15) ஐயமும் – தெளிவும்

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என தெளிவாகவே அறிவிக்கின்றன”என்னும் சில ஹதீஸ்கள், மறைவான விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணப்படுகிறதே! முந்தைய நபிமார்களைப் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் மறைவான விஷயம்தானே? இதிலிருந்து நபி (ஸல்) அவர்” களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும்என்று விளங்கலாம் அல்லவா? இதுதான் முதல் ஐயம்.

நாம், நபிமார்கள் மறைவான விசயத்தை அறிவார்களா? என்பதற்கு பதிலளிக்கும் போதே இந்த ஐயத்தை நீக்கியிருக்கிறோம். நபிமார்கள் சில மறைவான விஷயங்களை அல்லாஹ்வின் மூலம் அறிவித்திருக்கிறார்கள் என்றாலும் எல்லா மறைவான விஷயத்தையும் அறிவித்திருக் கிறார்களா? அனைத்தையும் அறிந்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் நாம் குறிப்பிட்டுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு சில மறைவான விஷயங்களை அறிவித்திருப்பதை நாம் மறுக்கவில்லை. எல்லா மறைவான விசயங்களும் அறிந்தவர்கள் என்று கூறுவதையே நாம் மறுக்கிறோம். அதற்குத்தான் குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) தெரியாமலிருந்த ஒரு சில விஷயங்களையும் ஹதீஸ்கள் மூலம் எடுத்துக்காட்டினோம்.

அடுத்து விநோதமான ஒரு வாதம். நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயம் தெரியாது எனக் குறிப்பிடும் வசனங்கள் காஃபிர்களை நோக்கிச் சொல்லச் சொன்னதாகும். முஃமீன்களிடம் குறிப்பிடும்போது மறைவான விஷயம் தெரிந்ததாகத்தான் வருகிறது என்றும் அதற்கு ஆதாரமாக நபித்தோழர்களிடம் நபி (ஸல்) கூறிய ஒரு சில மறைவான விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாதம் அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும்.

சட்டத்தில் வேண்டுமானால் காஃபிருக்கு ஒரு சட்டம், முஃமினுக்கு வேறு சட்டம் என்று உண்டு. ஆனால் தனக்கு இருக்கும் ஆற்றல் காஃபிரிடத்தில் வெளியாக்க முடியாது. முஃமின்களிடத்தில் தான் என்னுடைய ஆற்றல் வெளிப்படுத்த முடியும் என்றால் இது எவ்வளவு பெரிய அபத்தம் ஒரு கால்ரையே என்னால் தூக்கிவிட முடியும் என்று தன் ஆற்றலைப் பற்றி பெருமையாக பேசுபவனிடம் எங்கே தூக்கிக்காட்டு என்று கூறினால் உன்னிடம் காட்டஎன்னால் முடியாது. முஃமின்கள் வந்தால்தான் என் ஆற்றலை வெளி படுத்தமுடியும் என்று கூறினால்எவரும் ஏற்றுக்கொள்வாரா இதைப்போன்றுதான் இவர்களின் வாதம் உள்ளது.

வாதம் சரியில்லை என்றாலும் காஃயிர்களைமுன்னோ க்கிக் சொல்லாமல், நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி, இறைவனுக்கு மட்டுமே மறைவான விஷயங்களையும் அறியமுடியும் என்ற வசனங்களும், ஹதீஸ்களும் காட்ட முடியும். அதை இப்போது பார்ப்போம்.

(நபியே!) இஸ்லாத்தை அவர்கள் தழுவியதால் உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர்.இஸ்லாத்தை நீங்கள் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதவேண்டாம் என்றுழ், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பீர்களானால், ஈமானின் பக்கம் உங்களுக்கு வழி. காட்டியதால் அல்லாஹ்தான் உங்களுக்கு உபகாரம் செய். திருக்கிறான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) என்றும் நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமி யிலும் மலைந்திருப்பவற்றை அறிவான். அல்லாஹ் நீங்கள் செய்ப்வற்றை பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 49:17-18)

இவ்வசனம், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களை முன்னோக்கி, மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல தன்னுடையது என்று கூறுகிறான். காஃபிர்கவை. முன்னோக்கிஇவை சொல்லப்பட்டவை அல்ல என்பதையும் கவனிச்க!

