16) கஞ்சத்தனம்
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள அருளையும் யார் மறைக்கிறார்களோ அத்தகைய மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
அநீதத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்! அநீதம் மறுமையில் பெரும் இருளாக அமையும். கஞ்சதனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஏனெனில் முன்வாழ்ந்தவர்களை அழித்துவிட்டது. மேலும் இரத்தத்தை ஓட்டுவது (கொலை செய்வது) மற்றும் அவர்களுக்கு தடைசெய்யப்பட்டதை அனுமதிப்பது ஆகிய காரியங்களை செய்ய தூண்டியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 4675)