15) உஹது மற்றும் அஹ்சாப் யுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வுகள்

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

பிஃரு மஊனா சம்பவம்

மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களின் மீது எந்த அளவிற்கு பகைமையும் குரோதமும் கொண்டிருந்தார் என்பதற்கு பிஃரு மஊனா சம்பவம் ஒரு சான்றாகும். யூதர்கள் வஞ்சக வலை விரித்து முஸ்லிம்களில் 11 பேரை அநியாயமாக கொலை செய்தனர். நபியவர்கள் யூதர்களுடன் போர் தொடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்தகவான் உலப்பா பர் விஹ்யா ஆகிய குலத்தார் சிலர் வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர் மேலும், தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபி அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர் நபி ஸல்) அவர்கள் அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள் அவர்களை நாங்கள் காரிகள் குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஒதுவோர்; என்று அழைத்து வந்தோம் அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள் இரவு நேரத்தில் தொழுவார்கள் அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர் இறுதியில் மிரு மாணா என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர் உடனே நபி (ஸல) அவர்கள் ஒரு மாதம் முழுவதும் ரிஅல், தகவான் பலூர் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள் (கொல்லப்பட்ட அந்த எழுபது பேரைக் குறித்து அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம் நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும் அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான். நாங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள் என்பதே அந்த வசனம் பின்னர், இந்த வசனத்தை ஒதுவது இறைவனாலேயே ரத்து செய்யப்பட்டு விட்டது.(புகாரி: 3064)

பனூ நளீர் கோத்திரத்தாருடன் போர்

மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் த ல் அவர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் குரோதமும் பகைமையும் கொண்டிருந்தனர் என்பதை நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அந்த யூதர்களில் ஒரு பிரிவினர்தான் பர் னீர் பிரிவினர் ஆவர்
பனூ நளீர் குல யூதர்களுடன் நபி (ஸல்) அவர்கள் போரிட்டதற்கான காரணத்தை இமாம் புகாரி அவர்கள் தம்முடைய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
பனூ ஆமிர் குலத்தாரில் கொலையுண்ட இருவருக்கான உயிரீட்டுத்தொகை தொடர் பாக பனூ நளிர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (எதிராக அவர்களை கொலைசெய்வதற்கு) வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டினர் புகாரி)
பனூ நளீர் குலத்து யூதர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது போர்தொடுத்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் அக்குலத்தாரை நாடு கடத்தினார்கள்.(புகாரி: 4028)

நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரை முற்றுகை இட்ட போது அவர்களின் பேரித்தம் மரங்களை அழிக்குமாறும் கட்டளை பிறப்பித்தார்கள்.
இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயலாளர் களுமான பனூ நளிர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை(போர்க் கால நடவடிக்கையாக எரித்து விட்டார்கள். இன்னும் (சிலவற்றை வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும்) இறைவசனம் அருளப்பட்டது.
(புகாரி: 4031)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் பனூ நளிர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும் இன்னும் பல மரங்களை வெட்டியும் விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத் தான் அல் புவைரா என்று கூறுவர் இதைக் குறிப்பிட்டுத் தான் ஹஸ்ஸான் பின் சாபித் ரலி) அவர்கள். புவைராவின் தெருப்பு பரவிக் கொண்டிருக்க அதை அணைத் திட எதுவும் செய்ய முடியாமல் இய லாமையுடன்) பார்த்துக் கொண்டிருப் பது பலூ லுஅய் குவத்து குறைஷித் தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது என்று பரிகாசம் செய்து கவிதை பாடுகின்றார்கள்.(புகாரி: 4326)

பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும் அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் தங்கள் குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை ஆகவே அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான ஆயத்தப் பொருள்கள் வாங்க ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள். (புகாரி: 2904)

