16) ஆதாரம் : 15
நூல்கள்:
பைபிள் ஒளியில் இயேசு
பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
(மத்தேயு 6 : 8 – 10)
இயேசு இறைவேதத்தையும், வணக்க வழிபாடுகள் செய்யும் முறைகளையும், இன்னும் பல உபதேசங்களையும் மக்களுக்குப் போதித்தார், கற்றுக் கொடுத்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து இயேசு கடவுளுமல்ல! கடவுளின் மகனுமல்ல! அவர் இறைவனின் தூதர்தான் என்பது பைபிள் வசனங்கள் மூலமாகவே உறுதியாகின்றது