15) ஆதாரம் : 14
17.நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 5 : 17 – 19)
நியாயப் பிரமாணம் என்றால் இறைச் செய்தி ஆகும், தீர்க்க தரிசனங்கள் என்றால் நபிமார்களின் போதனை ஆகும். இயேசு அவர்கள் இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அதை முழுமைப்படுத்துவதற்கே தான் வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். இயேசுவிற்கு முன்னால் பல தூதர்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளனர் என்பதையும் இயேசுவின் வார்த்தைகளாலேயே இவ்வசனம் குறிப்பிடுகிறது. இயேசு இவ்வாறு குறிப்பிட்டதாகத் திருக்குர்ஆனும் எடுத்துரைக்கிறது.
“எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்ட சிலவற்றை உங்களுக்கு அனுமதிப்பதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்.) உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்குக் கட்டுப்படுங்கள். என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே, அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி” (என்றும் கூறினார்.)