அல்அஹ்சாப் என்ற அகழ் யுத்தம்

அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும்.
பனூ நளிர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறையூர் என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர்
முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள் மற்றும் பல்வேறு குலத்தினரை ஒன்று திரட்டுவதில் யூதர்கள் வெற்றி
கண்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு குலத்தினரும் பெரும்படை திரட்டி வந்ததினால் இப்போருக்கு அல் அஹ்சாப் கூட்டுப் படை என்ற பெயர் வந்தது.
இப்பெரும் படை முஸ்லிம்களின் மீது போர்தொடுக்க மதீனாவை நோக்கி வந்தது பெரும்படை மதீனாவைத் தாக்க வருகின்ற செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள் மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள் பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் இதற்கு அகழ் யுத்தம்’ என்றும் பெயர் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை முன்வைத்தவர்கள் ஸல்மான் ஃபார்ஸி ஏழி) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள் நபியவர்கள் முஸ்லிங்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம் நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!
என்று பாடியபடி கூறினார்கள் நூல் (புகாரி: 4098)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள் அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமைனழியற்கள் இல்லை அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், இறைவா நிலையான வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி என்று பாடிய வண்ணம் கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம் நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம்
என்று (பாடிய படி கூறினார்கள். நூல்:(புகாரி: 2834)

பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அகழ்ப் போரின் போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள். மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன் மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்துப் படிந்திருந்தது அப்போது அவர்கள் இவ்வாறு யாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்
(இறைவா) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைத்திருக்க மாட்டோம். தருமம் செய்திருக்கவும் மாட்டோம்: தொழுதிருக்கவும் மாட் டோம் நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும் போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக இவர்கள் குறைஷிகள்! எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.(புகாரி: 2837)

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் கறுகறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.இதைப் பற்றி அளஸ் ஏழி) கூறுகிறார்கள். (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும் அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்ற மடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்
(புகாரி: 4100)

அபூ தல்ஹா (ரலி) அறிவிக்கிறார்கள் எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம் நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள் நூல் (திர்மிதி: 2293)
மேலும் பல அற்புதங்களும் அகழ் யுத்தத்தின் போது நடந்தது.

ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண் டிருந்தோம் அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது என்று கூறினோம் அதற்கு நபி (ஸல்) அவர்கள். நான் இறங்கிப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தார்கள் அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது (ஈஏனெனில் நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (எபல்) அவர்கள் குத்தா (ண்ஸ்ரீஹஷ் எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.

மற்றொரு அற்புதமும் நடந்தது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் எலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(போருக்காக அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன் உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து நபி பைவ் அவர்களின் வயிறு மிகவும் மூட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா! என்று கேட்டேன் உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள் அதில் ஒரு ஸாவு அளவு வாற் கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது.

அதை நான் அறுத்தேன் என மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள் நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் அரைத்து) முடித்து விட்டான் மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியி-ட்டேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். நான் புறப்படும் போது என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம் உணவு கொஞ்சம் தானிருக்கிறது என்று கூறிவிடுங்கள் என்று சொன்னாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு’ அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம் எனவே தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு வாருங்கள் என்று அழைத்தேன் அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் ரலி- அவர்களிடம், நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன் நபி ஸல் அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று என்னைக் கடிந்து கொண்டாள் உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள் நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், என் மனைவியை நோக்கி, ரொட்டி சுடுபவன் ஒருத்தியை (உதவிக்கு) அழை அவள் என்னோடு ரொட்டி சுடட்டும் உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்)
ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது மேலும் எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது (புகாரி: 4102)

எதிரிப் படைகள் மதீனாவை அடைவதற்கு முன்பாகவே அகழ் தோண்டும் பணியை முஸ்லிம்கள் முடித்து விட்டனர். முஸ்லிம்கள் இந்தக் கூட்டுப் படையைக் கண்ட போது அவர்களின் இறைநம்பிக்கை அதிகரித்து அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை. இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்ட போது “இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்” என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை
(அல்குர்ஆன்: 33:22)➚

ஆனால் முனாஃபிக்கீன்கள் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்” என்று நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்.
(அல்குர்ஆன்: 33:12)➚

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர் ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர் களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக நானும் (இதுவரை அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள் பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம் அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளு செய்தார்கள் நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள் அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள் (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்)
(புகாரி: 596)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரலி) கூறுகிறார்கள்.
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அல்லாஹ் (எதிரிகளுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகையான அஸர் தொழுகை; யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி: 2931)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது. இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-லேயே (அவருக்குக் கூடார மொன்றை அமைத்தார்கள். (புகாரி: 4122)
இந்நிலையில் மதீனாவில் முஸ்லிம்களுக்கு மிக அருகில் இருந்த பனூ குறைழா குலத்து யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக உதவி செய்து கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக நபியர்வகளுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முற்பட்டனர் முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது எதிர் திசையிலோ மிகப் பெரிய படை அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது.

