17) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3813)
2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3812)
3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் காணப்படும். (புகாரி)
4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர். (புகாரி: 3329)
5 திருமறைக் குர்ஆனின் (46:10) எனும் வசனம் இவர் விசயசத்தில் இறக்கப்பட்டது. (புகாரி: 3812)
6 இவர் யூதர்களின் மத அறிஞராகவும் இருந்தவர். (புகாரி: 3911)
7 நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த தகவல் கேள்விப்பட்டு நபிகளாரைச் சந்தித்தவர். (புகாரி: 3329)
8 தவ்ராத்தில் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற செய்தியை யூதர்கள் மறைத்த செய்தியை போது வெளிப்படுத்தியவர்.(புகாரி: 3635)
9 இவர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தரும் போது தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சந் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தார். (புகாரி: 3911)
10 இவர் யூதர்களில் பனூ கைனுகா’ கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (புகாரி: 4028)
11 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்வதற் காக தன்னுடை யூத மதத்தில் சொல்லப்பட்ட இறுதி நபிக்குரிய சில கேள்விகளைக் கேட்டவர். (புகாரி: 3911)