16) அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு
பனூ முஸ்தலிக் யுத்தத்தில் இருந்து திரும்பும் வேளையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்து மாலை தொலைந்தது தொடர்பாகவும் அப்போதுதான் தயம்மும் தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன என்பது பற்றியும் நாம் முன்னர் குறிப்பிட்டோம் இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறைப் பரப்பினார்கள். அது பற்றி விரிவான தகவல்களைக் காண்போம்.
அன்னை ஆயிஷாவின் அவதூறு பரப்புவதற்கு தலைமை வகித்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்ற நயவஞ்சகன்தான் இந்த யுத்தத்தில் இவன் செய்த அழிச்சாட்டியங்களைப் பற்றி நாம் மேலே கண்டோம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட! சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.
இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும் நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில் தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.
நான் (சிவிகையிலிருந்து) எழுந்து மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது. என் கழுத்திலிருந்த யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து விழுந்து விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன் அதைத் தேடிக் கொண்டிருந்தது நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது ஆகவே என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர்.
அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள் ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன் அவர்கள் ஒட்டகத்தை (முன்னே அனுப்பி விட்டு நடக்கலானார்கள்.
படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன என் மாலையைப் பெற்றுக் கொண்டேன் பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன் படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன்.
நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஆயிஷா அறிந்த நபித்தோழர் ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர். நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார் ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னாலில் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்: மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்’ என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன்.
பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து. அதன் முன்னங்காலை (தன் காலால் மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம் அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன் ஆவான்.
நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம் அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயற்றுவிடும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள். சலாம் சொல்வார்கள்; பிறகு, நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள், (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில் ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது.
இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்துவிட நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த “மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக நகருக்கு வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது.
நானும் அபூருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம் உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது அப்போது அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய் பத்ருப் போரில் சுலந்துகொண்ட ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது.
நான் என் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டார்கள் நான் என் தாய்தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டேன் அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச் செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியாவே நான் என் தாய்தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம் மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்? என்று கேட்டேன் என் தாயார் என அன்பு மகளே உன் மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதே அல்லாஹ்வின் மீதாணையா சக்களத்திகள் பவரும் இருக்க தன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகு மிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளது சக்களத்திகள் அதிகமாக வதந்திகஸ் போத் தான் செய்வார்கள் அவ்வாறு பேசாமலிருப்பது பெரும்பாலும் குறைவேயாகும் என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன்; இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்? என்று கேட்டேன் அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன்.
காலை தேரம் வந்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை என்னைப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் அவர்களையும் உலமா பின் ஸைத் (ரலி அவர்களையும் அழைத்தார்கள் அப்போது வஹி குற்காலிகமாக நின்று போயிருந்தது
உஸாமா ரவி அவர்களோ தம் உள்ளத்தில் ) அவர்களின் மனைவியர்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள் அல்லாஹ்வின் தூதரே தங்கள் துணைவியரிடம் நவ்வகுணத்தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள் அபின் அ தாலிப் 100 அவர்களோ அல்லாஹ்வின் தூதரே ஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை அவர் ஆயிஷா! அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள் அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே அல்லஹ்வின் தூதர் (எல்) அவர்கள் பணிப் பெண்ணான பரீராவை அழைத்து ‘பரிாவோ நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவது பார்த்திருக்கின்றாயா? என்ன்று கேட்டார்கள் அதற்கு பரிரா 10லி தங்களை சத்தியமார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அ குழைத்து வைத்து மாலை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும் அத்தகைய விபரமறியாத இவையதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.
உடவே அன்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படிதம் தோழர்களிடம் கோரினார்கள் அல்லாஹ்வின் தூதர் மெல் அவர்கள் என் வீட்டார் விஷயத்தில் வதந்தி கிளப்பி எனக்கு மன வேதனை ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் அவதூறு கற்பித்த நயவஞ்சார்கள் ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு கூறியுள்ளனர் ஆணல் அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன் அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் நான் வீட்டிலிருக்கும் போதே தவிர வந்ததில்லை என்று கூறினார்கள்.
உடனே சததி பின் முஆத் அவர்கள் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே அவ்வாஹ்வின் மீதாணையாக அவனைத் தண்டிதங்களுக்கு உதவுகின்றேன் அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவளது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம் எங்கள் சகோதரர்களான கப்ரஜ் குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தால் என்ன செய்யவேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகின்றோம் என்று கூறினார்கள்.
உடனே கபரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா அவர்கள் எழுந்து நின்று அவ்வாஹ்வின்
மீதாணையாய் தீர் பொய்யுரைத்திர் அவளை நீர் கொல்ல மாட்டீர் அது உம்மால் முடியாது என்று கூறினார்.