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்” என்றும் எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன” என்று முனாஃபிக்கீன்கள் கூறினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர் என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்! யஸ்ரிப் (மதீனாவாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது எனவே திரும்பிச் செல்லுங்க!’ என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்) பாதுகாப்பானவையாக இருந்தும் “எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன” எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.
(அல்குர்ஆன்: 33:12-13)➚

இந்த இக்கட்டான நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) அஹ்ஸாப்’ போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்
(புகாரி: 7489)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலை ஏற்று எதிரிப்படைகளை நிலைகுலையச் செய்தான் அவர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. அது மிகவும் கடுமையான குளிர்காலமாகவும் இருந்தது இதனால் எதிரிப்படையினர் மிகவும் பலவீனமடைந்தனர். எனவே அவர்கள் மக்காவை நோக்கித் திரும்ப ஆயத்தமாகினர்
அல்லாஹ் தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான் எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான் நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது.
எதிரிப் படைகள் வெளியேறிய பின் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர் அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய போது இப்போது (போர் புரிவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்: (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது. நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாள் கேட்டேன்.
(புகாரி: 4110)

பனூ குரைளா போர்

பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5ல் அஹ்சாப் யுத்தத்தை தொடர்ந்து நடைபெற்ற யுத்தம் ஆகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மனித உருவில்) வந்து, நீங்கள் ஆயுதங்க ளைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(இப்போது) எங்கே?” என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் பனூ குறைழா குலத்தார் (உடைய வசிப்பிடம்) நோக்கி சைகை செய்தார்கள்.(முஸ்லிம்: 3628)

எனவே நபி (ஸல்) அவர்கள் உடனடியாக பனூ குறைழா குலத்தார் வசிப்பிடத்தை நோக்கிச் செல்லுமாறு ஸஹாபாக்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரை முடித்துத் திரும்பிய நாளன்று, “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை உங்களில் எவரும் லுஹ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று எங்களிடம் (கூறி, பனூ குறைழா குலத்தாரை நோக்கி விரைவாகப் புறப்படுமாறு) அறிவித்தார்கள்
அவ்வாறு சென்றவர்கள் (வழியிலேயே அஸ்ர் தொழுகையின் நேரத்தை அடைந்தனர்.) சிலர் (அஸ்ர் தொழுகையின்) நேரம் தவறிவிடுமோ என அஞ்சினர். எனவே, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்திற்கு முன்பே தொழுதுவிட்டனர். வேறுசிலர் தொழுகையின் நேரம் நமக்குத் தவறினாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட இடத்திலேயே தொழுவோம் என்று கூறி (தொழுகையைத் தாமதப்படுத்தினர்.
பின்னர் (இரு பிரிவினர் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவ்விரு பிரிவினரில் எவரையும் அவர்கள் குறை கூற வில்லை.(முஸ்லிம்: 3632)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ப குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று) அவர்களுடன் போரிட்டார்கள். (பல நாட்கள் முற்றுகைக்குப் பின்) பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்யை ஏற்க இறங்கிவந்தனர்.(முஸ்லிம்: 3628)
யூதர்களான பனூ குறைழா குலத்தார் கோட்டையிலிருந்து இறங்கி வந்து சஅத் பின் முஆத் ரவி அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். சஅத் லி) அவர்கள் அப்போது நபி ஸல்) அவர்களுக்கு அருகில் தான் ஓரிடத்தில்) இருந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று (மக்களிடம் கூறினார்கள். த் ரலி அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்து கொண்டார்கள் தபி (ஸல்) அவர்கள் இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்று கொள்ளர் சம்மதித்து (இறங்கி வந்திருக்கிறார்கள் என்று கூறினார்கள் அத ரலி அவர்கள் அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமை கொண்டவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப் பணிக்கின்றேன் என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அரசனின் அல்லாஹ்வின் தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கின்றீர்கள் என்றார்கள்
(புகாரி: 3043)

இவ்வாறு மோசடி மற்று நயவஞ்சகக் குணமுள்ள பனூ குறைழா யூதர்கள் அழிக்கப்பட்டனர்.
இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக குவித்த ராணுவங்களுக்கும் உதவியும் செய்தனர் அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான நேரமாக இருந்தது ஆகவே யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர் எனவே. அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.

