லாமை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள் ஏற்றுக் கொண்டால் ருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்.
(நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான் நீங்கள் புறக்கணித்தால், உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும் உங்களையே சாரும்.வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். அஃது யாதெனில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது அவனுக்கு எதனையும் எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி தம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள். (புகாரி: 7) ➚
அபூ சுஃப்யான் கூறுகிறார் என்னிடமும் குறைஷி இறைமறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தது. குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர் ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார் நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம் அவரும் அவருடைய ஆட்களும் லியாவில் (பைத்துல் முகத்தஸில்! இருந்தார்கள் ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அரச வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பிறகு தமக்கு அருகில் வந்து அமருமாறு எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார். பிறகு எங்களைப் பார்த்து) தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக் கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். நான் நானே இவர்களில் (அவருக்கு நெருங்கிய உறவினன் என்று பதிலளித்தேன் ஹெராக்ளியஸ் தம் அதிகாரிகளிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள் அவருடன் வந்திருக்கும்! அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று கூறினார்.பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் நான் (முஹம்மதைப் பற்றி இவரிடம் கேட்பேன். இவர் பொய் ஏதும் சொன்னால் உடனே அவர் பொய் சொல்கிறார் என்று கூறிவிட வேண்டும் என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
அவர், அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்ட? என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். அவர் அவருடன் நீங்கள் நடத்திய போர்களின் முடிவுகள் எப்படி அமைந்தன? என்று கேட்டார் எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை அவர் எங்களை வெல்வார் மறுமுறை நாங்கள் அவரை வெல்வோம் என்றேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப் பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்
(அபூகஃப்யானிடம்) கூறிவிடு நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன் அதற்கு நீர், அவர் எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர் என்று பதிலளித்தீர் இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்ததாக நீர் கூறியிருந்தால், தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தைத் தாமும்! அடையவிரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்? என்று கேட்டேன் அதற்கு நீர் அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் எவரையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும், சிலைகளை வணங்க வேண்டாமென்று உங்களுக்குத் தடைவிதிப்பதாகவும், தொழுகை, உண்மை சுயக் கட்டுப்பாடு ஆகிய வற்றைக் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடு வதாகவும் நீர் பதிலளித்தீர் நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார் இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான உங்களிலிருந்து வருவார் என்று நான் நினத்திருக்கவில்லை நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தாய் அவரைச் சந்திக்க பெரு முயற் எடுப்பேன் அவர் அருகில் சன் இருந்திருத்தாய் அவரது கால்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினர்.பிறகு அல்லாஹ்வின் தூதர் அகத்தைக் கொண்டுவருமாறு ஹெராக்ளிஉத்தரவிட்டா அக்கடிதத்தை அவ்தூதர் அவர்கள் திஹ்யா அல்கம்பி அவர்களிடம் கொடுத்து ந ஆட்சியர் ஹாரிஸ் பின் பீஷம் வாயிலாக ஹெராக் யாரிடம் ஒப்படைக்கும் கூறியிருந்தார்கள் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார் (கடித்த்தில் எழுதப்பட்ட வாசகங்கள் முன்னர் கூறப்பட்டுவிட்டது).
எலியா பைத்துல் முகத்த நிர்வாகியும் மன்னர் ஹெராக்ளியானே நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் வளம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார் அவர் அறிவிக்கிறார்
ஹெராக்ளியஸ் பைத்து முகத்தள் வந்த போது மசைஞ்சலத்துடன் காணப்பட்டார் அப்போது அவருடைய அரசவைப் பிரதாளிசிலர் தங்களிலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலை அளிக்கிறது என்று கூறினார்கள்.
இது போன்று நபி (ஸல்) அவர்கள் பல நாட்டு மன்னர்களுக்கும் கடிதங்கள் எழுதினார்கள்.