17) வயது வரம்பு என்ன?
இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும்.
பெண்ணின் திருமண வயது இதுதான் என்று தீர்மானிப்பவர்களின் நிலையும் ஒரு தெளிவில்லாமலேயே உள்ளது.
18 வயதில் தான் பெண் திருமணம் செய்ய வேண்டும் என்றும் சிலரும்
21 வயது பெண்ணின் சரியான திருமண வயது என்று வேறு சிலரும் கூறிக் கொள்கின்றனர்.
இவர்கள் என்ன வரம்பை நிர்ணயித்தாலும் நிச்சயம் அது அனைவருக்குமான பொருத்தமான அளவுகோலாக இருக்கப் போவதில்லை.
இந்தியாவை எடுத்துக் கொள்வோம்.
பல மொழி பேசும் மக்கள் கலந்து வாழும் பன்முக தேசமாக இந்தியா உள்ளது.
ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் தனித்தனியான பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் உண்டு.
உண்ணும் உணவு. உடுத்தும் உடை என அத்தனையிலும் வேறுபாடுகள் உண்டு.
குஜராத் மக்களின் கலாச்சாரமும் தமிழக மக்களின் கலாச்சாரமும் ஒன்றாக இருப்பதில்லை.
தட்பவெட்ப நிலை கூட மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறாக உள்ளது.
ஒரு மாநிலத்தில் வாழும் மக்களிடையே கூட கலாச்சார வேறுபாடுகள் உள்ளது.
எல்லா மக்களின் வாழ்வியல் முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ஒரு மாநிலத்தில் சராசரியாக ஒரு பெண் வயதுக்கு வரும் வயது 13 என்றிருந்தால் இன்னொரு மாநிலத்தில் அதுவே 15 ஆக இருக்கிறது.
கிராமப்புறங்களில் 12 வயதிலும் வயதுக்கு வரும் நிகழ்வுகள் அதிகமாகவே நடைபெறுகின்றன.
வயதுக்கு வருவதென்பது உணவுப் பழக்கவழக்கத்தைச் சார்ந்த அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் குறைவான வயதிலேயே வயதுக்கு வருவதற்கான காரணமாக சோப்பு, பெர்பியூம், டூத்பேஸ்ட் ஆகியவற்றிலுள்ள குறிப்பிட்ட ரசாயனக் கலவைகளும் காரணமாக இருந்துள்ளது என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
https://www.vikatan.com/lifestyle/women/144028-reasons-for-early- puberty-in-girl-child
இவ்வாறு சிறிய வயதில் ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டாலும் அவர்கள் அனைவருக்கும் திருமணத்திற்கான விபரம் உடனே வந்து விடுவதில்லை.
சிலருக்கு திருமண வாழ்வில் இணைவதற்கான தகுதியும் விபரமும் 18 வயதில் வருகின்றது. இன்னும் சிலருக்கு அதற்கு முன்பே 16 17 வயதில் வந்து விடுகிறது.
ஒரு மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ள நம் குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு எப்போது எந்த வயதில் திருமணம் ஆனது என்று மூத்தவர்களிடம் கேட்டு விசாரித்தால் 14 என்றும் 15 என்றும் குறைந்த வயதுகளையே குறிப்பிடுவார்கள்.
எனவே திருமணத்திற்கு இது தான் வயது என்று நாமாக ஒன்றைத் தீர்மானித்து விட்டு, நாம் தீர்மானித்த அளவுகோலில் வராதவற்றையெல்லாம் தவறென்றும் கொச்சையானது என்றும் விமர்சிப்பது சரியான அணுகுமுறையல்ல.
பெண்ணின் திருமண வயது 18 என்று நாமாக நிர்ணயித்து விட்டு 16 வயதில் திருமணம் நடைபெற்ற நிகழ்வைக் குழந்தை திருமணம் என்பதா?
வயதைப் பார்ப்பதை விட இல்லற வாழ்வில் இணைவதற்கான தகுதியையும் விபரத்தையும் தான் பார்க்க வேண்டும்.
12 வயதில் ஒரு பெண் வயதுக்கு வருவது இன்று சராசரியாக இருக்கும் என்றால் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் அவர்களின் உணவு, தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அதை விட குறைந்த வயதில் பெண் வயதுக்கு வருவதும் குறைந்த வயதிலேயே இல்லற வாழ்விற்கு தகுதியாகும் அளவு விபரமான பருவத்தை அறிவதும் அசாத்தியமானதல்ல.
ஆயிஷா அவர்களின் திருமணத்தை இந்தக் கோணத்திலும் அணுக வேண்டும்.
ஆயிஷா அவர்களின் வயது குறைவாகவும் நபிகளாரின் வயது அதிகமாகவும் உள்ளதே என்று கருதுவது தேவையற்றது.
இன்றைய காலத்தில் கூட 10 20 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்த ஜோடிகள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கை விட அவரது மனைவி பிரிகெட்டி 25 வயது மூத்தவர்.
https://www.bbc.com/tamil/india-39961662
அன்றைய கால கட்டத்தில் வயது வித்தியாசம் ஒரு பொருட்டல்ல.
நபிகள் நாயகத்தில் முதல் திருமணம் கதீஜா (ரலி) அவர்களுடன் என்று முன்னர் குறிப்பிட்டோம்.
அப்போது நபிகள் நாயகத்திற்கு வயது 25. கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40.
கதீஜா (ரலி) அவர்களை விட நபிகள் நாயகத்திற்கு 15 வயது குறைவு தான் என்ற போதிலும் இல்லற வாழ்வு மகிழ்ச்சியானதாகவே அமைந்தது.