ஸஅத் (ரலி) அவர்களின் மரணம்

பனூ குறைழா வினர் விசயத்தில் தீர்ப்பளித்த எப்அத் பின் முஆத் (ரலி) அவர்கள் சில நாட்களில் மரணமடைந்தார்கள் அகழ்ப்போரில் ஏற்பட்ட காயமே அவர்களின் மரணித்திற்கு காரணமாக அமைந்தது
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் ரலில் அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்ற ழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான் அப்போது நபி (ஸல்: அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாச-லேயே அவருக்குக் கூடார மொன்றை அமைத்தார்கள் (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள். இறைவா உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை கஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய்.

இறைவா எங்களுக்கும் குறைஷி களான அவர்களுக்கும் இடையிலான போரை நீ இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதி யிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய் நான் உன் வழியில் போர் புரிவேன் போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம் பீறிட்டது. (அவர்களது கூடாரத் திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போது மக்கள் கூடார வாசிகளே உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறதே இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் ரவி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள் அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக! (புகாரி: 4122)

ஸஅது இப்னு முஆதின் ஜனாஸாவை பிரேதத்தைச் சுமந்து சென்றபோது அது மிக இலேசாக இருந்தது நயவஞ்சகர்கள் என்ன இவரது ஜனாஸா இவ்வளவு இலேசாக உள்ளதே!” என்றனர். அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக வானவர்கள் அதைச் சுமந்து செல்கிறார்கள் என்றார்கள்
அறிவிப்பவர் ஸஃது பின் முஆத் (ரலி) நூல் (திர்மிதி 3784)

இந்தப் போர் ஹிஜ்ரி 5 துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. முற்றுகை மொத்தம் இருபத்தைந்து இரவுகள் நீடித்தது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம் ஜாதுல் மஆது)

அல்லாஹுத் தஆலா அகழ் போர் தொடர்பாகவும், குரைளா போர் தொடர்பாகவும் அஹ்ஸாப் எனும் அத்தியாத்தில் பல வசனங்களை இறக்கினான் அவ்வசனங்களில் இச்சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டு கூறியிருக்கிறான். மேலும் இறைநம்பிக்கையாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் நிலைமைகளையும் முஸ்லிம்களை எதிர்க்க வந்த இராணுவங்கள் தோற்றுப்போனதையும் மோசடி செய்யும் யூதர்களின் நிலைமை என்னவானது என்பதையும் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

அபூ ராஃபிவு கொல்லப்படுதல்

இது துல்ஹஜ் நடைபெற்ற சம்பவமாகும். இவனது பெயர் ஸல்லாம் இப்னு அபுல் ஹூகைக் என்பதாகும்
இவனது புனைப் பெயர் அபூராஃபிவு எனப்படும் யூத இனத்தைச் சேரந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன் இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான் ஃபத்ஹுல்
இவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்தான் குரைளா யூதர்களின் பிரச்சனையை முடித்த பின் அவனைக் கொலை செய்துவிட கஸ்ரஜ் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினர் நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள்.

பராஉ பின் ஆம்பிய ரலி அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள் அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்தி வந்ததுடன், அவர்களுக்கெதிராகப் பகைவர்களுக்கு உதவியும் செய்து வந்தான் அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டை யில் இருந்தான் ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்து விட்டிருந்தது மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது அப்துல்லாஹ் பின் அத்திக் ரலி) அவர்கள் தம் சகாக்களிடம் நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்து வருகிறேன் என்று கூறினார். உடளே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார் பிறகு தமது ஆடையினால் தம்மை மூடிக் கொண்டு இயற்கைக்கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார் (கோட்டை வாசிகளான மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்து விட்டனர் அப்போது காவலன் அல்லாஹ்வின் அடியானே (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்து கொள் நான் வாசலை மூடப் போகிறேன் என்று கூறினான் உடனே நான் உள்ளே நுழைந்து ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டேன் மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடி விட்டான் பிறகு சாவிகளை ஒது கொழுவிகொக்கியில் தொங்கவிட்டான் நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டேன் பிறகு வாசலைத் திறந்தேன்.

