15) சகோதரனுக்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

ரப்பி-ghக்Fபிர் லீ வலிஅkhகீ வஅdத்khகில்னா Fபீ ரஹ்மதிக், வஅன்த அர்ஹமுர் ராஹிமீன்.

பொருள்: என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்.(அல்குர்ஆன்: 7:151)➚

(நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தைப் பெறுவதற்காக நாற்பது நாட்கள் தூர் மலைக்குச் சென்றுவிட்ட போது அவர்களின் கூட்டத்தினர், நபி மூஸா (அலை) அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களின் பேச்சைக் கேட்காமல் காளைக் கன்றை கடவுளாக எடுத்துக் கொண்டனர். திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள் தன் சகோதரரைக் கடிந்து கொண்டார்கள். அப்போது தனக்காகவும் தன் சகோதரருக்காவும் கேட்ட பிரார்த்தனை)