17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17
17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17
நபிமொழி-81
சகுணம் பார்ப்பது
சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும். சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : அபூதாவுத்-3411
நபிமொழி-82
நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப்படுகிறது?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
- அவளது செல்வத்திற்காக.
- அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
- அவளது அழகிற்காக.
- அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நபிமொழி-83
கடமையான குளிப்பு
நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நினைத்தால் உளுச் செய்வார்கள். சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி
நபிமொழி-84
அரவணைப்போம் அண்டைவீட்டாரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! குழம்பு சமைத்தால் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக. அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள்வீராக” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நபிமொழி-85
உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேண வேண்டிய முறை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு கீழே விழுந்து விட்டால் அதை எடுத்து, சுத்தம் செய்து உண்ணுங்கள் ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம். மேலும் தம் விரல்களை சூப்பாமல் கைக் குட்டையால் கையைத் துடைக்க வேண்டாம். ஏனெனில், எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை அறியமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)