17) ஏழைகளுக்கு நலம் நாடுதல்
நூல்கள்:
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்
அடிப்படையான வாழ்வியல் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் அநேகர் உள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையின்றி வாடும் மக்களோ ஏராளம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப் படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 5177)
ஏழைகளைப் புறக்கணித்து விட்டுப் பணக்காரரை மட்டும் விருந்துக்கு அழைப்பதை இன்றைய சமூகம் மரியாதையாகக் கருதுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ அதைப் பாவமாக்கி இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து சமூக நலன் காக்கின்றது.