17) நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான்
நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான்
மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண் ணின் முன்னால் நாகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரக வாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக்காட்டப் படும்.) மேலும் “அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்பு கின்றவரை இதுவே (கப்றே) உனக்கு தங்குமிடம்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
கெட்டவன் கைசேதம் அடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கம் அவனுக்கு முன்னால் காட்டப்படும். அதைப் பார்த்து பார்த்து கைசேதப்பட்டுக் கொண்டே மண்ணறை வாழ்வைக் கழிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் வாசலை இவனுக்கு திறந்து காட்டுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவனை நோக்கி திறக்கப்படும். அப்போது அல்லாஹ்விற்கு நீ கட்டுப்பட்டு நடந்திருந்தால் இது தான் அல்லாஹ் உனக்கு தயார் செய்த இடமாக ஆகியிருக்கும் என்று கூறப்படும். அவன் மேலும் கைசேதத்தையும் நஷ்டத்தையும் உணருவான்.
பிறகு இவனுக்கு நரகத்தின் வாசலை திறந்து விடுங்கள் என்று கூறப்படும். அவனை நோக்கி நாகத்தின் வாயில் திறக்கப் படும். இதுதான் உனது இடம். அல்லாஹ் உனக்கு தயார் செய்த தும் இதுதான் என்று அவனிடம் சொல்லப்படும். அப்போது அவன் மென்மேலும் கைசேதத்தையும் நஷ்டத்தையும் உணருவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : தப்ரானி பாகம்3 பக்கம்:105