17) ஜோதிடனிடம் குறி கேட்பது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى – يَعْنِى ابْنَ سَعِيدٍ – عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பவர். ஸஃபிய்யா
நூல்: (முஸ்லிம்: 4488)
عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِىِّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ. قَالَ « فَلاَ تَأْتِهِمْ . قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ.قَالَ « ذَاكَ شَىْءٌ يَجِدُونَهُ فِى صُدُورِهِمْ فَلاَ يَصُدَّنَّهُمْ .
… நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்றேன். அதற்கு அவர்கள் “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள் “இது, மக்களின் எண்ணமாகும். இது உங்களை’ (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி),
நூல்: (முஸ்லிம்: 935)
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفٍ قَالَ حَدَّثَنَا خِلَاسٌ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه احمد
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
குறிகாரன் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என யாரேனும் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர். அபூஹூரைரா(ரலி) நூல்: (அஹ்மத்: 9171)