அபூராஃபிட விடம் இராக்கதை சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து விடைபெற்றுச்) சென்ற போது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன் (கோட்டையின் ஒவ்வொரு வாசலையும் திறக்கும் போதும் உள்ளிருந்து தான் தாழிட்டுக் கொண்டே சென்றேன் மக்கள் என்னை இனம் கண்டு கொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்று விடும் வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை என்று நான் என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச் சேர்ந்தேன் அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான் அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை.

அப்போது நான், அபூராஃபிஉவே என்று அழைத்தேன் அவன் யார் அது? என்று கேட்டான் குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன் (இருப்பினும், என் நோக்கம் எதையும் நான் நிறைவேற்றி விட்டதாகத் கருதவில்லை அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன் சிறிது நேரம் நாமதித்து மீண்டும் அவளிடம் வந்து அபூராஃபிஉவே இது என்ன சத்தம் என்று அவனுக்கு உதவ வந்தவன் போல் கேட்டேன் அதற்கு அவன் உனது நாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான் என்று கூறினான் உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன் (அப்போதும்! அவனை நான் கொல்ல முடிய) வில்லை.

பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன் அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்து கொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு எனது காலை வைத்தேன். ஆனால் நிலவு காயும் அந்த இரவில் நான் விழுந்து விட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே தன் தலைப்பாகைத் துணியால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை வாசலில் அமர்ந்து கொண்டேன்.

நான் அவனைக் கொன்று விட்டேன் என்று உறுதியாக அறியும் வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து நகர மாட்டேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் பிறகு, அதிகாலையில் சேவல் கூவிய போது மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது நின்று ஹிஜாஸ் வாசிகளின் பிரபல வியாபாரி அபூராஃபிஉ இறந்து விட்டார் என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து விரைவாகச் செல்லுங்கள் அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்று விட்டான் என்று கூறினேன் பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், உனது காலை நீட்டு என்று கூறினார்கள் தான் என் காலை நீட்டினேன் அதில் (தம் கரத்தால்) தடவி விட்டார்கள் எனது கால் குணமடைந்து ஒரு போதும் நோய் காணாதது போல் அது மாறிவிட்டது.(புகாரி: 4039)

ஸுமாமா பின் உஸால் இஸ்லாத்தை தழுவுதல்

எஸுமாமா பின் உஸால் என்பவர் முஸ்லிம்களுக்கு இடையூறாக பலகாரியங்களைச் செய்து கொண்டிருந்தார். எனவே நபியவர்கள் அவர் இருந்த பகுதியை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். இது ஹிஜிரி ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபூரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள் அந்தப் படையினர் பலூ ஹனீபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தார்கள் பள்ளிவாசலின் துண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள் நபி பஸ் அவர்கள் அவரிடம் வந்து உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி நீ என்ன கருதுகிறாய் எசமாமாவே என்று கேட்டார்கள் அவர் நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள் என்னை மன்னித்து எனக்கு, நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்பக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் நீங்கள் செல்வந்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே அவர் மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார் மறு நாள் வந்த போது அவரிடம் ஸுமாமாவே என்ன கருதுகிறாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தங்களிடம் நான் (ஏற்கெனவே கூறியது நான் நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார் அவரை நபியவர்கள் அன்றும் விட்டுவிட்டார்கள் மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது நீ என்ன கருதுகிறாய் ஸுமாமாவே என்று நபி அவர்கள் கேட்டார்கள் அவர் நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார் தபி (ஸல்) அவர்கள் மாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரிந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு பள்ளிவாசலுக்கு வந்து வணக்கத்திற்குரியவன் அல்லஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன் மேலும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்துவிட்டு, முஹம்மதே அல்லாஹ்வின் மீதாணையாக இன்றுவரை உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை ஆனால் இன்று உங்களு டைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக இன்றுவரை உங்கள் மார்க்கத்தைவிட என வெறுப்பும் குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை ஆணல், இன்று மார்க்ங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான வேறெதுவும் இருந்திருக்கவில்லை ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு மேலும் இப்போது மக்காவிற்குச் சென்றும் உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள் அவர் மக்காவிற்குச் சென்றபோது அங்கே ஒருவர் அவரிடம் மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார் அதற்கு எஸுமாமா ரலி அவர்கள் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக நான் மதம் மாறவில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்களுடன் இணைந்து இறைவனுக்கு கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன் அல்லாஹ்வின் மீதாணையாக நபி எப: அவர்கள் அனுமதி தரும்வரை எனது நாடயமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான; உங்களுக்கு வராது என்று சொன்னார்கள்
(புகாரி: 4372)