அதுபோலவே ஆயிஷா அவர்களுக்கும் நாயகத்திற்குமான இல்லற வாழ்வு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. நபிகள்
கதீஜா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் நினைவு கூறும் போதெல்லாம் ‘இப்போதும் அவர்களை நினைவு கூர்கிறீர்களே’ என்று பெண்களுக்கே உரித்தான ரோஷ உணர்வுடன் ஆயிஷா அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது.
பண்டிகை தினங்களில் வீடுகளுக்கு முன்பு வீர விளையாட்டுகள் நடைபெறும் போது வீட்டினுள் இருந்தவாறே நபிகள் நாயகத்தின் தோள் மீது சாய்ந்தவாறே அதிக நேரம் விளையாட்டை கண்டு கழித்துள்ளார்கள்.
இது எந்த அளவு ஆயிஷா அவர்களும் நபிகள் நாயகமும் ஒருவரையொருவர் நேசித்து வாழ்ந்துள்ளார்கள் காட்டுகிறது. என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய நாற்பதாம் வயதில் தான் இறைத்தூதராக ஆக்கப்பட்டார்கள்.
அதன் பிறகே ஓரிறைக் கொள்கை பிரச்சாரத்தையும் நடைமுறை ஒழுக்கங்களையும் மக்களிடையே எடுத்துரைத்தார்கள். அது வரை அவர்கள் சராசரி மனிதராகத்தான் வாழ்ந்தார்கள்.
இறைத்தூதரான பிறகும் கூட. மார்க்கச் சட்டம் அறிவுறுத்தப்படுவதற்கு முன்பு சில விவகாரங்களில் மக்களின் நடைமுறை என்னவோ அதையே நபிகள் நாயகம் பிரதிபலித்தார்கள்.
சிறுவயது ஆயிஷா அவர்களை நபிகள் நாயகம் திருமணம் செய்தது அந்த வகையிலானது தான்.
அதிலும் ஆயிஷா அவர்கள் வேறு யாருமல்ல, தனக்கு மிக நெருக்கமான நண்பரும் துவக்க காலம் முதலே தமது பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருப்பவருமான அபூபக்கர் அவர்களின் மகளாவார்.
தமது நம்பிக்கைக்குரிய நண்பருக்கு தமது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதும் நண்பரின் மகளை திருமணம் செய்து வைக்குமாறு கோருவதும் அன்றைய கால வழக்கமாக இருந்தது.
உமர் (ரலி) அவர்கள், தமது நண்பர்களான அபூபக்ர்(ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரிடம் தம் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் தமது நேசத்திற்குரிய நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை நபிகளார் திருமணம் செய்தார்கள்.
இஸ்லாத்தில் சிறுமியர் திருமணம் பின்னர் தடைசெய்யப்பட்டது.
திருமணம் என்பது கடுமையான ஒப்பந்தம் என்று குர்ஆன் கூறுகிறது.
சாதாரண வியாபார ஒப்பந்தத்தில் இருவர் இணைவதாக இருந்தால் வியாபாரத்தின் நல்லது கெட்டது ஆகியவற்றை இருவரும் அறிந்திருக்க வேண்டும்.
திருமணம் என்பது அதை விட கடுமையான ஒப்பந்தம் எனும் போது, அந்த ஒப்பந்தம் என்ன? அதன் நன்மை தீமை யாது என்பன போன்ற விபரத்தை இருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
இதன் மூலம் திருமண பந்தத்தில் இணைபவர்கள் சிறுவர் சிறுமியர்களாக இருத்தல் கூடாது என்பதை மார்க்கம் உணர்த்தி. சிறுவர் திருமணத்தைத் தடை செய்து விடுகிறது.
இந்தத் தடைக்கு முன்பு சமுதாய பழக்க வழக்கத்தின் படி நபிகள் நாயகம் செய்த திருமணமே ஆயிஷா அவர்களின் திருமணமாகும்.
அன்றைய கால சூழ்நிலையின்படி. சிறுவயதுப் பெண்ணை நபிகள் நாயகம் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவர்களை கொச்சைப்படுத்துவார்கள் எனில் மூன்று தலைமுறைக்கு முந்தைய தங்களின் முன்னோர்களுடைய குறைந்த வயதுத் திருமணங்களையும் இவ்வாறே விமர்சிப்பார்களா?
இவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள் கூட குறைந்த வயதுப் பெண்களைத் திருமணம் செய்வது. வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தற்கால வரலாறு கூறும் உண்மை.
வயது வித்தியாசத்திலும் குறைந்த வயதிலும் திருமணம் செய்யும் அத்தனை பேருக்கும் பெண்ணாசை எனும் முத்திரை குத்துவார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் குறிவைத்து விமர்சிப்பவர்களின் தீய நோக்கத்தை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் சிறுவயது திருமணத்தைக் கண்டுபிடித்து அவ்வாறு திருமணம் செய்த முதல் நபர் என்பது போன்று இவர்கள் விமர்சிப்பது எவ்வகை நியாயம்?
ஐரோப்பிய கலாச்சாரத்திலும் சிறுவயதுத் திருமணம் நடைபெற்றுள்ள வரலாற்று சான்றுகள் உள்ளது.
கடந்த 12ம் நூற்றாண்டில் பிரான்ஸின் சிறுவயது இளவரசியாக இருந்த அனியாஸ் என்பவர் பைஸாந்திய பேரரசர் அலெக்ஸியோஸை தமது சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக வரலாற்றாசிரியர் வில்லியம் ஆப் டையர் கூறுகிறார்.
எனவே அக்கால சமுதாய சூழலின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த திருமணத்திற்குப் பொய் முலாம் பூச முற்படுவது அநீதியானதும் அயோக்கியத்தனமானதுமாகும்.