16) தயம்மும் சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- தொழுகை நேரம் வந்து, உளூச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், அல்லது தண்ணீர் கிடைத்து அசுத்தமாக இருந்தால், அப்போது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து கொள்ளலாம்.
யாரெல்லாம் செய்யலாம்
- நோயாளிகள்
- பயணிகள்
- கழிவறைக்கு சென்று வந்து, தண்ணீர் கிடைக்காவிட்டால்,
- இல்லறத்தில் ஈடுபட்டு, தண்ணீர் கிடைக்காவிட்டால்,
இவர்கள் தயம்மும் செய்து கொள்ளலாம்.
தயம்மும் எதில் செயலாம்
- மண், களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர்
தயம்மும் செய்யும் முறை
- பிஸ்மில்லாஹ் என்று கூறி, உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும்.
- உளூ செய்து முடித்த பின் ஓதும் துஆ, தயம்மும் க்கும் பொருந்தும்.
- தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம்.
- தொழுது முடிந்த பின்னர் தண்ணீர் கிடைத்தால் தொழுகையைத் திரும்பத் தொழத் தேவையில்லை.
- உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை என்றால், ஒரு தொழுகைக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அடுத்த தொழுகையையும் தொழுது கொள்ளலாம்.
- உளூவை நீக்கும் காரியங்கள் அனைத்தும், தயம்மும் க்கும் பொருந்தும்.