பனூ லஹ்யான் கிளையினர் முஸ்லிம்களை கொலை செய்தல்

இது ஹிஜிரி ரபீவுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாக வரலாற்றாசிரயர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபூஹுரைரா அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் ஸ்ர் அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக அனுப்பி வைத்தார்கள் உமர் பின் கத்தாபுடைய மகன் ஆஸிமின் தாய்வழிப் பாட்டனார் ஆமே பின் சாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு உஸ்மானுக்கும் மக்காவுக்கும் இடை யிலுள்ள ஹத்து எனுமிடத்திற்கு வந்த போது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த ஹ்யாள் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் அவர்களைப் பிடிப்பதற்காக அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர்.

உடனே, இது யத்ரிபுடைய மதீனாவுடைய பேரீச்சம் பழம் என்று கூறினர். எனவே, அவர்களுடைய கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர் அவர்களை ஆஸிம் (ரவி அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்ட போது உயரமான குன்று போன்ற ஓரிடத்தில் யுகடம் தேடி ஒதுங்கி நின்று கொண்டனர். அவர்களை பர் லஹ்யான் குலத்தினர் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம் நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்துவிடுங்கள் உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அக்கின்றோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம் என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்த வனாக இந்தக் குன்றிலிருந்து கீழே இறங்க மாட்டேன் என்று கூறி விட்டு, இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்கள்மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர் உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள்.

அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களும் மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர் களைக் கட்டினார்கள் (உளவுப் படையில் எஞ்சிய மூவரில் மூன்றாவது மனிதர், இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப் பட்ட) இவர்கள் எனக்கு நல்ல ஒரு பாடமாக அமைந்துள்ளனர் என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச்சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்து விட்டார்கள் பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்று விட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும் குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர் அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குயைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே. (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பறூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர். அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.

குபைப் அவர்களைக் கொல்வதற்காக எங்கள் குடும்பத்தார் ஒன்று கூடிய போது, குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவளை அவர் கையி லெடுத்துக் கொண்டார் அவன் அவரிடம் சென்ற போது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார் உடனே நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படு கின்றாயா? நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறினார் அல்லாஹ் வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒரு போதும் பார்த்ததில்லை அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து பழங்களை எடுத்து உண்டு கொண்டிருக்கக் கண்டேன் அப்போது அவரது கை இரும்புச் சங்கி களால் கட்டப்பட்டு இருந்தது மேலும் அப்போது மக்கா நகரில் பழம் விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.

மேலும் ஹாரிஸின் மகள், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான் என்று கூறி வந்தார்.என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.
அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப் பகுதியிலிருந்து வஹில் எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும்) பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற போது அவர்களிடம் குபைப் அவர்கள் என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள் என்று கூறினார்கள் தொழுது முடித்து பிறகு. நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன் என்று கூறி விட்டு, இறைவா இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு ஒருவர் விடாமல் பழிவாங்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள். மேலும், நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை.

எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தி யைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப் புகளின் மீதுகூட தன் அருள் வளத்தைப் பொழிவான் என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா கொன்றுவிட்டார் அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப் படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று ஆஸிம் பின் ஸாபித் அவர்கள் கொல்லப்பட்ட போது. அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து விட்டான் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும் அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள். குறைஷிக் குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஎஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர் தான் என்று; அவரை அடையாளம் தெரிந்துகொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள் ஏனெனில் ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின் போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்கு (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது ஆகவே அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை. (புகாரி: 3045)

கருவேலை இலை படைப் பிரிவு

இது ஹிஜிரி க்குப் பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வாகும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல், அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை ஒரு புனிதப் போருக்கு, அனுப்பினார்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரலி அவர்கள் எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