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை. மறைவானதையும் அறிபவன் அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்            (அல்குர்ஆன்:)

இதில் இறைவனின் தனிப்பட்ட தகுதிகளைப்பற்றி குறிப்பிடுகிறது. அத்துடன், மறைவான விசயத்தை அறியும் ஆற்றலையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுவதன்மூலம், இது இறைவனுக்கு மட்டுமே உள்ளது என அறியலாம். இதில் எங்கே முஃமின்களை முன்னிலைப்படுத்தி கூறப்பட்டுள்ளது? எனக்கேட்கலாம். முன்னால் உள்ள 18 வது வசனத்திலிருந்து படித்தால் ஈமான் கொண்டவர் களே! என அழைத்தே கூறப்படுவதை அறியலாம்.

உங்கக்ளச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நய வஞ்சகர்களும் இருக்கிறார்கள். இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலை பெற்று விட்டவர் சளும் இருக்கிறார்கள். (நபியே) அவர்களை நீர் அறிய மாட்டீர் நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில நாம அவர்களை இரு முறை வேதனைசெய்வோம். பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின் பால் தள்ளப் படுவார்கள் (அல்குர்ஆன்: 9:101)

இவ்வசனத்தில் முஃமின்களையும் நபி (ஸல்) அவர். களையும் முன்னிலைப்படுத்தியே பேசும் வசனம் (சில) நயவஞ்சகர்களை நபியால் அறியமுடியாது என அறிவிக்கிறது.
இவ்வேதம் உம்மீது அருளப்படுவதை நீர் எதிர்பார்த். திருக்கவில்லை. எனினும் உம்முடைய பிரப்பிடத்திலிருந்து ஒரு அருளாகவே (உமக்கு அருளப்பட்டுள்ளது) எனவே காஃபிர்களுக்கு உதவியாளராக திண்ணமாக நீர் ஆகவேண்டாம், (அல்குர்ஆன்: 28:86)

(நபியே) இவ்வாறே நாம், நம்முடைய கட்டளையின் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்.(இதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை. எனினும் நாம் அதைஒளிசாக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டு கிறோம். நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையான வழியைக் காண்பிக்கின்றீர்! (அல்குர்ஆன்:)

சிலர் நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தை பருவத்தி. லேயே மறைவான விஷயத்தை அறியும் ஆற்றல் பெற்றிருந்தார்கள் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு மேலே கூறிய வசனங்கள் சரியான மறுப்புரையாகும். தரம், பின்னால் என்ன வேலை செய்ய போகிறோம் என்பதையே அறியமுடியாது என்றால் மற்ற விஷயங்கள் எப்படி அறிந்திருப்பார்கள்? அடுத்து முஃமீன்களை முன்னோக்கி சொன்ன ஹதீஸ் களை இப்போது பார்ப்போம்.

தன் வீட்டின் முன் சண்டையிட்டதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் வெளியில் வந்து நிச்சயமாக நான் ஒரு மனிதன் தான். என்னிடத்தில் வழக்குகள் (தீர்வுக்காக) வருகின்றன. உங்களில் சிலர் சிலரைவிட திறமையாக வாதம் செய்பவராக இருக்கலாம்; அவரை நான் உண்மையாளர் என எண்ணிஅவருக்கு சாதமாக தீர்ப்பு. வழங்கிவிடுவேன். நான் வேறொரு முஸ்லிமுக்குரியதை (எதிரியின் வாதத்திறமையால்) அவருக்கு தீர்ப்பளித்து விட்டால் அது (நரக) நெருப்பின் துண்டாகும். அதை
(நெருப்பை விரும்பியவர்) எடுத்துக்கொள்ளட்டும் அல்லது விட்டு விடட்டும் என நபி (ஸல்) கூறியதாக உம்மு  (ரலி) கூறிய ஹதீஸ் (புகாரி: 696) இடம் பெற்றுள்ளது.