அதற்கு முன் அவர் நல்ல மனிதராக இருந்தார் ஆயினும் குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத்தூண்டி விட்டது உடனே உமைத் பின் ஹுளைர் அவர்கள் எழுந்து நின்று உபாதா ரலி அவர்களை நோக்கி நீர் நாம் பெய்யுரைத்தீர் அல்லாஹ்வின் மீதாணையாக அவனை நாங்கள் கொன்றே தீருவோம் நீர் ஒரு நயவஞ்சகர். அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் பை அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெனைமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள் பிறகு அவர்களும் மௌனமாகி விட்டார்கள்.
அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன் சிறிதும் உறங்கவில்லை காலையானதும் என நாய் தந்தையர் என அருகேயிருந்தனர் நானோ இரண்டுஇரவுகள் ஒரு பகல் முழுகம் என்ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன் நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய்தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்ட நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள் நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்தூதர் எல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்பாருகே அமர்ந்ததில்லை மேலும் ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வரியாக அருளப்படவில்லை.
பிறகு நபி ஸல் அவர்கள் யாதுலாஹ இல்லல்லாஹ்ஹ் (வனக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று கூறிவிட்டு, ஆயிஷாவே உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உள்ளை குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான் நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பி வீடு ஏனெனில் அடியான தன் பாவத்தை ஒப்புக்கொண்டு மனம் திருந்தி) பால் மன்னிப்பும் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான் என்று சொனைார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸ்ல அவர்கள் தமது பேச்சை முடித்த போது என் கண்ணி முழுவதுமாக நின்று போய் விட்டிருந்தது அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை நான் என தந்தையிடம் அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன அதற்கு என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம் அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன் அதற்கு என் தாயார். அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் நானோ இவையதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிமாக ஒத்தி தெரியாதவளாகவும் இருத்தேன்.
ஆகவே அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன் நான் குற்றமற்றவன் என்று நான் தங்களிடம் சொன்னால் நாள் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான் நீங்கள் அதை நம்பப்போவதில்லை. நான் குற்றமேதும் பரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் நான் சொல்வதை அப்படியே உண்மையென்று எற்று என்னை நம்பிவிடுவீர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கும் உங்களுக்கும் யூகம் அலை; அவர்களின் தந்தையையே நான் உவமையாகக் கருதுகிறேன் அதாவது அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன்.
நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் நான் நான் பாதுகாப்பு கோர வேண்டும். (அல்குர்ஆன்: 12:18)➚ என்று கூறினேன்.
பிறகு அல்லாத நான் குற்றமற்றவன் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன் ஆயிலும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் போகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச்சாதாரணமானவதான் என்று என்னனக் குறித்து நான் கருதிக்கொண்டிருக்க அல்லாஹ்வின் மீதாணையாக துறைவன் என் விஷபத்தில் வஹியையே வேத வெளிப்பாட்டையே திருக்குர்ஆனில் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கவை எதையாவது துக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுத்திருக்கவுயிலலை வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ் அவர்கள் மீழ் திருக்குர்ஆன் வானங்களை அருள ஆரம்பித்து விட்டான் உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில் ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர் மேந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.
அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக ஆயிஷாவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள் என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள் நான் ‘மாட்டேன் அல்லாஹ்வின் மீதாணையாகடம் தன் செல்ல மாட்டேன் அல்லாஹ்வை மட்டுமே புழ்த்து அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன். அப்போது அல்லாஹ். ஆயிஷாவின் மீது அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான் என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 24:11)➚ வசனங்களை அருளியிருந்தான்.
என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாலும் இதை அருளியபோது என் தந்தை) ஆபகர் ரலி அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக என் மகள் ஆயிஷாவைப் பற்றி அவதூறு கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்ஸுக்காக தான் செல்விட மாட்டேன் என்று கூறினார்கள் மிஸ்தஹ் பின் உபாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் ரவி) அவர்கள் செல்விட்டு வந்தார்கள் உடனே அவ்வாஹ் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம் மன்னித்து அவட்சியம் செய்பட்டும் அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்க அல்லாஹ் மன்னிப்ப நிகரற்ற அன்புடையோன் என்னும் இறைவசனத்தை அருளினான் அதன் பிறகு அபூபகர் ரவி அவர்கள் ‘ஆம் அல்லாஹ்வின் மீதானையால அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்வின் அவர்களுக்கு ஏற்கனவே நாம் செய்து வந்த பொருள் உதவியைத் தொடரலானார்கள்.