ஆகவே நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம் எங்களைக் கடுமையான பசி பீடிக்க கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப்படைப் பிரிவு கருவேல இலைப்படைப் பிரிவு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக அல் அம்பர் எனப்படும் ஒரு வகை மீன் இனப் பிராணியை கரையில் போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம் அதனால் எங்கள் பழைய வலிமையான, உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்து விட்டன அபூ உபைதா ரலி அவர்கள் அந்த பெரிய மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை பூமியில் நட்டு விட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள் அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்புக் கூட்டுக்க்குக் கீழே நடந்து சென்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது
நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம் அதற்கு நபி அவர்கள் அல்லாஹ் (கடலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். அதனால் தவறில்லை! உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள் என்று சொன்னார்கள். உடனே. அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.
நூல் (புகாரி: 4360, 4361, 4362)

பனூ முஸ்தலிக் யுத்தம் (இதனை முரைஸீ யுத்தம் என்றும் குறிப்பிடுவர்)
இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன இக்குழப்பத்தின் இறுதியில் நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டன அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது. முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குடிய நிகழ்ச்சியைப் பற்றி கூறுவோம்.
இப்போர் வரிஜிரி ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் இப்னு இஸ்ஹாக் ஹிஜ்ரி ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்
பனூ முஸ்தலிக் குலத்தினர் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு எதிராக படை திரட்டிச் சென்று தாக்குதல் நடத்தினார்கள். அதில் பலரை கைதிகளாகப் பிடித்தார்கள்.
இந்த யுத்தத்தில்தான் ஜூவைரியா (ரலி) அவர்கள் கைதியாகப் பிடிக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜூவைரியாவை திருமணம் செய்து கொண்டார்கள்.இப்னு உமர் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக எச்சரிக்கையின்றி இருந்த போது அவர்கள் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன அவர்களில் போரிடும் திறன் பெற்ற வர்களைக் கொன்றார்கள். அவர்களுடைய மக்களை போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள். அன்றுதான் ஜுவைரிய்யா ரலி அவர்களைக் கண்டார்கள். (புகாரி: 2541)
நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்(முஸ்லிம்: 3564)
பனூ முஸ்தலிக் குலத்திற்கெதிரான போருக்குச் சென்றோம் அப்போது அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் (சிலர்) எங்களுக்குத் கிடைத்தனர்
(புகாரி: 2542)
நயவஞ்சர்களின் விஷமத்தனம்
இந்த யுத்தத்தின் போது நயவஞ்சகர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பல விஷமத்தனங்களைச் செய்தார்கள். அவர்களில் முக்கியமானவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவனாவான் இவன் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எத்தனையோ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இந்த முனாஃபிக்கீன்கள் விஷயத்தில் சமுதாய நலன் கருதி பொறுமையே மேற்கொண்டார்கள் அதற்கு பின்வரும் சம்பவம் ஒரு சான்றாகும்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யனு முஸ்தலிக் புனிதப் போருக்குச் சென்றோம் நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர் முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்து விட்டார் ஆகவே அந்த அன்சாரி கடுங் கோபம் அடைந்தார் தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, அன்சாரிகளே! என்றழைத்தார்.
முஹாஜிர், முஹாஜிர்களே என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே ஏன்? என்று கேட்டுவிட்டு அவ்விருவரின் விவகாரம் என்ன? என்று கேட்டார்கள். முஹாஜிர் அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்: அவர்கள் இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது என்று சொன்னார்கள்.
நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், நமக்கெதிராக இந்த அகதிகளான முஹாஜிர்கள் நம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதினாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்த வர்களை வெளியேற்றி விடுவார்கள் என்று விஷமமாகச் சொன்னான் (புகாரி: 3518)
இப்போரில் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்ற நயவஞ்சகனின் விஷமத்தனத்தைப் பற்றி ஸைத் ரலி அவர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்
ஸைத் பின் அங்கம் ரலில் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம் அப்போது நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் உணவுப் பற்றாக்குறையால் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது அப்போது நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம் அல்லாஹ் வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள் என்றும். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோராகிய முஹாஜிர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர் என்றும் சொன்னான் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை! அவர்களிடம் தெரிவித்தேன்.
மற்றொரு அறிவிப்பில்
அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன் என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது
(ஆனால்) அப்துல்லாஹ் வையும் அவனுடைய ஆட்களையும் உண்மை யாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்து விசாரித்தார்கள் நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத்தேன்
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள் அவன் வந்தவுடன், அவனிடம் (அது குறித்துக் கேட்டார்கள் தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான் அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார் என்று (என்னைப் பற்றிக் கூறினார்கள் அவர்கள் அப்படிச் சென்னதால் என் உள்ளத்தில் கடுமையான கவலை) ஏற்பட்டது.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள் என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து உன்மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ் நபியே) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது திண்ணமாக நீங்கள் அல்லாஹ் வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர் எனும் 3ஆவது வசனத்தை அருளினான். உடனே எனக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்! அவர்கள் ஆளனுப்பினார்கள். நான் அவர் களிடம் சென்றபோது அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று கூறினார்கள்
அப்போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல் தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
தகவலறிந்த உமர் ரலி) அவர்கள் எழுந்து, என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள் முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள்
(புகாரி: 4903, 4904, 4305)