தீர்ப்பு வழங்குவதில்தான் மிகவும் கவனமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இருப்பின் சாதாரண மனிதனைப்போல் வாதத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பளிப்பேன். உண்மை நிலை எனக்கு தெரியாமலும் இருக்க லாம் என்கிறார்கள் . மறைவான விஷயத்தை அறிபவர். ‘ களாக இருந்தால் இந்த கருத்தையே தெரிவித்திருக்கமாட்டார்கள்.

மறுமைநாளில் என்னுடைய தோழர்கள் சிலர்கொண்டு வரப்படுவார்கள். அவர்களை ஹவ்ழை (ஹவ்துல் கவ்ஸர் எனும் த ட எ க த் ைத) விட்டும் திருப்பப்படுவார்கள். அப்போது “அவர்கள் எனது தோழர்கள் இறைவா!’ என நான் கூறுவேன். உனக்குபின் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி உனக்கு தெரியாது. இவர்கள் (நீர் இறந்ததற்கு பிறகு முர்தத்தாக) பழைய மார்க்கத்திற்கே போய்விட்டார்கள என்று அல்லாஹ் கூறுவான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹாரைரா (ரலி) அறிவிக்க புகாரீயில் இடம் பீெற்றுள்ளது.

இந்த ஹதீஸை பார்த்த உடனேயே நபி (ஸல்) அவர் களுக்கு தெரியாத விசயங்கள் இருந்திருக்கின்றனஎன்பதை விளங்கலாம். தன்னுடன் பழகியவர்களின் உண்மைநிலையே என்னவென்று தெரியவில்லை என்றால் மற்றவர்களின் நிலையை (மறைவான விசயத்தை) அறிந்திருப்பார்களா? நபி (ஸல்) மதீனாவிற்குவந்தார்கள். அவர்கள் (மதீனர்
வாசிகள்) பேரீத்த மரத்தில் அயல் மகரந்தச்சேர்க்கைசெய்து கொண்டிருந்ததை பார்த்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள்ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நாங்கள்
(எப்போதும்) இப் படித்தான் செய்வோம் என்றார்கள். இப்படி செய்யாமலிருந்தால் நன்றாக இருக்குமேஎன்றார்கள். அவர்கள் (அயல் மகரந்தச் சேர்க்கையை) விட்டு ” விட்டார்கள். அதனால் (அவ்வருடம் மகசூலில்) குறைவு ஏற்பட்டது.

இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது நான் (உங்களை போன்ற) மனிதனே! உங்களுடைய மார்க்கத்தில் ஏதாவது நான் கட்டளையிட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் சொந்த கருத்திலிருந்து (உலக விதயத்தில்) ஏதாவது ஒன்றை ஏவினால் நிச்சயமாக நான் மனிதனே! (என்னுடைய கருத்திலும் தவறு வரலாம்) என நபி(ஸல்) கூறியதாக ராஃபிஃ இப்னு கதீஜ் (ரளி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில், *உலக விசயத்தில் (என்னைவிட) நீங்களே நன்கு தெரிந்தவர்கள்” என நபி (ஸல்) கூறியதாக காணப்படுகிறது.

மறைவான விசயங்கள் தெரிந்திருந்தால் அயல்மகரந்தச் சேர்க்கையை விடச்சொல்லி தன் தோழர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பார்களா? எல்லா மறைவான விஷயமும்
தெரியும் என்றால், என்னை விட உலக விசயத்தில் நீங்கள் நன்கு தெரிந்தவர்கள் என்றும் கூறியிருப்பார்சளா?நபி (ஸல்) அவர்களுக்கு யூதப்பெண்மணி விஷம் தடவப்பட்ட (அதாவது ஆட்டின் இறைச்சியை) கொண்டு வந்தாள். அதில் (சிறிதளவு) தின்றுவிட்டார்கள். (இது விஷம் தடவப்பட்டது என்று தெரிந்தவுடன்) அப்பெண்மணியை (பிடித்து) கொண்டு வரப்பட்டு, இவளை கொன்று விடலாமா? என்று கேட்கப்பட்டது. கூடாது என்றார்கள் (விஷம் தடவப்பட்டதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டதால்) அவர்களின் வாயின் உட்பகுதியை எப்போதும் அதன் பாதிப்பு இருந்ததை நான் அறிந்திருக்கிறேன் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அலர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி. யில் இடம் பெற்றுள்ளது.