(திருக்குர்ஆனில் என்னனப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் என் விஷயத்தில் தமது இன்னொரு மனைவியான ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள் ஸென்பே நீ ஆயிஷாவைப் பற்றி என்ன அறிந்திருக்கிறாய்? அவர் விஷயத்தில் என்ன பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் அவற்றின் மீது பழி சுமத்தாமல் நான் பாதுகாத்துக் கொள்வேன் அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று பதிலளித்தார்கள் ஸைனப் ரலி அவர்கள் நாம் எனக்கு அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும் போட்டியாக இருந்தார்கள் ஆயினும் அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய பேனுதலான பனையளித்துப் பாதுகாத்திருந்தான். நூல்: (புகாரி: 2661) ➚
இந்தச் சம்பவம் முஸ்லிம்களுக்கு முனாஃபிக்கீன்களின் நயவஞ்சகத் தனத்தை படம் பிடித்துக் காட்டியது. உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு கொன்றிருந்தால் அந்த நிலையில் ஒரு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும் ஆனால் அல்லாஹ் திருமறை வசனங்களை இறக்கியதின் மூலம் முனாபிக்கீன்களைப் அவர்களுடைய சமுதாயத்திற்கு மத்தியிலேயே மிகவும் கேவலப்படவைத்தான்.
ஹிஜ்ரி 6 ரமழான் மாதத்தில் வாதில் குரா என்ற இடத்திற்கு அபூபக்ர் (ரலி அல்லது அவர்களின் தலைமையின் கீழ் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அங்கு வசிக்கும் ஃபஜாரா கிளையினரின் ஒரு பிரிவினர நபியவர்களைக் கொலை செய்ய வஞ்சகமாகத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததை முன்னிட்டு இப்படையை அனுப்பப்பட்டது.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது
நாங்கள் ப ஃபஸாரா குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம் 3 எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்
எங்களுக்கும் “ஃபஸாரா குலத்தாரின் நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத் தொலைவு இருந்தபோது, இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்
பின்னர் காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்கு தல் தொடுத்தோம் அப்போது ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள். வேறுசிலரைச் சிறைப்பிடித் தார்கள்.
அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண் களும் குழந்தைகளும் இருந்தனர் அவர்கள் என்னை முந்திக்கொண்டு என்னிடமிருந்து தப்பி மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர். உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத் தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள் அவளது உடலில் தோலினாலான கஷ்உ ஒன்று இருந்தது (கஷ்உ என்பதற்கு விரிப்பு என்று பொருள்) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள் அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள் அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை மதீனாவின் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது ‘சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு” என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள் நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை” என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் ‘சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக உன் தந்தை (உன்னைப் போன்ற பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே நன்றி!” என்று கூறினார்கள். மகனைப் நான் “அல்லாஹ்வின் தூதரே! அவன் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடை யைக்கூட களைந்திருக்கவில்லை” என்று கூறினேன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து மக்காவில் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள். (முஸ்லிம்: 3609) ➚
உம்மு கிர்ஃபா என்ற இப்பெண் ஒரு பெரும் தீயவளாக இருந்தாள். இவன் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக தனது குடும்பத்திலிருந்து முப்பது குதிரை வீரர்களைத் தயார் செய்திருந்தாள் அந்த முப்பது நபர்களும் கொல்லப்பட்டனர். அவளும் உரிய தண்டனையைப் பெற்றாள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயில் மற்றும் உரைனா குலங்களைச் சேர்ந்த சிலர் ஹிஜ்ரி ஆறாமாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தாம் இஸ்லாத்தை ஏற்பதாகத் தெரிவித்தனர் மேலும், அல்லாஹ்வின் நபியே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் நாங்கள் விளைநிலங்கள் உடையவர்கள் அல்லர் என்று கூறி மதீனா வின் தட்ப வெப்பம்! தமக்கு ஒத்துக்கொள்ள வில்லை எனக் கருதினர்.
எனவே, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களுடைய உபயோகத்துக்காக வழங்கிடும்படி உத்தரவிட்டார்கள் மேலும் அவர்கள் குணமடைவதற்காக மதீனாவுக்கு வெளியே சென்று (தங்கி) அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர் இறுதியில் அவர்கள் அல்ஹர்ரா எனும் இடத்தின் பக்கம் சென்றபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறைமறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர்.
அத்துடன் நில்லாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த மேய்ப்பாளரைக் கொன்று விட்டு ஒட்டகங்களைத் தம்முடன் ஓட்டிச் சென்றுவிட்டனர் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த விஷயம் எட்டியதும் (கொடுஞ் செயல் புரிந்த! அவர்களைப் பின் தொடர்ந்து அவர்களைத் தேடிப் பிடித்து வர ஆள் அனுப்பினார்கள். அவர்களைத் தண்டிக்கும் படி உத்தரவிட அவ்வாறே (மக்கள்) அவர்களின் கண்களில் சூடிட்டு, அவர் களுடைய கைகால்களைத் துண்டித்து விட்டார்கள் அவர்கள் அல்ஹர்ரா எனும் பாறைகள் நிறைந்த பகுதியின் ஒரு மூலையில் அப்படியே விடப்பட்டு அதே நிலையில் இறந்துபோய்விட்டார்கள்
(புகாரி: 5727) ➚