இந்த நயவஞ்சர்களின் செயல்பாடுகளைப் பற்றி அல்லாஹ் அல்முனாஃபிகூன் என்ற அத்தியாயத்தை அருளினான் அதில் இந்த நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் நபியவர்களுக்குத் தெளிவு படுத்தினான்.
முஹம்மதே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் போது நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்” என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். நயவஞ்சகர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான் அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏகஇறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள் அவர்களே எதிரிகள் எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? “வாருங்கள்! உங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் பாவமன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். மேலும் அகந்தை கொண்டு தடுப்போராக அவர்களைக் காண்பீர்) முஹம்மதே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடாமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமாகும்.

அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் அல்லாஹ்வின் தூதருடன் இருப்போர் (அவரை விட்டும்) விலகாத வரை அவர்களுக்குச் செலவிடாதீர்கள்!” என்று கூறுவோர் அவர்களே வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனினும் நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்” மதீனாவுக்கு நாம் திரும்பினால் அங்குள்ள உயர்ந்தோர் இழிந்தோரை வெளியேற்றுவார்கள்” என்று கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் உரியது. எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 63:1-8)➚

தயம்மும் சட்டம் இறங்குதல்

பனூ முஸ்தலிக் யுத்தத்தில் இருந்து திரும்பும் போதுதான் தயம்மும் சட்டம் அருளப்பட்டது அதற்கான காரணத்தைக் காண்போம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பமுஸ்தலிக் போர்) பயணத்தில் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் மதீனாவிற்கருகிலுள்ள பைதா அல்லது தாத்துல்ஜைஷ் எனுமிடத் தில் வந்து கொண்டு இருந்த போது எனது கழுத்தில் கிடந்த என் சகோதரி அஸ்மாவின் கழுத்தணி அவிழ்ந்து காணமற் போய்விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு முகாமிட்டுத் தங்கினார்கள் அவர்களுடன் பரிவாரத்திலிருந்த) மக்களும் (முகாமிட்டுத் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.

அப்போது மக்கள் என் தந்தை அபூபக்ர் அஸ்எடுத்தீக் (ரலி) அவர்களிடம் சென்று உங்கள் புதல்வி ஆயிஷா செய்த காரியத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் இங்கு தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று (முறையிட்டுக் கூறினர். அப்போது அபூபக்ர் ரலி அவர்கள் (என்னிடம்) வந்தார்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்போது என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி அவர்கள் (என்னைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் பயணத்தை தொடர முடியாமல் தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணி) இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடி மீது தலைவைத்துப் படுத்து இருந்தது தான் என்னை அசையவிடாமல் அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (எஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தண்ணிர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான்
கழுத்தணி துளாவிச் சென்றவர்களில் ஒருவரான) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் (இது குறித்துக் குறிப்பிடுகையில், அபூபக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்) களில் இது (தயம்மும் எனும் சலுகை! முதலாவதாக இல்லை (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள்.
பிறகு நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பிய போது அதற்குக் கீழேயிருந்து (காணாமற் போன அந்தக் கழுத்தணி கிடைத்தது. (புகாரி: 334)