ஸ”னனுத் தாரமியில் நபித் தோழர்களும் சாப்பிட்டதாகவும், அதில் பிஷ்ர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இறந்துவிட்டதாகவும் காணப்படுகிறது.

தனது உயிருக்கே உலைவைக்கும் இந்நேரத்தில் தான் மிக முக்கியமாக தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அது விஷம் தடவப்பட்டுள்ள விசயம் தெரியாமல் சாப்பிட்டு தன் வாழ்நாள் முழுவதும் அதன் வேதனை அனுபவிக்கிறார்கள் மேலும் தன் அன்புத்தோழர் ஒருவரையும் இழந்துவிடுகிறார். கள். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்களுக்கு எல்லா மறைவான விசயங்களும் தெரியாது என்பதை ஆணித்தரமாகவே எடுத்துக்காட்டுகிறது.

மறைவான் விசயத்தின் திறவுகோல்கள் ஐந்து, அதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமுடியாது.
(அந்த ஐந்து விசயங்கள்) நாளை என்ன நடக்கும்என்பதை எவரும் அறிய முடியாது. கற்ப அறையில் என்ன (நிலை) உள்ளது என்பதையும் எவரும் அறிய முடியாது. எந்த ஆத்மாவும் நாளை என்ன செய்வோம் என்பதை அறிய முடியாது. எந்த ஆத்மாவும்(நாம்) எந்தபூமியில் மரணிப்போம் என்பதை அறியமுடியாது மழை எப்போது வரும் என்பதை யும் எவரும் அறிய முடியாது என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஐயத்திற்கிடமின்றிமறைவ ான விஷயங்களை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்பதை அண்ணலார் அவர்களே தெளிவாக்கிவிட்டார்கள் தன் தோழர்களிடம் கூறிய இந்த ஹதீஸையும் காஃபிர்சளுக்கு கூறியது என் பார்களா?

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகத்துயரமான நிகழ்ச்சிஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை நாம் கவனித்தால் நபி(ஸல்) அவர்கள் மறைவான விசயத்தை அறியமுடியாது என அடித்துச் சொல்லாம்.
நபி (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக்) போருக்கு தன் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்துச் சென்றிருந்தார்கள். போர் முடிந்து திரும்ப வரும் போது மதீனாவிற்கு சிறிது தொலைவிற்கு முன்னால் இரவில் முகாமிட்டு தங்கினார்கள்.

காலை பொழுது வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இயற்கை கடனை முடிக்க மிகதூரமான இடத்திற்கு சென்றுவ,
கள். திரும்பியவர்கள் தன் கழுத்தில் அணிந்திருந்த மாலை இல்லாதிருந்ததை கண்டு திரும்பிச் சென்று அ,ை தேடி எடுத்து வந்தரர்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்களும்
அவர்களின் படைகளும் சென்றுவிட்டன.

ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்வதற்குபெட்டி போன்ற அமைப்பில் ஒன்றிருக்கும். அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்து கொள்வார்கள் அதை ஒட்டகத்தின் மீது வைத்து அழைத்துச்செல்வார்கள். இப்போரின்போது ஆயிஷா(ரலி) அவர்கள் சிறுவயதாகவும், சரியாக உணவுகிடைக்காததால் எடைகுறைவாக இருந்தார்கள். இதனால் அந்த பெட்டியை தூக்கி வைக்கும்போது ஆயிஷா (ரலி) , அவர்கள் இல்லை என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது யாரும் இல்லாததைக் கண்ட அவர்கள், தான் இல்லாததை அறிந்து. திரும்பி இங்கே வருவார்கள். என்ற எண்ணத்துடன் அந்த இடத்திலேயே அமர்ந்து விடுகிறார்கள். தூக்கம் அவர்களை மிகைக்க அயர்ந்து விடுகிறார்கள்.

