15) ஸஅத் பின் உபாதா (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர். (புகாரி: 1284)

2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள். (புகாரி: 1304)

3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார். (புகாரி: 4141)

4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று கூடினார்கள்.(புகாரி: 3668)

5 இவரின் தாயார் இறந்தபோது அவர் சார்பாக ஏதாவது தர்மம் கொடுக்கலாமா? என்று நபியர்வர்களிடம் கேட்டவர். (புகாரி: 2756)

6 இவருடைய தாயார் இறந்த போது மிஹ்ராப் என்ற தோட்டத்தை தாயாருக்காக வேண்டி தர்மம் செய்தவர். (புகாரி: 2762)

7 மக்கா வெற்றியின் போது அன்சாரிகளின் கொடி இவர்களிடம் இருந்தது. (புகாரி: 4280)

8 அப்துல்லாஹ் பின் உபை மன்னிக்குமாறு நபிகளாரிடம் பரிந்துரை செய்தவர்.(புகாரி: 4566)

9 நபியர்கள் இவருடைய ரோசத்தை கண்ட போது அவரைவிட நான் ரோஷக்காரன்,அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.(புகாரி: 6846)

10 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள். (புகாரி: 7155)

ஸஅத் பின் உபாதா (ரலி)