காலை நேரத்தில் அவ்வழியாக ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ாலி) அவர்கள் வருகிறார்கள், கருப்பு நிறத்தில் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவ்ர்கள் இவர் ஆயிஷா (ரலி) அவர்கள் என்பதை அறிந்து இன்னர்லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன் என சப்தமிட்டு கூறிவிடுகிறார்கள். சப்தத்தை கேட்டு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விழித்து தன் முகத்தை மூடிக்கொள் – கிறார்கள்.பிறகு அவர்களின் ஒட்டகத்தில் ஏறிக்கொள்கிறார்கள். ஸஃப்வான் (ரலி) அவர்கள் நடந்து அழைத்துச்சென்று நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடும்போது, நான் ஸஃப்வான் (ரலி) அவர்களிடமிருந்து இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதனையும் செவியுறவில்லை என்கிறார்கள். இது தான் நடந்தி நிகழ்ச்சி. (புகாரீ)

இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அப்துல்லாஹ் இப்னு s இப்னு னலுல் என்பவன், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், ஸஃப்வான் (ரலி) அவர்களுக்கும் தொடர்புண்டு *ன அவதூறு கூறி களங்கம் சுமத்தினான். அவதூறு ஊர் முழுவதும் தீ போல் பரவியது. இதையறித்த அண்ணலார் அவர்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள். –

இப்படி சொல்லப்பட்ட களங்கத்தை விட்டும் தன் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என்பதை அவர்களால் உறுதியாக அறியமுடியவில்லை. அவர்களும் சந்தேகத்தில் தான் இருந்தார்கள் என்பதற்கு அவர்களின் நடவடிக்கைகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

போரிலிருந்து திரும்பியதும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அப்போது நபி (ουδώ) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை சரியாக கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது நான் சுகவீனம் அடைந்தால் மிக அன்பாக விசாரிப்பார்கள்.ஆனால்(அவதூறு பரவியபோது) எப்படி இருக்கிறாய் என்று மட்டும் கேட்டுவிட்டு திரும்பி விட்டார்கள் (புகாரீ)

மேலும் இந்த களங்கத்தின் எதிரொலியாக தன் மனைவியை விட்டு பிரிந்துவிடலாமா? என்று உஸாமா இப்னு ஜைத் (ரலி), அலி (ரலி) போன்றவர்களிடத்தில் ஆலோசனையும் கேட்டுள்ளார்கள் (புகாரீ)

இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல மனம் புண்பட்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், நீ தூய்மையனவளாக இருந்தால் அல்லாஹ் உம்முடைய களங்கத்தை துடைப்பான். நீ தவறாக நடந்திருந்தால், உன் தவறை ஒப்புக்கொண்டு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேள்! அடியான் பாவத்தைஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு தேடினால்அல்லாஹ் மன்னிப்பான் எனக் கூறுகிறார்கள். இதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் கண்ணிரையே பதிலாக அளிக்கிறார்கள். ( )

இக்களங்கத்தின் காரணமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல இரவுகள் தொடர்ந்து அழுதுள்ளார்கள் மேலும் நபி (ஸல்) அவர்களுடிைய குடும்பத்தார்களும் ഖഖ് வரும் வரை (சுமார் ஒரு மாதம்) வெளியே போகாமல் இருந்திருக்கிறார்கள். (புகாரீ)

தன் மனைவி களங்கமற்றவள் என்ற உண்மை தெரிந்ை திருந்தால்மேல்கூறப்பட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களா? கவலையடைந்திருப்பார்களா? இதுவே நபி (ஸல் அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதற்கு போதுமான சான்றில்லையா?

அறிவுச்சுடரான, இஸ்லாமிய சட்டங்களில்பெரும்பான் மையான சட்டங்களை ஹதீஸ் வாயிலாக அறிவித்த பல ஆண்சஹாபாக்களே அவர்களின் அறிவை புகழ்ந்துரைத்த அண்ணலாரின் அன்பு மனைவியான ஆயிஷா (ரலி) அவர்  நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தரியாது என ஆதாரங்களுடன் கூறுவதை பாருங்கள்.

நான் ஆயிஷா (ரளி) அவர்களின் (அருகே) சாய்ந்த வனாக அமர்ந்திருந்தேன். அப்போது அபூ ஆயிஷாவே! மூன்று விசயத்தில் (ஏதாவது) ஒன்றை கூறினால் அவா அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார் என கூறினார்கள். அவைகள் என்ன என்று நான் கேட்டேன் யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தன் ரப்பைபார்த்தார்கள் என்று கூறுவாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார்கள் எனக் கூறினார்கள்

அப்போது சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து, முஃமின்களின் அன்னையே!என் (சொல்லை) கவனியுங்கள். அவசரப்படாதீர்கள்! அவனைதெளி வான அடிவானத்தில் அவர்கண்டார் (அல்குர் ஆன்) மற்றொரு முறையும் அவனை அவர் உறுதியாக கண்டார் (அல்குர்ஆன்) என்று அல்லாஹ் கூறவில்லையா? எனக் கேட்டேன். அதற்கு, இந்தஉம்மத்தில் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட முதல் ஆள் நான் தான் (அவர் கண்டார் என்பது) ஜீப்ரீல் (அலை) அவர்களைத்தான் (அல்லாஹ்வை அல்ல) நான் அவர்களை எந்த அமைப்பில் படைக்கப்பட்டார்களோ அதே அமைப்பில், வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்  பெரியதோற்றத்துடன் வானத்திலிருந்து இறங்கியதை இரண்டு முறை கண்டுள்ளேன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

பார்வைகள் அவனை அடையமுடியாது. அவன்பார்வை களை அடைகிறான். அவன் நுட்பமானவன் தெளிவான ஞானமுடையவன் (6 :103) என அல்லாஹ் கூறுவதை நீர் கேட்கவில்லையா அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீ மூலமோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் அடிப்படையில் வஹீயை அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை.

நிச்சயமாக அவன் உயர்ந்தவன், ஞானமுடையவன் (42:51) என்று அல்லாஹ் கூறுவதை நீ கேட்கவில்லையா எனக் ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் ஏதாவது ஒன்றை மறைத்துவிட்டார்கள் எனக் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார். ஏனெனில், தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடும், (இவ்வாறு) செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றிய வராக மாட்டீர் (5 : 67) என அல்லாஹ் கூறுகிறான் என்கிறார்கள்.

நாளை நடப்பதை அவர்கள் அறிவிப்பார்கள் எனக் கூறினால் அவர் அல்லாஹ் மீது பெரும் பொய்யை கூறியவராவார். ஏனெனில் அல்லாஹ்வை தவிர வானம், பூமியில் உள்ள எவரும் மறைவான விஷயங்களை அறியமுடியாது என (நபியே) நீர் கூறும் (27 : 65) என அல்லாஹ் கூறு. கிறான் எனக் குறிப்பிட்டார்கள் என்று மஸ்ரூக் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லியில்இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு மறைவான விசயத்தை அறியும் ஆற்றல் உண்டு எனக் கூறினால் 27 : 65வது வசனத்திற்கு முரணாவதுடன் அல்லாஹ்பொய் சொல்லி விட்டான் என்ற பெரும் குற்றத்தை சுமத்தியவர்களாவோம் என அழகான முறையில் அன்னை ஆயிஷா (ரலி) தெளிவுபடுத்துகிறார்கள்.
எனவே மறைவான ஞானம் என்பது இறைவனை தவிர வேறு எவருக்கு மில்லை. அவன் அறியத்தந்தாலொழிய வேறு எவரும் அறியமுடியாது என்ற கொள்கையில் உறுதிபுடன் இருப்போமாக!